முகவரி தொலைத்த
முள் வேலிப் பரப்பில்
பறந்து பறந்து தொலைந்து விழுகிறேன்
சிறகெங்கினும் முள் குத்திய ரணங்கள்
என்னையே குறி வைத்தபடி
பூதம் போல் கழுகள்
பதுக்கிய என் சக்தியை
புதுப்பித்தபடி
எழுந்து பறக்கிறேன்
முடியவில்லை என்னால்
உணர்வினில் பறக்கின்றன
சிறகுகள் தன்னால்
ஓய்வில்லா என் வாழ்வின்
கடசியத்தியாயம் இது
ஓயாத முயற்சிகளுடன்
ஊசலாடுது உயிர்
காப்பாற்ற எவருமில்லை
விரசங்களோடு வேடிக்கை பார்ப்போர் ஏராளம்
ஏற்றி விட்ட ஏணிகள் கூட
ஏளனமாய் பார்ப்பதுதான் வேதனை
தோத்துவிட்ட சுவடுகளில்
ஏணிகளின் அடிச்சுவடிகள்
மீண்டும் காப்பாற்ற எவர் வந்தாலும்
வேண்டாம் காவலாளி யென்றது மனம்
மீண்டும் கை தூக்க எவர் வந்தாலும்
வேண்டாமென்றது புயம்
நீ தந்த காயங்களே போதும்
தவமிருந்த வாழ்வின் அர்த்தங்கள்
தோத்துப் போகவில்லை
எருக்கலை போல் வெடித்து பறக்கும்
உன்னோடு ஒரு சில நாள்
இருந்ததுக்காய் வெட்கப் படுகிறேன் ..
ஆக்கம்கவிஞர் இணுவையூர்
சக்திதாசன் டென்மார்க்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக