siruppiddy

29/9/14

அரசாங்க உதவிகள் ஒன்றும் தேவையில்லை .எனக்கு பிள்ளை வந்தாலே போதும்!

வவுனியா அகிலன் லொச்சில் வேலை செய்து கொண்டிருந்த தனது மகனை 2009.01.08 திகதி வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் என ஆணைக்குழு முன் தாயொருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் முழங்காவில் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதன்போதே தாயொருவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் மேலும் சாட்சியமளிக்கையில், சமாதான காலத்தில் முழங்காவிலில் இருந்து எனது கணவரது ஊரான யாழ்ப்பாணம்...

28/9/14

இன அழிப்புத் தொடர்பில் 40 பக்க ஆவணங்களைக் கையளித்தார்

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழர்களுக்கு எதிரான  இன அழிப்பு தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் பேரவையின்,  முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை  வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு  40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது. நேற்றைய தினம் தாயகம் திரும்பிய ரவிகரனிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, இறுதிப்போரில்...

26/9/14

போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழுவினர்

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்: பசுமைத்தாயகம் வலியுறுத்தல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரின் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர.அருள், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அ.கணேஷ் குமார், சேலம் இரா.அருள், வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  நடத்தி வரும் விசாரணை குறித்த அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நடைபெற்ற...

22/9/14

மகிந்த சட்ட விதிமுறைகளை மீறியுள்ளார் மேன்முறையீட்டு

நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது அனுமதி பெற வேண்டிய நபர்கள் தொடர்பில் இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படும் போது சட்டமா அதிபர், பிரதம நீதியரசர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும்...

21/9/14

கழுத்து பட்டியுடன் அதிகாரி கைது!

 முல்லைதீவில் வடமாகாணசபை நிகழ்வில் சம்பவம்!! விடுதலைப் புலிகளது விளையாட்டுதுறையினால் வழங்கப்பட்ட கழுத்துப்பட்டி சகிதம் பணியாற்றிய விளையாட்டுத்துறை அதிகாரியொருவர் முல்லைதீவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வடமாகாணசபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டிலான வடமாகாண விளையாட்டுப்போட்டிகள் இம்முறை முல்லைதீவில் நடைபெற்று வருகின்றது. குறித்த விளையாட்டுப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட...

20/9/14

சில கிபிர் விமானங்களும் அபிராமியின் வலது கையும்

முன் கதை - 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின் கதை - 01 2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம். உங்களுக்கு...

17/9/14

விசாரணைக்குப் புறம்பாக உள்நாட்டு விசாரணைக்கு பான் கீ மூன் உதவி

சிறிலங்காவுக்கு எதிராக யுத்துக் குற்ற விசாரணைகள் இடம்பெறுகின்றமைக்கு புறம்பாக, சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் உதவி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா...

10/9/14

கிளிநொச்சியில் ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணையாம்!

 காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு இந்த மாதம் கிளிநொச்சியில் தங்களின் அடுத்தக்கட்ட விசாரணைகளை நடத்தவுள்ளது. இதன்படி எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் அந்த குழு கிளிநொச்சியில் விசாரணையில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 27ம் மற்றும் 28ம் திகதிகளில் முலங்காவில்லிலும் 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூனகரியிலும் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இந்த விசாரணைகளின் போது ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச...

9/9/14

இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் - அமெரிக்காவும் பிரித்தானியாவும் !!

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவு வழங்க வேண்டும் என அமெரிக்காவும் பிரித்தானியாவும் வலியுறுத்தியுள்ளன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்று ஆரம்பமான 27 வது கூட்டத் தொடரில் பேசிய ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹார்பர், இலங்கை பிரச்சினை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆற்றிய பங்கை பாராட்டுவதாக தெரிவித்தார். இலங்கையின்...

8/9/14

நல்லிணக்கத்தை உலகம் கண்டுகொள்ளவில்லை!

 தாங்கள் மேற்கொண்ட நல்லிணக்கங்களை உலகம் கண்டு கொள்ளாதிருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பானிய பிரதமருடன் கொழும்பில் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்திகளையும், நல்லிணக்க செயற்பாடுகளையும் மேற்கொண்டிருக்கிறது. ஆனால் அவற்றை உலக நாடுகள் புரிந்துக் கொள்ளவில்லை. இதனால் சிறிலங்கா உலக நாடுகளில் இருந்து வேறுபடுத்திப்...

6/9/14

தமிழீழ தாகம் தமிழினம் உள்ளவரை தொடரும் [காணொளி]],

சுதந்திர தமிழீழம் என்பது ஒட்டுமொத்த தமிழினத்தின் கனவு, தாகம். இந்த இனம் உள்ளவரை தமிழீழ தாகம் தொடரும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் பெ.மணியரசன் ஐயா அவர்கள் தெரிவிப்பதோடு சம நேரத்தில் தமிழின அழிப்புக்கு நீதி கோரிய ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் ...

4/9/14

நாட்டுக்கான அச்சுறுத்தல் ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே !!

ராஜபக்ச குடும்பத்தினருக்கான பாதுகாப்பே, நாட்டுக்கான அச்சுறத்தல் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  தற்போது இலங்கையில் முடிசூடாத மன்னர்களை போல ராஜபக்ஷ குடும்பத்தினர் நடந்துக் கொள்கின்றனர்.அவர்கள் வைத்ததே சட்டம் என்ற ரீதியில் இலங்கை காணப்படுகிறது. குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தமக்கு ஆதரவான இராணுவத்தினரைக் கொண்டு தனி ஆட்சியே நடத்தி வருகிறார்.  அவர்கள் தங்களின் அதிகாரம் மற்றும் பணபலத்தை கொண்டு மிகவும் பாதுகாப்பாக வாழ்கின்றனர். ...

2/9/14

கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் அரசாங்கம்!

வடமாகாணத்தின் அரசாங்க நிறுவனங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கைகள் துரிதப்பட்டு வருகின்றன. இதன்படி வடமாகாணத்தில் உள்ள அரச காரியாலயங்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  அவர்களின் பதவிகளுக்கு துரிதமாக தென்னிலங்கையில் இருந்து சிங்கள அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.  வடமாகாணத்தை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும்...