siruppiddy

21/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரின் மர்ம மரணம்.கிழக்கில்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று பிற்பகல் அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வவுனியா, 
ஆசிக்குளம், கட்டுக்குளம் பகுதியை சேர்ந்த
 நடராசா போதநாயகி என்ற 29 வயதுடைய விரிவுரையாரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட விரிவுரையாளரின் கைப்பை மற்றும் பாதணியும் இன்று (21) காலை சங்கமித்த கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்இன்றுபிற்பகலேவிரிவுரையாளரின்சடலம்கண்டெடுக்கப்பட்டுள்ளது.மரணத்திற்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


20/9/18

ஜனாதிபதி மைத்திரி பொலிஸ் மா அதிபர் பூஜிதவை பதவி விலகுமாறு உத்தரவு

இரு வாரங்களுக்குள் பதவியில் இருந்து விலகுமாறு காவற்துறைமா அதிபர் புஜித் ஜயசுந்தரவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ் அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வெகுவிரைவில்
 பதவி விலகுவார் என அரச உயர்மட்ட வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றதாக தமிழ் ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், இரு வாரங்களுக்குள் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே இராஜினாமா 
இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர் என பொது எதிரணியான மஹிந்த அணியினரால் குற்றச்சாட்டு 
முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொலிஸ்மா அதிபரின் அண்மைக்கால செயற்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரைப் பதவியிலிருந்து தூக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நிலக்கீழ் பிரபாகரனின் இராணுவக் கட்டளைத் தளத்தை பாதுகாக்கும் இராணுவம்

விடுதலைப் புலிகளின் இராணுவ படைப்பிரிவுகளுக்கு பிரபாகரன் நேரடியாக கட்டளை வழங்கிய நிலத்தடி நிர்மாணக் கட்டடம் ஒன்றை இராணுவத்தினர் பாதுகாத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு – வடக்கு பெருங்காட்டுப் பகுதியில் நிலத்திற்கு கீழாக அமைக்கப்பட்ட குறித்த மூன்று மாடி நிலத்தடி நிர்மாணக் கட்டடங்களை 2009ஆம் 
ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.
நிலத்திற்கு கீழ் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட முதலாவது தளத்திற்குள் சிறிய ரக வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த கட்டட நிர்மாணம் சுமார் 30 சதுர அடி நிலத்திற்கு கீழ் இருந்து மூன்று மாடிகளாக 
அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டிற்கு முன்னர் குறித்த மூன்றாவது நில அறையின் கீழ் ஒன்று கூடிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தளபதிகள் இராணுவத்தினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகொண்
டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 2000ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலப் பகுதியில்
 விடுதலைப் புலிகளினால் இந்த நிலத்தடி கட்டடம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், தற்பொழுது குறித்த இடத்தை மக்கள் பார்வையிட தடைவிதித்துள்ள படையினர் இவற்றை வெற்றியின் அடையாளமாக பாதுகாத்து வருவதாக 
தெரிவிக்கப் படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



20/4/18

இராணுவ கட்டளைத் தளபதி ஏ.கே 47 பரிசாக கேட்ட சிறுவனுக்கு பரிசு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தினரிடம் முன்வைத்த நிலையில், குறித்த சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளாக முச்சக்கர வண்டி பொம்மை ஒன்றை 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி
வழங்கியுள்ளார்.முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா நேற்றுப் பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு 681 
ஆவது படைப்பிரிவு
 இராணுவ தளபதியே இவ்வாறு பரிசளித்துள்ளார்.            
அண்மையில் குறித்த முன்பள்ளி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்க சென்ற குறித்த இராணுவத் தளபதி சிறுவர்களிடம் விளையாட்டு பொருட்கள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.இதற்கு 5வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று 
எனக்கு தேவை
என்று பதிலளித்துள்ளார். இராணுவத்தினர் எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவனின் பதில் அமைந்திருந்ததினால், அந்த சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்படி அன்பாக பணித்துள்ளார்.இந்த நிலையில், குறித்த சிறுவன் ஹெலிலிகொப்டர் ஒன்று தேவை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச்சக்கர வண்டி விளையாட்டுப் பொருளினை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளார்.
அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளையாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன்பள்ளி அசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






16/4/18

உருத்திரபுரம் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு=???

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை 
பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து இந்த பதுங்கு குழி முழு அளவில் அகழ்ந்து எடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனவும் 2007 ஆம் ஆண்டு வரையில் பிரபாகரன் இந்த பதுங்கு குழியில் தங்கியிருந்திருக்க வேண்டுமெனவும், புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த பதுங்கு குழியில் பாரியளவில் வானூர்திகளை தாக்கியழிக்கும் ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


7/3/18

அசாதாரண சூழ்நிலையால் வவுனியா, மன்னாரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியா, செட்டிக்குளத்தில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அம்பாறை 
மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.இன 
கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிடும் போது;சகல இனங்களுக்கும் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் சமத்துவமாக வழங்கப்பட வேண்டியதன் அவசியம்
 குறித்தும், சட்டம் ஒழுங்கு பாகுபாடின்றி செயற்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.அத்தோடு
 முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவத்தை உடன் நிறுத்த வேண்டும். இதன் சூத்திரதாரிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த ஜனாதிபதி மற்றும் சட்ட அமைச்சராக திகழும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென
 தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




6/3/18

பிறந்தநாள் இன்று என் அன்பு தம்பி ஹேமாவுக்கு!

* உன் பிறந்தநாள் இன்று, உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... * அம்மாவின் ஆண்பிள்ளைக் கனவுக்கும்,  அப்பாவின் தலைமுறை விருதுக்கும் வளம் தந்த, செல்ல மகன் நீ தானே... * தத்தி தத்தி நீ நடக்க 
 தங்க மயில் ஆடுதுன்னு, சொல்லிவச்ச அண்ணாவுக்கு இன்றும் சொக்கத் தங்கம் நீ தானே... * கொஞ்சிப் பேச ஒரு அக்காவும், சண்டை போட தங்கையும் சமாதானம் பண்ண குடும்பமுமாய், நாம் அடித்த கூத்துக்கள் நெஞ்சுக் கூட்டில்  நினைவுகாளாய் ஏராளம்... * நிலாச் சோறு 
ஊட்டிய நாளும், உன் கைபிடித்து உன்னை நான் பள்ளியனுப்பிய நாளும், அப்பா உனக்கு வாங்கித்தந்த  பொம்மைக்காருக்காய் உன்னிடம் சண்டை போட்ட  நாளும் என, அழகான நம் மழலைக் காலம் மனக்கண்ணில் ஓடுதடா....ஹேமா * காலங்கள் உருண்டோட, கனவுகளும் சேர்ந்தோட, காலத்தின் கோலத்தில்  பொறுப்புகளும்
 சேர்ந்தாட, நெருங்கியே இருந்த நம் அன்பு,  இன்று........... இதுவரை உன் அருகில் இருந்து  வாழ்த்திய நான் வார்த்தையைத் தேடுகிறேன்... * வெயிலும், மழையும் உன்னை நெருங்காம பொத்திப் பொத்தி வளர்த்த நாட்கள், புழுதி நிறைந்த  புழுதி நிறைந்த மண்ணில் புதைத்திடத்தனோ...... * இங்கு பிடி சோறும் நீ இன்றி  உள்ளிறங்க மறுக்கிறது 
* இன்று உன் பிறந்த நாளில்,  கடவுள் உன்னை காத்திடவும், காலம் நம்மை கரைசேர்த்திடவும், உன் அக்கா வெறும் வார்த்தையிலே வாழ்த்துகின்றேன்.. ஏழுப்பிறப்பென்பதில், எனக்கு நம்பிக்கை இல்லை
... அப்படி ஒன்று இருப்பின், என் ஏழுபிறவிக்கும், அன்னையாக, தந்தையாக  தம்பியாக, தங்கையாக  ஹேமா நீ வேண்டும் என்று, இல்லாத கடவுளிடம்  மண்டியிட்டு வேண்டுகின்றேன்.... * உன் பிறந்தநாள்
 அன்று,  உனக்காய் பிறந்த  இந்த கவிதை, என் அன்பையும்,  என் வாழ்த்தையும் உன்னிடம்  கொண்டு சேர்க்கட்டும்.... இன்று உனக்காய் மலர்ந்த இந்த மலர்கள் உன்னிடம் சேர்க்கட்டும்........ வாழிய பல்லாண்டு...... இந்த இணையங்களும் வாழ்த்துகின்றன.
நிலாவரை.கொம் செய்திகள் >>>