நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது அனுமதி பெற வேண்டிய நபர்கள் தொடர்பில் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சட்டமா அதிபர், பிரதம நீதியரசர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் இது குறித்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படும் போது தரப்படுத்தல் தொடர்பில் மூன்று சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>










0 கருத்துகள்:
கருத்துரையிடுக