புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போரளிகளின் திருமண நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சி – முல்லைத்தீவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு படையின் கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற இத் திருமண நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
இதன்போது 3 திருமணங்கள் நடைபெற்றதுடன் அவை முறையே இந்து, பௌத்த மற்றும் கத்தோலிக்க சமய சம்பிரதாயப்படி நடைபெற்றுள்ளது.
விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களாக இருந்து தற்போது
புனர்வாழ்வளிக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு படையில் இணைந்துள்ள பேரின்பநாதன் வர்மன் மற்றும் நடராசா சுகிர்தா ஆகியோர் இந்து சம்பிரதாயப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இதேபோல் சகோதர இனத்தவரான சிவில் பாதுகாப்பு படை வீரர் ஹர்ஷ நூவான் தனது காதலியான சுகந்தினியை சிங்கள முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
எனினும் இங்கு நடைபெற்ற மற்றுமொரு திருமணம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த மிகவும் உயரம் குறைந்த முன்னாள் உறுப்பினரான முருகையா சசிகுமார் மேரி பபிலாவை கத்தோலிக்க முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக