
இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம். வேறு எந்த நாடும் இது போன்ற சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து அங்குள்ள விமான நிலையத்திற்கு சீன அரசின் நிதி உதவியுடன் (300 மில்லியன் அமெரிக்க டாலர்) 28 கி.மீ.தூரத்துக்கு விரைவு சாலை அமைக்கப்பட்டது.
இந்த விரைவு சாலையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராஜபட்ச பேசும்போது...