siruppiddy

5/12/13

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை.

போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரச படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் சொந்தமாக விசாரணை நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்கும் என்று மீண்டும் எச்சரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ இந்த எச்சரிக்கையை மீண்டும் விடுத்துள்ளார்.
   
“நாம் இந்த விவகாரத்தை வரும் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எழுப்புவோம். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தாது போனால், அவர்கள் அதைச் செய்ய மறுத்தால், நாம், சுதந்திரமான, நம்பகமான, அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள ஏனைய நாடுகளுடன் எவ்வாறு அதைச் சிறப்பாகச் செய்வது, அதன் விபரங்கள் குறித்து கலந்துரையாடுவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக