siruppiddy

31/12/13

மனித உரிமை பேரவையில் கியூபா, இலங்கைக்கு உதவ உறுதி

இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க உதவுவதாக உறுதியளித்துள்ளது. கொள்கை அடிப்படையில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவையாதலால் கியூபா அதை எதிர்க்கின்றது என கியூப தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார். இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின்...

30/12/13

தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி

தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான பயிற்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த...

29/12/13

வெடித்தது கலவரம்! பிரான்ஸ் இராணுவம் குவிப்பு !

ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் சூடான் அருகே மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடு அமைந்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் வெடித்துள்ள கலவரத்தை ஒடுக்க பிரான்ஸ் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பிரான்சிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்நாடு கடந்த 1960ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது. இந்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு செலேகா என்ற கிளர்ச்சியாளர் ஆட்சியை கைப்பற்றினர். அதனை அடுத்து இரு பிரிவினர் இடையே மத மோதல்கள் தலைதூக்கி கலவரம் வெடித்தது. இந்த மோதல்களில் இருந்து...

24/12/13

வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்

வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல்  அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளா...

22/12/13

வடக்கு மாகாண அரசுடனும் இணக்க அரசியல் நடத்த விரும்புகிறாராம் டக்ளஸ்!

 மத்திய அரசுடன் மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க அரசியலை முன்னெடுக்கவே நாம் விரும்புகின்றோம். இணக்க அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழ்க் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன் நாம் மத்திய அரசுடன்  மட்டுமல்லாது மாகாண அரசுடனும் இணக்க...

21/12/13

பாராளுமன்றில் குரல் கொடுக்காமல் முச்சந்தியில் பேசுவது ஏமாற்று வேலை!

  தமி­ழர்­க­ளுக்கு ஆத­ர­வாக பாரா­ளு­மன்­றத்தில் குரல் கொடுப்­ப­தற்­குப் ­ப­தி­லாக, காங்­கிரஸ் அமைச்­சர்கள் முச்­சந்­தி­களில் நின்று பேசு­வது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேர­மைப்பு அறக்­கட்­டளை தலை­வ­ரான பழ.நெடு­மாறன் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் அவர் தெரி­வித்­த­தா­வது, இலங்­கையில் மீத­முள்ள தமி­ழர்­க­ளையும் ஒழிப்­ப­தற்­காக அந்­நாட்டு அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­டு­வரும் நிலையில், பிரிட்டிஷ் பிர­தமர்...

20/12/13

முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவைத்தருவதாக அமையவில்லை! -       தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அளுகையின் கீழ் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை நடத்தத்தெரியாதவர்கள் ஏன் தான் சுயாட்சி தனிநாடு என்று கோசம்போட்டுத்திரிகிறார்களொ தெரியவில்லை என்று எங்களை உலகம் பழிக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி...

17/12/13

தமிழீழம் நீண்ட தொலைவிலில்லை! இந்தியாவின் முன்னாள்

தமி­ழீழம் நீண்ட தொலை­வி­லில்லை’ என பார­திய ஜனதாக் கட்­சியின் மூத்த உறுப்­பி­னரும் இந்­தி­யாவின் முன்னாள் வெளி­யு­றவு அமைச்­ச­ரு­மான ஜஸ்வந்த் சின்ஹா தனது கட்­சியின் கூட்டம் ஒன்றில் அண்­மையில் தெரி­வித்­துள்ளார். ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியற் தீர்வை எட்­டுதல் தொடர்­பாக பார­திய ஜனதாக் கட்­சியின் ஒன்­று­கூ­டலில் விவா­திக்­கப்­பட்ட போது, தற்­போது இந்த நிலை வேறு­பட்­டுள்­ளது என்­பதை ஜஸ்வந்த் சின்ஹா வலி­யு­றுத்­தி­யுள்ளார். ஈழம்...

16/12/13

தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும்

இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே கிரிக்கெட்...

15/12/13

இனப்படுகொலைக்கு இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டும்!

இலங்கையிலே நடைபெற்ற இறுதி யுத்தத்தின் மனிதஉரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக்கும் இந்திய அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடந்த நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தலைமை உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆயுதத்தை வழங்கி அழிவுக்கு இட்டுச் சென்று, முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்திற்கு முடிவுரை எழுதிய பெரும் பங்கு இந்தியாவின் காங்கிரஸ் அரசிற்கே உண்டு...

12/12/13

ஊடக மத்திய நிலையம் இராணுவப்பேச்சாளராக அலுவலகமாக

கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மூடப்பட்டதுடன் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் கீழ்வரும் இராணுவப்பேச்சாளர் அலுவலகம், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இராணுவப்பேச்சாளர் அலுவலகம் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் அலுவலகம், அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னர் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும...

ஜனாதிபதி மகிந்த கென்யா சுதந்திர தின விழாவில்..

கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று மாலை தலைநகர் நைரோபியை சென்றடைந்தார். ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை கென்ய ஜனாதிபதி உகுரு கென்யாட்டா, துணை ஜனாதிபதி வில்லியம் ரூடோ, வெளிவிவகார அமைச்சர் ஆமீனா மொஹமட் ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. கென்யா சென்றுள்ள ஜனாதிபதி நைரேபி நகருக்கு அருகில் உள்ள நசராணி நகரின் சர்வதேச விளையாட்டுத்...

போரில் மடிந்த அனைவரையும் நினைவு கூரும் நாள் பிரகடனப்படுத்தப்பட

 இலங்கையில் நல்லிணகத்தை கொண்டு வரவேண்டுமானால்ää கடந்த 30 வருடங்களில் போர் காரணமாக இறந்தவர்களுக்காக பொதுவான அஞ்சலி நாள் அனுஸ்டிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் இந்தக் கருத்தை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். பயங்கரவாதிகளை தோற்கடித்ததாக கூறி இலங்கையில் மே 19 ம் திகதி வெற்றிவிழா கொண்டாடப்படுகிறது. இது வெறுக்கத்தக்க செயல். இது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை...

11/12/13

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ

அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!   தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரே அன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது. தனது மூன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்து...

10/12/13

முன்னாள் கிராம சேவையாளர் மீதான துப்பாக்கி சூட்டிற்கு

 தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டனம்: வவுனியா வைரவபுளியங்குளம் முன்னால் கிராமசேவையாளர் திருமதி சற்குனசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   ...

9/12/13

கல்வியுரிமை, காணியுரிமை, ஆட்சியுரிமை ஆகிய மூன்று தேசிய

மலைநாட்டு தமிழரது கல்வியுரிமையின் அடையாளமாக, மலையக பல்கலைக்கழகம்; மலைநாட்டு தமிழரது காணியுரிமையின் அடையாளமாக, சொந்த நிலத்தில் வீடு; மலைநாட்டு தமிழரது ஆட்சியுரிமையின் அடையாளமாக, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, நுவரெலியா பிரதேசசபைகள், மேலும் பிரிக்கப்பட்டு மொத்தம் பன்னிரண்டு பிரதேசசபைகள்; ஆகிய மூன்று குறைந்தபட்ச உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மலையக இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இவற்றை பற்றி பேசுவது கட்சி அரசியல் அல்ல. கட்சி அரசியல் பேச...

8/12/13

ஜெனிவாவில் வைப்பதற்கு ஆப்பு சீவும் அமெரிக்கா !

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில், சிறிலங்காவுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையைத் தீர்மானிப்பதற்கான களஆய்வில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக, அமெரிக்க காங்கிரசை சேர்ந்த, டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவொன்று சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், கொழும்பில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டோரை...

7/12/13

சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் கண்டிப்பு

சிறிலங்காவில் மனிதஉரிமை மீறல்கள், ஊடக சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் எல்லாமே முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற அமெரிக்கா கூறியுள்ளது. வொசிங்டனின் நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார். “அண்மையில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டின் போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இரு சமூகங்களுக்கு இடையில் நடந்த போரை அடுத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலஅவகாசம்...

5/12/13

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் சொந்தமாக விசாரணை நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ இந்த எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார்.    “நாம் இந்த...

4/12/13

பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் விரிசல் .,.

பாகிஸ்தான் ஊடாக ஆப்கானிஸ்தானில் உள்ள தமது படையினருக்கான பொருட்களை ஏற்றியிறக்கும் பணிகளை அமரிக்கா நிறுத்தியுள்ளது. அமெரிக்கா அண்மையில் நடத்திய வான் தாக்குதல்களின் போது பாகிஸ்தானிய பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் ஊடாக பொருட்களை ஏற்றியிறக்கும் அமெரிக்கா வாகன ஓட்டுநர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏற்றியிறக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள போதும் விரைவில் அது ஆரம்பிக்கப்படும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமரிக்க...

2/12/13

திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை பெற்றுள்ளது

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதி வரை இலங்கை திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மேலதிக பற்றாக பெற்றுள்ளது. இது இலங்கையின் தேசிய உற்பத்தியில் 1.2 வீதமாகும். இதனை தவிர சீனா, ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் இருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்தும் 109 கோடி அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி அரச வங்கிகளிடம் இருந்து...

1/12/13

இலங்கையின் இனப்படுகொலைக்கு ராஜபக்ஷவுக்கு 100 வீத பொறுப்பு – மன்மோகனுக்கு 50 வீத பொறுப்பு

இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையும், இந்திய அரசின் நிலையும் என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அப்போது இலங்கை அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு பாரதீய ஜனதா கட்சியே  காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். சிதம்பரத்தின் இந்த பேச்சுக்கு தமிழக பாரதீய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம்...

“போர்க்கால இழப்புப் பதிவு நடவடிக்கை நம்பகமாக இல்லைஇடம்பெறவில்லை” கிழக்கிலங்கை மக்கள்:-

இலங்கையில் போர்க்கால இழப்புக்கள் குறித்த பதிவுகளைப் பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நம்பகமாக இல்லையென இலங்கை மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். போர்க்காலத்தில், அதுவும் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலான 27 வருட காலத்தில் இடம்பெற்ற உயிரிழப்புக்கள், உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள காயங்கள், அவயவங்களின் இழப்புக்கள், சொத்துக்களுக்கு எற்பட்டுள்ள அழிவுகள், விவசாயம் உள்ளிட்ட தொழில்துறை மற்றும் வாழ்வாதாரத்திற்கு...

28/11/13

சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்ட தமிழர் தேசிய நினைவு எழுச்சி நாள்

கனடாவின் ரொறன்ரோவில் வழமை போன்று இம்முறையும் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஏராளமான மக்கள் உணர்வெழுச்சியுடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழீழத்தின் விடுதலைக்காய் உயிர்நீத்த விடுதலை வீரர்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர். &nbs...

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள சுவிஸில் மாவீரர் தின நிகழ்வுகள்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.  பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி...