siruppiddy

9/12/16

புத்தரும் சிவபெருமானும், சிரிக்கின்றனர்...! விக்கினேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!

கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று வரும் பக்தர்களை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் சென்று
 வருகின்றர்.
அதேபோன்று விகாரைகளில் சிவபெருமான், விநாயகர் போன்ற தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்து கோயில்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வணங்குவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வெளியில் வந்து இரு தரப்பினரும் அடித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் 19 ஆயிரம் சிங்களவர்கள் இருந்தார்கள். அதேபோல் 80 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது போல, பௌத்தர்களுக்கான அதிகாரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



8/12/16

முன்பு மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள்.!

மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கௌதம புத்தர், யேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், நபிகள் நாயகம் என பலரும் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து 
தெரிவித்த அவர்,
சொந்த மதத்தின் புனித தன்மையை நசுக்க கூடிய வகையிலான செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்,
மேலும், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது. மதத்தை வைத்துகொண்டு அரசியல் செய்கின்றவர்கள் வங்குரோந்து அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



16/11/16

புலிகள் வருகையா?இலங்கை – இந்திய கடற்பரப்பில் மோதல்!!

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் முறையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறையை ஒத்ததாக இருந்ததாகவும் சில வேளை புலிகளாக இருக்கலாம் என இந்திய கடற்படை அதிகாரிகளை மேற் கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



10/11/16

மரணஅறிவித்தல் திருமதி.கந்தையா சரஸ்வதி .09.11.16.

யாழ் ஸ்ரீ சோமாஸ்ந்தாosa கனடா  (Sri Somaskanda Osa Canada) சங்கத்தின் உப தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வரும் உயர்திரு . க. கருணாநி. க . ரூபநிதி (மேஜர் விரவேங்கை .அல்பேட். )  ( க .கப்டான் பவான்)    அவர்களின் அன்புத்தாயார் திருமதி . கந்தையா சரஸ்வதி அவர்கள்.09.11.2016.
 இன்று அச்சுவேலி இல் இறைபதமடைந்தார் 
என்ற செய்தியை மிகுந்த அனுதாபத்தோடு அறியத்தருகின்றோம் . அன்னாரின் புதல்வர்கள் அனைவரும் யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்ந்தா கல்லூரியிலேயே கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் .
 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி



6/11/16

காணி, பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு`?

காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் ஒரு குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டன.
மத்திய அரசு, மாகாண சபை மற்றும் பிரதேச நிர்வாகங்கள் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டிய விதம் குறித்து பரிந்துரைகளை செய்ய இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
13 வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி, காணிகளை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்குவது.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை மத்திய அரசாங்கத்தில் இருந்து பிரிப்பது மற்றும் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரங்களை முதலமைச்சருக்கு வழங்குவது.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள நிறுவன பட்டியலை நீக்கி விட்டு, மத்திய அரசு மற்றும் மாகாண சபைகள் இடையில் உரிய முறையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளல்.
மத்திய அரசாங்கத்திடம் உள்ள தேசிய கொள்கை வகுப்பு அதிகாரத்தை நீக்குதல்.
அரசியலமைப்பு நீதிமன்றத்தை ஸ்தாபித்தல். மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் ஏற்படும் அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையை தீக்கவும் தீர்ப்பு வழங்கவும் உயர்நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் இதன் மூலம் இரத்துச் செய்யப்படும்.
அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கான உறுப்பினர் இனவாரி அடிப்படையில் நியமித்தல்.
மாகாண அரசுக்கு சுதந்திரமான நிதி அதிகாரம் மற்றும் வரி அறிவீடு செய்யும் அதிகாரங்களை வழங்குதல்.
மாகாண அரச சேவையின் நிர்வாகத்தை மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருதல். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருதல். மாகாண அரச சேவை ஆணைக்குழு முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
ஆளுநரை நியமிக்க்க முதலமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ளல். மாகாண சபைகள் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில், மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாகாண சபையை கலைக்க அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்.
பொது அரசியல் அதிகாரம் என்ற மக்களின் ஆதிபத்திய அதிகாரத்தை, மத்திய, மாகாண மற்றும் பிரதேச என்று மூன்றாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ளல்.
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் மாகாண துறைகளுக்கான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மற்றும் கொள்கைகளை பரிந்துரைக்கும் அதிகாரம் என்பவற்றை இரத்துச் செய்தல் ஆகிய பரிந்துரைகளை இந்த உப குழுக்கள் முன்வைத்துள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



25/10/16

தமிழீழ புலிகளுக்கு அமெரிக்கா கூட்டத்தில் அங்கீகாரம் !!!

சர்வதேச அளவில் இலங்கை அரசின் தன்மைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொடரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமிழீழம் பயணித்துக்கொண்டிக்கின்றது, ஐ.நா சபை தமிழர் தரப்பை ஏமாற்றி விடுமா? தமிழர் அநீதிக்கான நீதி தவிர்க்கப்பட்டு விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் 
பதிலளித்துள்ளார்.
மேலும், “தமிழ்” ஒரு தேசிய இனம், ஆனால் சுயநிர்ணயத்தை உச்சரிப்பது பிழை என இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டம் கூறுகின்றது. இதற்கு ஏதாவது சட்ட அணுகுதல் எடுக்கப்பட்டுள்ளதா? தற்போது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஒரு சிம்மசொர்ப்பனமாக
 மாறி இருக்கின்றது.
 இதற்கான காரணம் என்ன? இவர்கள் வலுவிழந்து விட்டார்களா? போன்ற வினாக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் விளக்கமளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


20/10/16

இராணுவத்தின் அடாவடி! பரிதாபத்தில் யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இராணுவத்தினர் சித்திரவதைகள் மேற்கொள்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமது மனைவி தமிழக அகதி முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனுஸ்கோடி பொலிஸார் அருள்செல்வனை கைது செய்து க்யூ பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச் சென்றடைந்த இலங்கையரிடம் எவ்வித பயண ஆவணங்களும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>