இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில்
பதவி விலகுவார் என அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றதாக தமிழ் ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே இராஜினாமா
இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவியிலிருந்து தூக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக