siruppiddy

14/11/13

அஞ்சலி செலுத்திய கனேடியப் பிரதிநிதிகள்!


போரில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதிநிதிகள் நேற்று ஆனையிறவுப் பகுதியில் அஞ்சலி செலுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த கனேடிய பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

சந்திப்பின் பின்னர் ஏ – 9 வீதியின் வழியாக கிளிநொச்சி செல்லும் வழியில் ஆனையிறவில் போர்வெற்றி நினைவுத்திடல் அமைந்துள்ள பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றர் உள்ளே சென்று, போரில் உயிரிழந்தவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி

 செலுத்திய பின்னர் கொண்டு வந்திருந்த மலர்வளையத்தினை தம்கூடவே எடுத்துச் சென்றனர்.
இது பாதுகாப்பு வட்டாரங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, கொமன்வெல்த் அமைப்பு

பழ.நெடுமாறன் சுண்டெலி மிரட்டுகிறது யானை பதுங்குகிறது! -



‘கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.

அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார்.

இந்தியாவின் தலைநகரிலேயே இந்த மிரட்டலை விடும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு நாட்டின் தூதர் இது போன்று வரம்பு மீறினால் அவரை வெளியுறவுத்துறைச் செயலாளர் அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இவரின் மிரட்டலுக்கு இந்திய அரசின் சார்பில் யாருமே எத்தகைய கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சின்னஞ்சிறு நாடான இலங்கையின் தூதர், உலகில் இரண்டாவது பெரிய நாடான இந்தியாவை பகிரங்கமாக மிரட்டுகிறார். யார் யாரோ கொஞ்சமும் மதியாமல் எடுத்தெறிந்துப் பேசுகிற நிலை இந்தியாவிற்கு வந்திருப்பது குறித்து அனைவருமே வெட்கப்பட வேண்டும். அதிலும் உலக நாடுகளுக்கு முன்பாக இனப்படுகொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் இராஜபட்சவின் தூதுவர் துணிந்து அச்சுறுத்துகிறார் என்றால், இந்தத் துணிவு அவருக்கு எப்படி வந்தது?

இலங்கையில் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களும் இன அழிப்பு நடவடிக்கைகளும் கடந்த நான்காண்டுகளைக் கடந்து இன்னமும் தொடர்கின்றன. டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும், ஐ.நா. மனித உரிமை ஆணையரும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அறிவித்த பிறகு, உலக அரங்கில் தலை குனிந்து நிற்க வேண்டிய குற்றவாளி தலை நிமிர்ந்து நின்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடும் அளவிற்குத் துணிவு பெற்றிருப்பது எதனால்? யாரால்?

இலங்கையின் தமிழ்ப் பகுதியில் சொல்லொணாக் கொடுமைகள் இன்னமும் தொடர்கின்றன. பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை, போரில் கணவரை இழந்த பெண்களை இராணுவத்தினரின் இச்சையைத் தீர்க்கும் பாலியல் தொழிலாளிகளாக ஆக்குவது, சிங்கள இராணுவத்தினருக்குத் தமிழ்ப் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பது போன்ற இனத்தின் அடையாளத்தையே அழிக்கும் நடவடிக்கைகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன.

2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில், வெற்றி விழா கூட்டத்தில் முழங்கிய இராஜபட்ச, ‘எதிர்காலத்தில் இலங்கையில் இரு இனங்கள்தான் இருக்கும். ஒன்று சிங்கள இனம். மற்றொன்று சிங்களக் கலப்பினம்’ என்று மார்தட்டிக் கூறியதை நடைமுறையில் செயல்படுத்தும் வேலையில் இராணுவம் ஈடுபட்டிருக்கிறது.

படிப்படியாக நடத்தப்பட்டு வருகிற இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்தியா எதுவும் செய்யவில்லை. மாறாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் பிற சர்வதேச அரங்குகளிலும் உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தன்னை ஆதரித்துத் தீர வேண்டிய நிலையிலிருந்து இந்தியா ஒரு போதும் மாற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட இராஜபட்ச தனது தூதுவரை வைத்து இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறார். கரியவாசம் மட்டும் இவ்வாறு பேசியிருக்க முடியாது. அவருக்குப் பின்னணியில் இருந்து இராஜபட்சதான் இவ்வாறு பேச வைத்திருக்க வேண்டும்.

இதற்கு பதில் கூறத் துணிவில்லாமல், ‘கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துக் கொள்ளாவிட்டால் நம்முடைய பொருளாதார, வர்த்தக நலன்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும்` என கற்றுக் குட்டி மத்திய அமைச்சர் ஒருவர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இந்தியாவின் கடந்த கால வரலாறு சிறிதளவு கூடத் தெரியவில்லை.
தென்னாப்பிரிக்கா தனது நிறவெறிக் கொள்கையை கைவிட வேண்டும் அல்லது கொமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும் என்று

கொமன்வெல்த் மாநாட்டில் அன்றைய பிரதமர் நேரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவை கொமன்வெல்த்திலிருந்து வெளியேறவும் வைத்தார். அவரைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா செயல்பட்டார். 1976-ஆம் ஆண்டில் ஐ.நா.வின் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பு

மேற்கொள்ளவும் இராஜதந்திர உறவுகளைத் துண்டித்துக் கொள்ளவும் வேண்டுமென ஐ.நா. பேரவையில் இந்தியாவும் மேலும் பல நாடுகளும் இணைந்து கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலம் தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்களுக்கும், தமிழர்களுக்கும் விடிவு கிடைக்க இந்தியா வழி செய்தது. வெள்ளையர் ஆட்சி மறைந்து அந்நாட்டு மக்களின் உண்மையான ஆட்சி ஏற்பட்டது, வெஞ்சிறையில் 27 ஆண்டு காலம் வாடிய நெல்சன் மண்டேலா அந்நாட்டின் அதிபரானார். ஆனால் நிறவெறியை விட மோசமானதான இனவெறியைக் கடைப்பிடித்து தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இராஜபட்சக்கு துணை நின்று தோள் கொடுக்கும் கைங்கரியத்தை பிரதமர் மன்மோகன் சிங் செய்து வருகிறார்.இத்தகையச் செயல்களின் மூலம்

சீனாவின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிற இராஜபட்சவை இந்தியாவின் பக்கம் ஈர்த்து விட முடியுமென நம்புவது, கொக்கின் தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது போன்றதாகும். இந்த உண்மையை இந்திய அரசு என்றைக்கு உணர்கிறதோ அன்றைக்குதான் கரியவாசம் போன்றவர்கள் இந்தியாவை அவமதிப்பது நிற்கும்.

கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்பது நமது கோரிக்கையல்ல. இனவெறி இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அப்படி நடத்தப்பட்டால் அதன் மூலம் இரண்டாண்டு காலத்திற்கு கொமன்வெல்த் அமைப்பிற்கு இராஜபட்ச தலைமை தாங்கும் நிலை ஏற்படும். சர்வதேச நீதிமன்றத்திற்கு முன்னால் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய ஒருவருக்கு அரசியல் ரீதியாக இது போன்ற உயர்ந்த தகுதி அளிக்கப்படுவது, அவர் மீது

உள்ள குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்கு உதவுவதாகும் என்பதுதான் நமது எதிர்ப்புக்குக் காரணம்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா செயல்பட்டிருக்குமானால் கொமன்வெல்த் அமைப்பில் உள்ள பல நாடுகளும் இந்த கோரிக்கையை ஆதரித்து அதன் விளைவாக மாநாடு வேறொரு நாட்டிற்கு

மாற்றப்பட்டிருக்கும். இராஜபட்சயும் அடங்கி ஒடுங்கியிருப்பார். செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய இந்தியா முன் வராததால் யார் யாரோ மிரட்டுகிற நிலைக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது.

சின்னஞ்சிறிய சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவது போன்ற நிலை ஏற்பட்டிருப்பது உலக அரங்கில் இந்தியாவிற்கு மாறாத தலை குனிவைத் தேடித் தந்து விட்டது. கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளப் போகிறதா அல்லது புறக்கணிக்கப் போகிறதா என்பதோ, பிரதமர் கலந்து கொள்கிறாரா இல்லை வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்கிறாரா என்பதோகூட அல்ல பிரச்சினை.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக இருக்கும் ஒருவர், 120 கோடி மக்கள் தொகை கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை மிரட்டுகிறார், ஆலோசனை கூறுகிறார் என்றால், அதற்காகத் தலைகுனிய வேண்டியவர் பிரதமர் மட்டுமல்ல, அவரை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்கும் இந்தியக் குடிமக்கள் அனைவருமேதான்!

12/11/13

கனடாத் தமிழர் அமைப்புக்களின் பொது அழைப்பு


உலகெல்லாம் குரலெழுப்ப உலகத் தமிழினமே எழுந்து வா! கண்டனப் பேரணிக்கான கனடாத் தமிழர் அமைப்புக்களின் பொது அழைப்பு
நவம்பர் 14, 1976ம் ஆண்டு ஈழத் தமிழர் அறப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை. சமஷ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சியையே வழி நடாத்தி வந்த ஈழத்துக் காந்தியாம் தந்தை செல்வா அவர்களே தனித் தமிழீழ வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பிரகடனம் செய்த நாள்

அதையும் ஜனநாயக ரீதியிலான ஒரு ஆணையாக, அங்கீகாரமாக, முடிந்த முடிவாக வெளியிட்ட நாள் இதே காலப்பகுதியில் தான் இப்போது பொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு கொழும்பில் நடைபெறுகிறது.
இந்தச் சமயத்தில் சனல்-4 ஊடகம் இசைப்பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டமைக்கு சான்றான காணொளியை வெளியிட்டது. ஆம், இது உலகத் தமிழினமே ஒருமித்து உலகெல்லாம் குரலெழுப்ப வேண்டிய தருணம் இதுவரைக்குள், கனடாத் தமிழ்க் கூட்டமைப்புடன் கனேடியத் தமிழக் காங்கிரஸ், கனேடியத் தமிழர் இணையம், கனேடிய நாம் தமிழர் இயக்கம் ஆகியவற்றுடன் கனடா நாடு கடந்த தமிழீழ அரசும் இணைந்துள்ளது.
இந்த இனவழித் தேசிய முடிவை ஏனைய குழுக்களும் ஊர்ச் சங்கங்களும் தமிழர் அமைப்புக்களும் மேற்கொள்ளலாம்.

இது பிரிந்து நின்று நமது குழுக்களின் பலத்தைக் காட்டும் நேரமல்ல முழுத் தமிழக் குலத்தின் எழுச்சியையும் எதிர்ப்பையும் ஒருமித்துக் காட்ட வேண்டிய நேரம். தாயகத்தில் தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் தாங்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட உள்ள நேரத்தில் கனடா வாழத் தமிழர்களாகிய நாங்களும் இணைவோம்.
வெளிநாடெங்கும் புலம்பெயர் தமிழர்களும் அதே சமயத்தில் ஒரே அணியில் திரண்டு முழங்க வேண்டும் என்பது தமிழர் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை.

நிலத்தில் வட கிழக்கெங்கும் நவம்பர் 15 , 16 ம் திகதிகளில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தை கூட்டமைப்பினர் நடாத்துவதற்கு ஆதரவாக புவியின் வடதுருவ நாடாம் கனடா தேசத்தின் முன்னணிக் கட்சிகளின் நிலைப்பாட்டின் வழியில் கனடாவின் அரச தலைமையே பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மகாநாட்டை புறக்கணித்ததை வலுப்படுத்தும் முகமாக ரொறன்ரோவில் இடம் பெறவுள்ள ஜனநாயக ரீதியிலான அறவழி அகிம்சைப் போராட்டத்தில் பங்கெடுப்போம்.

புலிகளின் மறப்போராட்டத்தை முள்ளிவாய்க்காலுள் புதைக்க முயன்றபோது உலகின் நகரெல்லாம் திரண்ட தமிழப் படையே ரொறன்ரோவில், 36 எக்லிங்ரன் அலெனியூ மேற்கில் அமைந்துள்ள தமிழரைக் கொல்ல அன்றே வாளேந்திய சிங்கக்கொடியை கொண்ட கொடிய சிறிலங்கா அரசின் தூரகத்தின் முன்னால், நவம்பர் 14 , 2013 வியாழக்கிழமை மாலை 3 .30 தொடக்கம் 6 30 மணிவரை நடைபெறவுள்ள அறப் போரில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

நில அபகரிப்பு, இன அழிப்பு, கற்பழிப்பு, இனக் கலப்பு, இராணுமயப்படுத்தல், சிங்களமாக்கல், பௌவுத்த திணிப்பு போன்றனவற்றை எதிர்த்தும், காணாமல் போனவர்கள், விசாரணையின்றி அடைத்து வைக்கப்பட்டிருப்போர், அரசியற் கைதிகள் ஆகியோருக்காகவும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் நிகழவுள்ள அறப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் அமைப்புக்களின் சார்பில் அழைக்கிறோம் என கனடிய தமிழர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன..

 

இசைப்பிரியாவின் தாயாரும் சகோதரிகளும் { காணொளி,}



தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான இசைப்பிரியா தொடர்பிலான இசைப்பிரியாவின் தாய் மற்றும் இரு சகோதரிகள், இசைப்பிரியா தொடர்பிலும், இறுதிப் போர் தொடர்பிலும் கண்ணீர்மல்க பகிர்நத அனுபவகள் அக்காட்சியில் ஒளிபரப்பப்ட்டிருக்கின்றது. ஒரு உடன்பிறந்த சதோரரியை இலங்கை இராணுவ வல்லாதிக்கத்தின் மூா்க்கத்துக்கு பலிகொடுத்த அக் குடும்பத்தினரது கண்ணீர்க் கதை இன்று உலகை உலுக்கும் பதிவாக வெளிவந்துள்ளது.
   
தமிழீழ விடுதலை புலிகளின் தொலைக்காட்சி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய இசைப்பிரியா..
சிங்கள காடையர்களின் வன்மத்துக்கு உள்ளாகி மரணமடைந்தார் . அவர் கடைசி நிமிடங்களில் இராணுவத்தினரின் மத்தியில் நாதியற்று நின்ற காட்சி சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை புலம் போட்டு காட்டியுள்ளது . இறுதிக் கட்ட போரில் இசைப்பிரியா போன்று எத்தனையோ பெண்கள் இராணுவத்தின் பிடியில் சிக்குண்டு மடிந்து போயினர் .
அக் காணொளிகளையெல்லாம் வெளியிட நேரிடின் இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை கண்டு சர்வதேசமே கண்ணீர் சிந்த வேண்டிய நிலை வரும் . போரால் சொந்தமிழந்து , சொத்திழந்து நின்றது போக எம் பெண்கள் மானமும் இழந்து நிற்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர் . அவற்றையெல்லாம் பறை சாற்றும் முகமாக வெளிவந்த இசைப்பிரியாவின் காணொளி தீர்வொன்றை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் எம்மவர்கள் விடிவுக்காய் காத்துக்கொண்டுள்ளனர் .
பத்து மாதம் சுமந்த தாய் காணக்கூடாத காட்சியொன்றை இசைப்பிரியாவின் தாய் கண்டுள்ளார் . தன் மகளுக்கு நேர்ந்த கதியை மனதில் உள்ள சோகங்களை சனல் 4 இடம் பகிர்ந்து கொண்டுள்ளார் . மரணத்தின் பின்னும் தன்னினத்தின் விடிவுக்காய் பாடுபடும் வீர மங்கையின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம்..
 

11/11/13

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்!

 
நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைது போலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
ஜோதி தொடர் ஓட்ட பயணம்:
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நேற்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வருகிற 8-ந் தேதி தொடர் ஓட்ட பயணம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சென்றடைய இருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சார்பாக கூடலூரில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் கூடலூர் காந்தி திடலில் நேற்று மதியம் 12 மணிக்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர்கள் சங்கபேரவை மாநில தலைவர் தா.வெள்ளையன் தலைமை தாங்கி ஜோதியை ஏற்றி தொடங்கி வைத்தார். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை பிரகாஷ் வரவேற்றார்.
ஜோதியை எடுத்து கொண்டு ஓட்டம்
பின்னர் ஜோதியை ஏந்தியபடி தா.வெள்ளையன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பினர் தொடர் ஓட்டம் மேற்கொள்வதற்காக பழைய பஸ் நிலையம் வந்தனர். அப்போது தடையை மீறி பயணம் செய்வதாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த சமயத்தில் ஜோதியை எடுத்து கொண்டு மாணவர்கள் கூட்டமைப்பினர் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் மாணவர் கூட்டமைப்பினர் பின்னால் ஓடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக மாணவர்களின் கூட்டமைப்பினரை மடக்கி பிடித்து அவர்களின் கையில் இருந்த ஜோதியை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் மாநில தலைவர் தா.வெள்ளையன், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன்,, இளைஞர் பாசறை பாலசுப்பிரமணியன், மாணவர் பாசறை சூரியதீபன், மாவட்ட செய்தி தொடர்பாளர்

 



 

தொடக்கமே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: -


 முற்றத்தில் சீமான் பேச்சு  தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அமைக்கப்பட்டு உள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழா 2வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பொது அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் திருஞானம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது....

எவ்விதமான தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் ஆற்றில் ஓடுகிற நீரை தடுத்து அதை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த நதியின் குறுக்கே கல்லணையை கட்டி முடித்தான் கரிகாலச்சோழன். 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் போற்றப்படும் தஞ்சையின் வெற்றி சின்னமாக விளங்கி வரும் பெரியகோவிலை கட்டி முடித்து உலகத்திற்கு பெருமையைச் சேர்த்தான் ராஜராஜசோழன்.
இவைகள் எல்லாம் தமிழனின் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கி வருகிறது. நம் இன தமிழ் ஈழ மக்கள் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், சிங்கள வெறியர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். கொத்து, கொத்தாக குண்டுகளை வீசியும், உயிருடன் புதை குழிகளில் தள்ளியும் கொலைச் செய்யப்பட்டனர். இந்த துயர சம்பவங்களை தமிழ் இன உணர்வு உள்ள உலக மக்களுக்கு நினைவூட்டும் வகையில் இங்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முற்றத்தை கடந்த 3 ஆண்டுகளாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையுடனும், நேர்மையுடனும் தமிழ் இன ஈழ மக்களுக்காக வாழ்ந்து வரும் பழ. நெடுமாறன் மனதில் கண்ட கனவுகளை இன்று நினைவுகளாக செதுக்கி இந்த முற்றத்தை இங்கே நிறுவி உள்ளார்.
இது ஈழத்தில் உயிரிழந்த நம் இன மக்களின் துயரத்தின் நினைவு சின்னம். இந்தியாவை ஆள வந்த வெள்ளையர்களை எதிர்த்து நம் எல்லையை விட்டு அடித்து விரட்டினான் பூலித்தேவன்.
வெள்ளையனை எதிர்த்து போராடினான் கட்டப்பொம்மன். அதே வழியில் ஈழத்தில் நம் மக்களை காப்பாற்ற சிங்கள வெறியர்கள் எடுத்த ஆயுதத்தாலேயே எதிர்த்து நம் இன மக்களுக்கு போராடினான் பிரபாகரன்.
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து முத்துகுமார் உள்ளிட்ட 20 பேர்களின் திரு உருவ சிலைகள் சிற்பங்களாக இங்கு செதுக்கப்பட்டு உள்ளது. விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் விடுதலைக்காக உரிமைக்காக போராடியவர்களின் படங்கள் இங்கு இடம் பெற்று உள்ளன.
நாம் அனைவரும் மதம், இனம், சாதி இவைகளை கடந்து அனைவரும் தமிழன் என்ற உணர்வை மனதில் ஏற்படுத்த வேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் எந்த அரசியல் கட்சி தலைவர்கள் வந்து வீரவணக்கம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் இனி வரும் காலங்களில் நாம் வாக்கு அளிக்க வேண்டும்.
50 ஆயிரம் ஆண்டுக்கு மேல் மூத்த வரலாற்று பெருமையைச் சார்ந்தது தமிழ் இனம். ஆனால் நம் தமிழ் இன மக்களுக்கு இலங்கையில் வாழ இடமில்லை.
வரலாற்று சான்றில் எந்த இனத்திற்கும் இது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது கிடையாது. இலங்கையில் தனி தமிழ் ஈழம் உருவாகுவதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும். இந்த நினைவு முற்றத்தில் ஏற்றப்பட்டு உள்ள சுடரை நாம் அனைவரும் அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஈழத்தில் தனி தமிழ் ஈழம் அமைந்தால் தான் நம் இன மக்களை நாம் காப்பாற்ற முடியும். தனி ஈழம் அமைவதுதான் ஒரே தீர்வு. உலக வரலாற்றில் தமிழன் போல் வாழ்ந்தவனும் இல்லை. வீழ்ந்தவனும் இல்லை.
இந்த மண்ணில் வாழும் உரிமை எவனுக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை நமக்கு மட்டும் தான் உண்டு. ஈழத்தில் தனித் தமிழ் ஈழம் விரைவில் உருவாகும். இதற்கு இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒரு தொடக்கமாக இருக்கும். தனித் தமிழ் ஈழ விடுதலைக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று சீமான் பேசினார்.




 
 

10/11/13

உயிர்களைக்கொடுத்துக் காத்த இலட்சிய நெருப்பை


ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க வரலாற்றுப் பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும் என திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி அவர்கள் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு வழங்கிய அணிந்துரையில் தெரிவித்துள்ளார்.
   
ஆஸ்திரேலியாவில் நவம்பர் 2ந் திகதி தமிழருவி மணியன் மற்றும் பர்வீன் சுல்தானா ஆகியோரர் கலந்துகொண்டு வெளியிட்டுவைத்த அரவிந்தகுமாரனின் நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலுக்கு தி.க தலைவர் அவர்கள் வழங்கிய அணிந்துரை வருமாறு:

70 ஆண்டுகள் கடந்த பின்பும் உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் திரைப்படங்களில் இரண்டாம் உலகப் போர் குறித்த படங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உண்டு என்கின்றன தகவல்கள். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாசிப் படையால் இனப்படுகொலைக்கும் பெருந்துயரத்துக்கும் ஆளானவர்கள் யூதர்கள். இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு துறைகளிலும் முக்கிய இடங்களில் அமர்ந்திருக்க கூடியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். திரைப்படம், படைப்பிலக்கியத் துறையிலும், யூதர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தாங்கள் பட்ட துயரத்தினை எடுத்துச்சொல்லும் விதத்திலும், தம் வருங்கால தலைமுறையினருக்கு எச்சரிக்கையும் தருவதோடு, உலகளவில் ஹிட்லர் � நாஜிக்களின் மீதான பார்வை மாறிவிடாமல் இருக்கப் பாடுபடுகிறார்கள். கடந்த நூற்றாண்டிலே தான் முதல் உலகப்போரும் நடந்திருந்தாலும், ஒப்பீட்டளவில் நோக்கும்போது இரண்டாம் உலகப்போர் பற்றிய பதிவுகளும் குறிப்பாக ஹிட்லரின் யூத எதிர்ப்பும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பதிவு செளிணியப்பட்டு நினைவூட்டப்படுவதைக் கூர்ந்து நோக்கின் நமக்கு இவ்வுண்மை புலப்படும். யூதர்களின் இந்தப் பணி பிழையானதல்ல: அவர்கள் மீண்டும் மீண்டும் இதை நினைவூட்டுவதற்கு காரணம் மீண்டும் அது போல் நடந்து விடக்கூடாது என்பதற்காவும், தம் மீதான உலகின் பார்வையைத் தக்கவைத்துக் கொள்ளவுமே!

ஆனால் அத்தகைய நாடு பிடிக்கும் பார்வையெல்லாம் மாறி நாகரீக வாழ்வை அடைந்து வருவதாகச் சொல்லிக்கொண்டு இருக்கும் சூழலிலும் அந்த நூற்றாண்டைக் காட்டிலும் ஒரு மாபெரும் இனப்படுகொலைக்கு இலக்கான இனமாக நம் தமிழினம் இருக்கிறது. எத்தனையோ கண்காணிப்பு முறைகளும், தொலைத் தொடர்பு வசதிகளும் நிறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் உலக நாடுகளை எல்லாம் சாட்சியாக வைத்துக்கொண்டு ஓர் இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கதவுகளையெல்லாம் நெடுகத் தட்டியும் கூட அவற்றின் மனிதநேயக் கதவுகள் மட்டுமல்ல: கண்கள் கூடத் திறக்கப்படாமல் மூடிக்கிடக்கின்றன.

இலங்கை � தம் நாட்டு மக்களையே விமானத்தில் குண்டு வீசிக் கொன்றதையும், உலக நாடுகளின் அமைப்பான அய்க்கிய நாடுகளின் அலுவலகத்தையே வெளியேற்றிவிட்டு கொத்து (க்ளஸ்டர்) குண்டுகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்றதையும், ஹிட்லரின் "கான்சண்ட்ரேசன் கேம்"புக்கு நிகராக ஆடு மாடுகளைப் போல் திறந்தவெளி சிறைச்சாலையில் அவர்களை பசி, பட்டினியுடன் அடைத்ததையும் இந்த உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

முல்லை, மருதம், நெய்தல் என இயற்கையோடு அமைந்த ஈழத்தமிழரின் வாழ்வியலில் �கிபீர்களும், மிக்குகளும், கிளைமோர்களும்� கலந்து சிதறடித்திருக்கின்றன. இவற்றையெல்லாம் தொடர்ந்து நாம் பார்த்தும், கேட்டும் அறிந்தும் நெஞ்சம் கலங்கியிருந்தாலும், இந்நாவலில் படிக்கும் போது நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது.

இந்த நாவலை எழுதியுள்ள ஆசிரியர் அரவிந்தகுமாரன் ஒரு வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். போராட்டத்தை அடுத்த தலைமுறைக்குக் கையளிப்பது என்பது, நாம் கற்றுக்கொண்ட பாடங்களையும் அவர்களுக்குத் தெரிவிப்பதையும் சேர்த்தே! அத்தகையதொரு பாடத்தைத்தான் இந்த நாவலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். சொந்த நிலம், விவசாயம், உறவுகள், வீடு என அத்தனையும் இழந்து, தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழவேண்டிய அவல நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையை எண்ணி எண்ணி நாம் குமுறிக்கொண்டிருக்கிறோம்.

போர்க்களத்தில் � விடுதலை பெற்ற நாட்டுக்கான கனவுகளோடும் எதிர்ப்பார்ப்போடும் ஈழத் தமிழர்கள் செய்த அளப்பறிய தியாகங்களும், வீட்டுக்கொருவரை விடுதலைப் போருக்குத் தந்திட்ட வீரமும் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கின்றன. "செல்லடியும், கிபீரடியும் பெற்றுச் சாவதற்கு, விடுதலைப் போராளியாக இருந்து சாவது நான் செய்யும் கடமை" என்று உணர்வு இளைஞர்களிடம் மேலோங்கி இருந்ததை நாவலாசிரியர் தெளிவாகக் காட்டுகிறார்.

"போராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம், ஆனால் போராடினால் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது� என்ற தம்பி பிரபாகரனின் வாசகம் தமிழர் தம் சிந்தனையில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் களமாடி வென்ற வரலாறு உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒன்றாகும். வீரத்தால் விளையாடி வித்துடலாக ஆன பின்னும், எதிரியின் கைகளில் சிக்கினால் சின்னாபின்னப்படுத்தப்படும் என்று தெரிந்தும், துணிந்து களத்தில் நின்ற வீரத்தைக் கண்டு வியக்காதோர் யார்-? பால் வேறுபாடுகளற்ற சமஉரிமை என்பது மட்டுமல்லாமல், ஒழுக்கத்தை உயிராகப் பேணிய இயக்கம் என்பதுதானே தமிழீழ விடுதலைப் புலிகளின் பெருமை. கொத்துக் குண்டுகளாலும், விமானக் குண்டு வீச்சுகளாலும்,

 கிளைமோர் தாக்குதல்களாலும், துணை இராணுவக் குழுக்களின் கைகாட்டித் தனத்தாலும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட உணவுப் பற்றாக்குறையாலும் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களைக் கொன்று கொண்டிருந்த நிலையிலும், அதற்கு எதிராகக் களத்தில் நின்ற போராளிகளோ சிங்கள மக்களை தம் இலக்காக வைக்கக்கூடாது; அப்படியொரு சிந்தனையே தோன்றக் கூடாது என்ற உயரிய கட்டுப்பாடோடு களத்தில் நின்றனர். அப்படிப்பட்ட அமைப்பைத்தான் சிலர் தீவிரவாதிகள் என்கின்றனர். உலகின் எந்த ஒரு போராட்டத்திற்கும் இத்தகைய வரலாறு இருந்திருக்க வாளிணிப்பில்லை.

ஈழத்தமிழர் வரலாறு என்பது நெடுகவும் ஓர் உரிமைப் போராட்ட வரலாறாகவே இருந்து வருகிறது. அந்தப் போராட்டத்தின் முடிவுகளெல்லாம் துரோகத்தின் விளைவால் எப்படி திசைமாறிப் போயிருக்கின்றன என்பதை நாம் காண முடியும். நம் காலத்தில் நிகழ்ந்த உரிமைப்போர் கூட துரோகத்தால் எத்தகைய பின்னடைவிற்கு உள்ளானது என்பதையும் நாம் கண்கூடாக கண்டோம் என்பது வருத்தத்திற்குரியது. �இன்று எமக்குள்ள

கவலையெல்லாம் தமிழர்களில் விபீஷணர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வருகிறது என்பது தான்� என்று தந்தை பெரியார் கவலைப்பட்டார். அந்தக் கவலை எத்தனை உண்மையானது என்பதை நாம் கண்டு வருகிறோம்.
இராவணனைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட புரட்சிக்கவிஞர் "வஞ்சக விபீடணின் அண்ணனென்றே தம்மை வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும் நெஞ்சகன்� என்று சொல்லுகிறார்! அத்தகையதோர் நிலையில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் தலைவர் தம்பி பிரபாகரனும் இருந்தாரென்று ஒரு காட்சியினூடாக சொல்கிறார் ஆசிரியர். இப்படி எண்ணற்ற செய்திகளை நுணுக்கமாகவும், உண்மையாகவும் நாவலோடு பின்னிப் பிணைத்து உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் அரவிந்த குமாரன்.

இதில் வரும் பரமசிவனும், பார்வதியும், சிவமும், முருகரும், சுந்தரமும், முத்தம்மாவும், கணேசும், ரூபாவும், மலையவனும், வதனியும், பகத்சிங்கும், மங்களாவும் கற்பனைக் கதைமாந்தர்கள் அல்லர். அவர்களின் பெயர்கள் மாறியிருக்கலாம்; ஆனால் அவர்கள் வீரர்களாவும் வீரங்கனைகளாவும், அப்படிப்பட்டோரை உருவாக்கியவர்களாகவும் நம்மோடு வாழ்ந்தவர்களே!
முன்னுரையில் ஆசிரியர் அரவிந்த குமாரனே குறிப்பிட்டிருப்பதால் கதையின் களத்தை நாம் குறிப்பிடுவது பிழையாகாது. இந்த நாவலின் முதல் பாகம் முள்ளிக்குளத்தில் துவங்கி கிளிநொச்சியில் முடிகிறது. நாம்

பெருமையோடும் பெருமகிழ்வோடும் படிக்க � இந்தப் பயணம் வெற்றிப் பயணம் இல்லைதான். தமிழீழத்தின் தலைநகரம் என்று நாமெல்லாம் உச்சிமோந்து கொண்டாடிய கிளிநொச்சியைக் கடந்தும் தமிழர்களின் போராட்டம் பின் நகர்த்தப்பட்டது என்பதையும், அது முள்ளிவாய்க்காலில் முடியும் போது எத்தகைய கோரம் அரங்கேறியது என்பதையும் அறிந்தே தான் இதனைப் படிக்கிறோம். பாடங்கள் நமக்கு இனிப்பாக மட்டும் இருப்பதில்லை; ஆனாலும் மீண்டும் அவற்றைப் படிப்பதன் மூலம் நாம் கற்பது ஏராளம். நம் குறிக்கோளில் உறுதிகொள்ள முடியும்.

ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க இத்தகைய பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம்

உருவாக்கவேண்டும். காலத்தினாற் செய்த பணியாக அரவிந்தகுமாரன் அவர்களின் இந்நாவல் இருக்கிறது. இந்நூலின் உருவாக்கத்தில் உழைத்த தமிழ்லீடர்.காம் இணையதளத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நம் பாராட்டுக்கள் என்பதைவிட நன்றிகள் உரித்தாகும்.
"நீந்திக்கடந்த நெருப்பாறு- இறந்த காலமல்ல; இனி நீந்தவேண்டிய நெடுந் தொலைவு. இந்நெருப்பாற்றில் உண்டு" என்பதை உணர்ந்து பணியாற்றுவோம்.
ஆசிரியரின் அருந்திறன் ஆற்றல் மிகு எழுத்துகள் புண்பட்ட நெஞ்சுகளுக்குச் சற்று மருந்து தடவுவது போல உள்ளது.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலைப்பெற +61 416 985 577 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளுங்கள்.