திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின்
பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது.
அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டு இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் என உலகமே அதிர்ந்து போனது.
கைதான மூன்று பேரில் முதலாமவர் பெயர் கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த இவருக்கு 39 வயதாகிறது. இரண்டாவது நபர் ராஜேந்திரன், இவர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் சசிகுமார், உச்சிபுளி அருகே உள்ள நாதாச்சி என்கிற பகுதியில் வசிக்கும்
கார் டிரைவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக