ஆப்ரிக்காவின் மத்திய பகுதியில் சூடான் அருகே மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடு அமைந்துள்ளது.
மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டில் வெடித்துள்ள கலவரத்தை ஒடுக்க பிரான்ஸ் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்நாடு கடந்த 1960ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.
இந்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு செலேகா என்ற கிளர்ச்சியாளர் ஆட்சியை கைப்பற்றினர்.
அதனை அடுத்து இரு பிரிவினர் இடையே மத மோதல்கள் தலைதூக்கி கலவரம் வெடித்தது.
இந்த மோதல்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா.வின் அமைதிப்படை குவிக்கப்பட்டது.
இருப்பினும் அதையும் மீறி கடந்த 2 தினமாக மோதல், கலவரம் வெடித்ததால் பிரான்ஸ் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
கலவரம் உச்சக்கட்டத்தில் நீடிப்பதால், வீரர்கள் தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் விமான நிலையம் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தெருக்களில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 44 பேரின் உடல்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் இருந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தலைவர் ஜார்ஜியஸ் ஜெர்கான்டஸ் தெரிவித்துள்ளர்.
மேலும் குண்டு காயங்களுடன் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைக்கு வந்ததாக மருத்துவ அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக