siruppiddy

28/11/13

சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட தமிழர் தேசிய நினைவு எழுச்சி நாள்

கனடாவின் ரொறன்ரோவில் வழமை போன்று இம்முறையும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் உணர்வெழுச்சியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழீழத்தின் விடுதலைக்காய் உயிர்நீத்த விடுதலை வீரர்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர். &nbs...

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள சுவிஸில் மாவீரர் தின நிகழ்வுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.  பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி...

27/11/13

பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து ( படம் )

   தமிழீழத் தேசியத் தலைவர் என்று சொல்லப்படும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். அவருக்கு     இன்று நவம்பர் 26 ம் நாள் பிறந்த நாள். இந்த நாளை தமிழகத்தில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய படங்களைக் கூட வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுக்கோட்ட மாவட்டம் திருவரங்குளத்தில் சாலையோரத்தில் பிரபாகரனுக்கு பிறந்த நாள் மற்றும் மாவீரர் தினத்திற்கு பதாகை வைத்து அசத்தியுள்ளனர் சில இளைஞர்கள்.புதுக்கோட்டை...

23/11/13

4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த வழக்கு :

                                           ஜெயலலிதவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் டெல்லி, நவ.23 (டி.என்.எஸ்) 4 தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனு செய்திருந்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது ஜெயலலிதா மற்றும் தொடர்புடைய...

22/11/13

தமிழீழம் மாதிரி பொதுவாக்கெடுப்பு தமிழகத்தில் முன்னெடுக்க இருக்கும் மாணவர்கள்

  தமிழீழம் என்பதே ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை தரும் என்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தில் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை முன்னெடுக்க உள்ளனர் .  இது குறித்து மாணவர்களின் அறிக்கை வருமாறு :  இந்தியாவும் சர்வதேசமும் தொடர்ந்து தனி ஈழ கோரிக்கையை மட்டுப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் நமது கோரிக்கையை அழுத்தமான முறையில் பதிவு செய்வதும் மக்களிடையே எடுத்துச் செல்வதும் இப்போது அவசியம். ஆகவே...

மாவீரர்களின் நினைவு வாரம் ஆரம்பம்

தாயக விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களின் நினைவு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு புலம்பெயர் தேசங்களில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளினால், தாயக விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போன மாவீரரகளுக்காக ஆண்டுதோறும் காரத்திகை மாதம் 20 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரையில் மாவீரர வாரம் நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப் பகுதி வரையில் ஈழத்திலும்,...

20/11/13

எழுச்சியுடன்ரொறன்ரோவில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள்:

உலகெங்கும் உள்ள தமிழர்களால் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கனடாவிலும் மாணவர்களால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் மாவீரர் வணக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதாலாவது நாள் நிகழ்வுகளாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் டவுன்ரவுண் வளாகத்திலும், ஹமில்டன், மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இவற்றில் மிகவும் உணர்வுபூர்வமாக...

14/11/13

அஞ்சலி செலுத்திய கனேடியப் பிரதிநிதிகள்!

போரில் உயிரிழந்தவர்களுக்கு கனேடிய பிரதிநிதிகள் நேற்று ஆனையிறவுப் பகுதியில் அஞ்சலி செலுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த கனேடிய பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.ஆயர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினர். சந்திப்பின் பின்னர் ஏ – 9 வீதியின் வழியாக கிளிநொச்சி செல்லும் வழியில் ஆனையிறவில் போர்வெற்றி நினைவுத்திடல் அமைந்துள்ள பகுதியிலிருந்து...

பழ.நெடுமாறன் சுண்டெலி மிரட்டுகிறது யானை பதுங்குகிறது! -

‘கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார். அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர்...

12/11/13

கனடாத் தமிழர் அமைப்புக்களின் பொது அழைப்பு

உலகெல்லாம் குரலெழுப்ப உலகத் தமிழினமே எழுந்து வா! கண்டனப் பேரணிக்கான கனடாத் தமிழர் அமைப்புக்களின் பொது அழைப்பு நவம்பர் 14, 1976ம் ஆண்டு ஈழத் தமிழர் அறப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனை. சமஷ்டிக் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியற் கட்சியையே வழி நடாத்தி வந்த ஈழத்துக் காந்தியாம் தந்தை செல்வா அவர்களே தனித் தமிழீழ வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை பிரகடனம் செய்த நாள் அதையும் ஜனநாயக ரீதியிலான ஒரு ஆணையாக, அங்கீகாரமாக, முடிந்த முடிவாக வெளியிட்ட நாள் இதே காலப்பகுதியில்...

இசைப்பிரியாவின் தாயாரும் சகோதரிகளும் { காணொளி,}

தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான இசைப்பிரியா தொடர்பிலான இசைப்பிரியாவின் தாய் மற்றும் இரு சகோதரிகள், இசைப்பிரியா தொடர்பிலும், இறுதிப் போர் தொடர்பிலும் கண்ணீர்மல்க பகிர்நத அனுபவகள் அக்காட்சியில் ஒளிபரப்பப்ட்டிருக்கின்றது. ஒரு உடன்பிறந்த சதோரரியை இலங்கை இராணுவ வல்லாதிக்கத்தின் மூா்க்கத்துக்கு பலிகொடுத்த அக் குடும்பத்தினரது கண்ணீர்க் கதை இன்று உலகை உலுக்கும் பதிவாக வெளிவந்துள்ளது.     தமிழீழ விடுதலை புலிகளின் தொலைக்காட்சி...

11/11/13

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்டம்!

  நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த்,வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் உள்பட 80 பேர் கைது போலீஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின ஜோதி தொடர் ஓட்ட பயணம் நடந்தது. இதில் பங்கேற்ற வணிகர்கள் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.   ஜோதி தொடர் ஓட்ட பயணம்: தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் சென்னை, தருமபுரி, நீலகிரி, விருதுநகர், கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் இருந்து முள்ளிவாய்க்கால்...

தொடக்கமே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்: -

 முற்றத்தில் சீமான் பேச்சு  தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அமைக்கப்பட்டு உள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழா 2வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு பொது அரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் திருஞானம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது.... எவ்விதமான தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில்...

10/11/13

உயிர்களைக்கொடுத்துக் காத்த இலட்சிய நெருப்பை

ஆயிரக்கணக்கான போராளிகளும் இலட்சக்கணக்கான தமிழர்களும் தங்கள் உயிரைக்கொடுத்து காத்த இலட்சிய நெருப்பை அணையாமல் காக்க வரலாற்றுப் பாடங்களை நாம் தொடர்ந்து படித்தே ஆகவேண்டும். ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல; இந்த நூலைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து உலக மக்கள் அனைவரிடமும் கொண்டுசென்று, ஈழப் போராட்டத்தின் இலட்சியத்தை, அவசியத்தை, உண்மையை உணர்ந்து கொள்ளும் படியான வாய்ப்பை நாம் உருவாக்கவேண்டும் என திராவிடர் கழத் தலைவர் கி.வீரமணி...