siruppiddy

23/12/14

நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர் கடிதங்கள்!

 நவநீதம் பிள்ளைக்கு 15 000 இலங்கை பெற்றோர்  ”இனி எந்த குழந்தையும் மரிக்க கூடாது”-கொழும்பு: இலங்கையில் போரின்போது காணமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு 15,000 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைப் பேரவை முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளைக்கு இக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள்...

20/12/14

குண்டு வெடிப்புச் சம்பவம்! தகவல்களை மறைக்க படையினர் முயற்சி

காங்கேசன்துறை வடமாகாணத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஜனாதிபதி மாளிகையில் தங்கியிருந்த சமயம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைக்க படையினர் முயற்சித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள்...

18/12/14

ஒப்புக்கொள்கிறது அரசாங்கம் தமிழ்மக்களை அரசியல் ரீதியாக வெல்ல முடியவில்லை! –

  தமிழ் மக்களை அரசியல் ரீதியாக எம்மால் வெற்றி கொள்ள முடியவில்லை என வன வள பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தோம் அவர்களை வெற்றி கொண்டோம். ஆனாலும் எம்மால் தமிழ் மக்களின் அரசியலை வெற்றிகொள்ள முடியவில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்...

15/12/14

கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் மூடப்படும்!-

ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது. மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது. இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு...

11/12/14

மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது!

அரசாங்கத்திலிருந்து இதுவரை 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இழந்துள்ளது மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்தின, துமிந்த திசாநாயக்க, நவீன் திசாநாயக்க, பாடலி சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரத்ன தேரோ, சிகல உறுமய தலைவர் சோபித தேரர், குணசேகர, வசந்த, கலாநிதி ரஜிவ விஜேசிங்க, ஹூனைஸ் பாருக், இராஜதுரை, திகாம்பரம், சந்திரசேகரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது எதிரணியில் இணைந்துள்ளார். மேலும்...

8/12/14

ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    தங்கொட்டுவையிலுள்ள ஆதரவாளர் ஒருவரின் வீட்டின் மீதே இன்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்றபட்டுள்ள போதிலும் குறித்த ஆதரவாளர் தன்னுடைய மனைவியின் வீட்டில் இருந்தமையினால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவருகிறது. இங்குஅழுத்தவும் மேலதிக...

5/12/14

எனக்கே சொந்தம் யுத்த வெற்றியின் 75 வீத பங்கு :

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் 75 சதவீதத்தை நானே வெற்றிகொண்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நேற்று இடம்பெற்ற, எதிரணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த யுத்தத்தை நடத்தியதும்  அதில் வெற்றிகொண்டதும் சரத் பொன்சேகாவே. யுத்தத்தின் 75 சதவீதமானவை எங்களது, அரசாங்கத்தின்போதே வெற்றிகொள்ளப்பட்டது. நாம் விட்டுவைத்த 25 சதவீதத்தையே ராஜபக்ஷவின்...

3/12/14

ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும்,...

27/11/14

தமிழரை தலை நிமிரவைத்த காவிய நாயகர்கள் மாவீரர்கள்

அவர்கள் கல்லறைக்கு மலர்கொண்டு செல்லும் நேரம் வருகிறது இதையாரும் மறக்கமாட்டார்கள் அவர்களை நாங்கள் மறந்தால்தானே நினைப்பதற்கு, எமது நெஞ்சமதில் ‌தெய்வமாய் குடி கொண்ட நினைவை மறப்போமா..? எமது வாழ்வுக்காய். எமது இன உயர்வுக்காய். தங்கள் உளிர்களை துச்சமென மதித்து களமாடி. கரும்புலியாகி. தற்கொடைவீரனாகி. தரணியில் எவரும் செய்ய முடியாத தியத்தை செய்த எமது வீரரை எத்தனை தடைகள் பத்தாலும் எதிரியின் அச்சுறுத்தலுக்காய் எமது தெய்வங்களை வணங்காதிருப்போமா ….? இங்குஅழுத்தவும்...

25/11/14

சுவரொட்டிகளுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனின் வீட்டுக்கு அருகில் வைத்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மாவீரர்...

23/11/14

அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஆலோசனை!

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பது தொடர்பாக, அரசாங்க உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆளும்கட்சியின் பெரும்பாலானோர் ஆதரவு வழங்குவதை அடுத்தே இது குறித்து ஆராயப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் கட்சி பொதுச்செயலாளர் பதவி, அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் ஜே.ஆர் ஜெயவர்த்தன, ஜனாதிபதி...

17/11/14

வலி.வடக்கை சுவீகரிக்க இராணுவம் சதி!

எடுபிடிகள் சகிதம் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையினில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமினில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் குடியமர்ந்த காணிகளை பகிர்ந்தளிக்க இலங்கை இராணுவம் முன்னெடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கினை நிரந்தரமாக ஆக்கிரமிக்க ஏதுவாக இடம்பெயர்நத நிலையில் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கு அவர்கள் தற்போது குடியமர்ந்துள்ள காணிகளை பகிர்ந்தளித்து அவர்களது வாய்களை மூடிவிட இலங்கை அரசு முற்பட்டுள்ளது.அவ்வகையில்...

6/11/14

சிங்களமயமாகின்றது! கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி "லங்கா பட்டண" என பெயர் மாற்றம்!

இதிகாசங்களின்படி இராவணனால் உருவாக்கப்பட்ட கோணேசர் கோவிலுடன் வரலாற்றுத் தொடர்பு கொண்ட இவ்வெந்நீர் ஊற்று தற்போது பௌத்தம் சார்ந்து மாற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் அண்மையில் இருந்த சிவன் கோவிலும் வில்கம் விகாரையாக மாற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்மக்கள் வழிபட்டுவந்த ஒரு கட்டிடத்தின் மூலையில் இருந்த சிவன்-பார்வதியின் வழிபாடும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கான புதிய வரலாறும் பிக்குவினால் சிங்களத்தில்...

5/11/14

கொரிய தூதுவர் யாழ். வந்தார்

கொரிய நாட்டின் உயர் ஸ்தானிகர் வோன் சம் சங் அவர்கள் நேற்று யாழ். மாவட்டத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தார். இந்தப் பயணத்தில் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களை கேட்டறிந்து கொண்டதுடன் கொரிய நாட்டின் மூலமாக மொழிக்கற்கை நெறியினை வளப்படுத்துவதற்கும் அதனூடாக இலங்கையின் வடமாகாணத்தின் சிறந்ததொரு மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கும் கொரியநாடு மேற்கொள்ளுவதற்கான செயற்பாடுகள் குறித்தும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கேட்டறிந்து கொண்டார். மேலும்...

27/10/14

தமிழ் மக்களுக்கான நல்ல தோர் சிறந்த கொள்கையை அமைக்க???

ஈழத் தமிழர்களுக்கான ஒரு வலுவான அரசியல் வெளியுறவுக் கொள்கையை     தமிழ்நாடு முதல்வர் அமைக்க வேண்டும்- அனந்தி சசிதரன் [காணொளி இணைப்பு]...

26/10/14

சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் கமலேஷ் சர்மாவுக்கும் இடையில் சந்திப்பு

 யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்டு இன்று காலை வந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இன்று மதியம் 12.30 மணிக்கு ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் வந்த கமலேஷ் சர்மா வடக்கு ஆளுநரைச் சந்தித்தபின் சிவில் பிரதிநிதிகளை மதியம் சந்தித்து கலந்துரையாடினார். எனினும் வடக்கு மாகாணத்தில் இருந்தும் பாதிரியார்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்த...

25/10/14

வட மாகாண சபையில் நிறைவேற்றத் தடையேதும் இல்லை: தமிழ் அமைப்பு

 இனப் படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானம் ஒன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள...

21/10/14

முக்கிய புலிகளின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போரின் பின்னர் இராணுவத்தினரிடம் சிக்காது யாழ்ப்பாணம், மல்லாவி பிரதேசங்களில் வசித்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய பதவிகளை வகித்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த 18ம் திகதி கட்டாருக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது விமான...

19/10/14

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்டிருந்த தடை, ஐரோப்பிய ஒன்றியத்தால் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறீலங்கா முழுவதும்   கையொப்பம் பெறும் நடவடிக்கையை இலங்கை அரசின் உத்தரவின் பெயரில் தனியார் போக்குவரத்து அமைச்சு முன்னெடுக்கவுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து கையொப்பம் பெறும் நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை வெள்ளவத்தையில் ஆரம்பிக்கப்படும் என்றும் அதற்கு பின்னர்  சிறீலங்கா  ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும்...

14/10/14

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடுகின்றார்!மஹிந்த ..

நிறைவேற்று அதிகாரத்தை கைவிடுவதற்கும் ஈழக் கோரிக்கைக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். அவர் மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவதற்கு முனைகின்றார் எனவும் சுரேஸ் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்குக்கான மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நேற்று முன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும்...

13/10/14

மகிந்தவுக்கு எதிராக செயற்பட பிக்குகள் தீர்மானம்! சோபித்த தேரர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷவுக்கு எதிராக செயற்படுவதற்கு பிக்குகள் தீர்மானித்துள்ளனர். சிறிலங்காவில் பெரும்பான்மை ஆதரவை பெற்றி சோபித்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு மகிந்தராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக இதற்கு மகிந்தரஜபக்ஷ நடவடிக்கை எடுக்க தவறினால், அடுத்த தேர்தலில் அவருக்கு எதிராக செயற்படப் போவதாக சோபித்த தேரர்...

12/10/14

மனதில் அழியாது உங்கள் நினைவுகள் மாவீரரே

போராடி எமைகாத்த வீரர்கள் பெளுதெல்லாம் எம் நெஞ்சிலே வாழ்கின்ற மாவீரர்கள் கார்காலம் கடும்கோடை கடும் இருட்டு காடு மோடு எனபோராடி மடிந்த வீர்கள்..நீங்கள் எங்கள் நினைவுகளை போனால் போகட்டும் என்று எம் நெஞ்சுக்குளி மறந்திடுமா..? தீராத பகை ஓட்டி நாம் படுத்துறங்க மண்ணை சிங்களத்து சிப்பாய்கள் சிலிர்து எழுந்தவேளை சிறுத்தைகள் சீற்றத்துடன் சிம்ம சொற்பனமாய் இருந்த காலத்தை சிங்களத்து கொடும்...

5/10/14

நடமாடும் விபசாரம்: பெண்கள் மூவர் கைது

 இலங்கையில் அதிகமாகும் வாகனத்தில் நடமாடும் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்கள் மூவரையும் அதனை நடத்திச்சென்றதாக கூறப்படும் நபரையும் பிலியந்தலை கரதியான பாலத்துக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண்கள் மூவரும் 19வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.   இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>...

2/10/14

பல்லைக்கழகத்தில் கலைப்பீட மாணவர்கள் போராட்டம்!

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்.பல்கலைக்கழத்தில் நடைபெற்ற முடிந்த மாணவர் ஒன்றியத் தேர்தலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனக் கூறி கலைப்பீட மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 1. மாணவர் ஒன்றியத் தேர்தலை மீண்டும் நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2. மாணவர் ஒன்றியப் பிரதிநிதி பக்கச்சார்பாக நடக்கிறார். 3. குறித்த பிரச்சினைக்கு துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. காலையில் தேர்தல் அறிவிப்பு...

29/9/14

அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை .எனக்கு பிள்ளை வந்தாலே போதும்!

வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், சமாதான காலத்தில் முழங்காவிலில் இருந்து எனது கணவரது ஊரான யாழ்ப்பாணம்...

28/9/14

இன அழிப்புத் தொடர்பில் 40 பக்க ஆவணங்களைக் கையளித்தார்

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழர்களுக்கு எதிரான  இன அழிப்பு தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் பேரவையின்,  முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை  வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு  40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. நேற்றைய தினம் தாயகம் திரும்பிய ரவிகரனிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, இறுதிப்போரில்...

26/9/14

போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழுவினர்

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்: பசுமைத்தாயகம் வலியுறுத்தல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர.அருள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ் குமார், சேலம் இரா.அருள், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நடைபெற்ற...

22/9/14

மகிந்த சட்ட விதிமுறைகளை மீறியுள்ளார் மேன்முறையீட்டு

நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது அனுமதி பெற வேண்டிய நபர்கள் தொடர்பில் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சட்டமா அதிபர், பிரதம நீதியரசர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும்...

21/9/14

கழுத்து பட்டியுடன் அதிகாரி கைது!

 முல்லைதீவில் வடமாகாணசபை நிகழ்வில் சம்பவம்!! விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரியொருவர் முல்லைதீவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாகாணசபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலான வடமாகாண விளையாட்டுப்போட்டிகள் இம்முறை முல்லைதீவில் நடைபெற்று வருகின்றது. குறித்த விளையாட்டுப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட...

20/9/14

சில கிபிர் விமானங்களும் அபிராமியின் வலது கையும்

முன் கதை - 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின் கதை - 01 2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம். உங்களுக்கு...

17/9/14

விசாரணைக்குப் புறம்பாக உள்நாட்டு விசாரணைக்கு பான் கீ மூன் உதவி

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா...

10/9/14

கிளிநொச்சியில் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணையாம்!

 காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இந்த மாதம் கிளிநொச்சியில் தங்களின் அடுத்தக்கட்ட விசாரணைகளை நடத்தவுள்ளது. இதன்படி எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் அந்த குழு கிளிநொச்சியில் விசாரணையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 27ம் மற்றும் 28ம் திகதிகளில் முலங்காவில்லிலும் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூனகரியிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்த விசாரணைகளின் போது ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச...

9/9/14

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் - அமெரிக்காவும் பிரித்தானியாவும் !!

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பமான 27 வது கூட்டத் தொடரில் பேசிய ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆற்றிய பங்கை பாராட்டுவதாக தெரிவித்தார். இலங்கையின்...

8/9/14

நல்லிணக்கத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை!

 தாங்கள் மேற்கொண்ட நல்லிணக்கங்களை உலகம் கண்டு கொள்ளாதிருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமருடன் கொழும்பில் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திகளையும், நல்லிணக்க செயற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை உலக நாடுகள் புரிந்துக் கொள்ளவில்லை. இதனால் சிறிலங்கா உலக நாடுகளில் இருந்து வேறுபடுத்திப்...

6/9/14

தமிழீழ தாகம் தமிழினம் உள்ளவரை தொடரும் [காணொளி]],

சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெ.மணியரசன் ஐயா அவர்கள் தெரிவிப்பதோடு சம நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் ...

4/9/14

நாட்டுக்கான அச்சுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே !!

ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே, நாட்டுக்கான அச்சுறத்தல் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  தற்போது இலங்கையில் முடிசூடாத மன்னர்களை போல ராஜபக்ஷ குடும்பத்தினர் நடந்துக் கொள்கின்றனர்.அவர்கள் வைத்ததே சட்டம் என்ற ரீதியில் இலங்கை காணப்படுகிறது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆதரவான இராணுவத்தினரைக் கொண்டு தனி ஆட்சியே நடத்தி வருகிறார்.  அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பணபலத்தை கொண்டு மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். ...

2/9/14

கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம்!

வடமாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டு வருகின்றன. இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  அவர்களின் பதவிகளுக்கு துரிதமாக தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்...

31/8/14

பாலியல் கல்வி! இங்கிலாந்தில் கோரிக்கை! - கட்சிகள் ஆதரவு!

 பிரிட்டன் பள்ளிகளில் உறவு முறைகள் மற்றும் செக்ஸ் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது. வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. இந்த யோசனைகளை தாம்...

13/8/14

பெளத்த இனவாதிகளுக்கும் நவநீதம்பிள்ளை உச்சியடி!

  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், ஐ.நா.விசாரணை நீதியாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஏராளமான விட யங்கள், இலங்கைக்கு வெளியே உள்ளன. இந்த விடயங்களை ஐ.நா. விசாரணைக்குழு திரட்டிக்கொள்ளும். இதனால், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளாமலே ஐ.நா. விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும்...