இன்றைய தினம், ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இதில் சென்று கலந்துகொண்டுள்ளார்கள். ஐ.நாவில் தற்போது மனித உரிமை மாநாடு நடைபெற்று வருகிறது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தி , ஈழத் தமிழர்களுக்கு நீதிவேண்டவே இப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடையம். பல ஆயிரக்கணக்கான மக்கள் இன்று இப்போராட்டத்தில் கலந்துகொண்டு சர்வதேச விசாரனை தேவை மற்றும் போர்குற்ற விசாரணை தேவை என்பதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அண்மையில் ஜெனீவா முன்றலில் தன்னுடலை தீக்கிரையாக்கிய ஈகைபேரொளி செந்தில்குமரனது, நிழற்படத்திற்கு மலர்மாலை சூட்டி அகவணக்கம் செலுத்திய பின்னரே மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது என மேலும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக