முல்லைதீவில் வடமாகாணசபை நிகழ்வில் சம்பவம்!!
விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரியொருவர் முல்லைதீவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாணசபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலான வடமாகாண விளையாட்டுப்போட்டிகள் இம்முறை முல்லைதீவில் நடைபெற்று வருகின்றது.
குறித்த விளையாட்டுப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட பயிற்றுநரான எஸ்.சதீஸ் (வயது 40) என்பவர் விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே கைதாகியுள்ளார்.
கூட்டமைப்பின் வசமுள்ள வடமாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடந்து கொண்டிருந்த விளையாட்டுப்போட்டியில் வைத்து அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டமை பல தரப்பினரிடையேயும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
தனது பட்டியை பெருமையாக காட்டிக்கொண்டிருந்த நிலையில் அங்கிருந்த இராணுவப்புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலையடுத்தே இக்கைது நடந்துள்ளதாக தெரியவருகின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக