விடுதலைப்புலி ஆதரவாளர்களின் கோரிக்கையின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் இடம்பெற்றது என 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்
வெளிநாடுகளில் பிரசாரம் செய்யும் பிரிவினரின் கோரிக்கையின் பேரிலேயே நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் இடம்பெற்றது என்று இலங்கையின் நாட்டில் போர் முடிவடைந்துள்ள போதும் பயங்கரவாதத்தை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் குறிப்பிடடுள்ளார்.
போரின் பின்னர் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் கொழும்பில் உரையாற்றும் போதே கோட்டாபய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே சர்வதேசத்தில் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளினால் இலங்கையின் உள்நாட்டு விவகாரம், சர்வதேச நாடுகளுக்கும். ஐக்கிய நாடுகளுக்கும் அட்டவணைகளாக மாறியுள்ளன என்றும் கோட்டாபய மேலும் குறிப்பிட்டார்
இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தான் விஜயம் மேற்கொண்டதாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக