உலகெங்கும் உள்ள தமிழர்களால் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகவும் எழுச்சிபூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கனடாவிலும் மாணவர்களால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளில் மாவீரர் வணக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதாலாவது நாள் நிகழ்வுகளாக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின்
டவுன்ரவுண் வளாகத்திலும், ஹமில்டன், மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்திலும் மாவீரர் வார வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இவற்றில் மிகவும் உணர்வுபூர்வமாக மாணவர்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான தமது வணக்கத்தை செலுத்தினர். கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய
இந்நிகழ்வுகளில் எழுச்சி நடனங்கள், உரைகள் போன்ற பல இடம்பெற்றன. எத்தகைய தடைகள் வரினும் தலைவர் காட்டிய வழியில் தொடர்ந்தும் தளராது பயணிப்போம் என மாவீரர்கள் மீது மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக