தமிழர் தாயகத்தில் தேர்தலை ஒன்றை நாடத்தி அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றும் சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மாபெரும் அரசியல் தவறு என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
"13வது திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்கிவிட்டு அதன் பின்னர் வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறும் தெரிவித்தோம். ஆனால் அதனை அரசு செய்யாது வடமாகாண சபை தேர்தலை அறிவித்தது.
அதனடிப்படையிலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து வெளியேறினோம் இது எமது கட்சியின் முடிவு. எனினும் வட மாகாண சபை தேர்தலை நடத்துவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் முடிவு.
இன்று நாம் கூறியது உண்மையாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தன்னாட்சி அதிகாரம் வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட தனித் தமிழீழத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து விடயங்களையும் முன் வைத்துள்ளது.
அரசாங்கம் செய்த மாபெரும் அரசியல் தவறால் இன்று இனவாத சக்திக்கு அதிகாரம் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வர படையினர் அர்ப்பணிப்புடன் பெற்றுக் கொடுத்த வெற்றியையும் பின்னோக்கி நகர்த்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென தேசிய ரீதியான அமைப்புக்கள் வலியுறுததிய போதும் சர்வதேசம் விசேடமாக இந்தியாவின் கடும் அழுத்தம் காரணமாகவே அரசாங்கம் தேர்தலை நடத்துகின்றது.
விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் தமிழ் மக்களின் அமைதியை குழப்பியது இந்தியாவே" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக