siruppiddy

31/1/14

வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழர்களுக்காக போராடினார்:

அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியை முன்னெடுத்து வருவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சாதாரண நடவடிக்கைகளில் பொலிஸாருக்கு பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை வட பகுதி மக்கள் விரும்பவில்லை. அதேவேளை வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்த சகலவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அவர் தமிழர்களுக்காக போராடிய ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில்...

29/1/14

முரளிதரன், சந்திரகாந்தனிடம் விசாரணை நடத்த கோரிக்கை

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், காத்தான்குடி நகரசபையில் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது.இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய குறித்த இயக்கத்தின் உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.ஏ.எம்.சபில் நழீமி, ’1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு குருக்கல் மடத்தில் வைத்து...

12/1/14

வட்டுக்கோட்டைப் பகுதியில்படைமுகாமை அகற்றக்கோரி???

பிளாவத்தை படைமுகாமை அகற்றக்கோரி நேற்றிரவு பொதுமக்கள் போராட்டம்!  – பெண்களுடன் சேட்டை விட்டதால் மக்கள் கொதிப்பு. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பிளாவத்தை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றினை நேற்றிரவு மேற்கொண்டனர். குறித்த படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் அருகாகவுள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த பெண்கள்;  மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்றிரவும்...

9/1/14

அமெரிக்கத் தூதரகத்தின் நடவடிக்கைக்கு இராணுவத்தினர் எதிர்ப்பு

அமெரிக்கத் தூதரகத்தின் நடவடிக்கைக்கு இராணுவusaத்தினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அமெரிக்கத் தூதரகம் அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு இரணபாலை புனித அந்தோனியார் மைதானத்தில் இராணவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக அமெரிக்கத் தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளதாகவும், இது முற்றிலும் அடிப்படையற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு...

8/1/14

ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு ???

3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன' என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் உள்ளிட்ட குழுவினரிடம் தான் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு...

7/1/14

இயக்குனர், இசையமைப்பாளர்கள், நடிகர்களால் இது முடியுமா...?

அமெரிக்க ஹிபொப் கலைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி நிகழ்சியொன்றில் பங்கேற்றதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குறித்த ஹிபொப் கலைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி பாடல் பாடியுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபல இசைக் கலைஞர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். தமிழீழ தேசியக் கொடியை ஏந்தி பாடல் பாடியதுடன் விடுதலைப் புலிகள் பற்றி...

5/1/14

பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்:

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் தெரிவித்தார். முல்லிவாய்க்கால் முற்றம் தொடர்பாக 4வது கட்ட நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் விரைவு ரயிலில் புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மீனவர்கள் பிரச்சனை தீரவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மீனவ மக்களுக்கு...