புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது.
இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை.
எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. இவை எல்லாவற்றிக்கும் பழி தீர்க்கவே
நான் அரசாங்கத்துடன் இணைந்து புலிகளை ஒழிக்கப்பாடுபட்டேன். எனது முக்கிய குறிக்கோள் புலிகளின் தலைமையை மட்டும் அழிப்பதே. ஆனால் அத் தலைமையை அழிக்க முயலும் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளையும் தன்னுடன் சேர்த்து அந்தத் தலைமை
அழித்துவிட்டது.
சரணடைந்த போராளிகளைக் கொல்ல வேண்டாமென்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் நான் மகிந்தவிடமும் கோத்தாவிடமும் கெஞ்சியிருந்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிடிபட்ட புலித்தலைமையை அழித்தது பெரிதல்ல. ஆனால் பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த சம்பவம்தான் எனக்குப் பொறுக்க முடியாது இருந்தது. பிரபாகரினின் இளைய மகனைக் கொல்ல வேண்டாம்
என்று நான் கூறிய போதும் அவனும் கொல்லப்பட்டுவிட்டான்.
அரசாங்கம் புலிகளுடன் செய்த யுத்தத்தில் அரசாங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக நானே இருந்தேன். யுத்தம் முடிந்து சில வாரங்களில் கோத்தபாய எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
நன்றி தெரிவித்தார். ‘உமக்கு சிங்கள மக்கள் கடன் பட்டிருக்கின்றார்கள்‘ எனவும் தெரிவித்தார்.
ஆனால் இன்று என்னை சப்பித் துப்பிவிட்டார்கள். பொதுசனஐக்கிய முன்னணியில் எனக்கு இடம் தரவில்லை. கொலைகாரர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்கள். மட்டக்களப்பில் அக் கட்சிசார்பில் போட்டியிடுபவர்கள் பொதுமக்களைக் கொன்ற கொலைகாரர்கள். இதற்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும்‘ இவ்வாறு கருனா தெரிவித்துள்ளார்.
கருனாவுடன் நட்பாக இருந்த முன்னாள் சிங்கள அமைச்சருக்கு கருனா இவ்வாறு கவலையுடன் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக