siruppiddy

22/7/14

தானே வான் தாக்குதல்களை நடத்தியதாக, ஒப்புக் கொண்டுள்ளாராம் !

விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட எல்லா வான் தாக்குதல்களையும், அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டதாக, திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழிநடத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2007ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் வான்படையின் இரண்டாம் நிலைத் தலைவராக தம்மை, புலிகளின் தலைவர் பிரபாகரன் நியமித்தார் என விசாரணைகளின் போது குசாந்தன் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்காக விமானங்களைக் கொள்வனவு செய்து பங்களாதேஸ் ஊடாக இந்தோனேசியாவிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து அவற்றை முல்லைத்தீவிற்கு எடுத்துச் சென்ற விபரங்களையும் குசாந்தன் வெளியிட்டுள்ளார். அண்மையில் குசாந்தன் உள்ளிட்ட மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக