siruppiddy

10/12/13

முன்னாள் கிராம சேவையாளர் மீதான துப்பாக்கி சூட்டிற்கு

 தமிழ் தேசிய மக்கள் முன்னனி கண்டனம்: வவுனியா வைரவபுளியங்குளம் முன்னால் கிராமசேவையாளர் திருமதி சற்குனசேயோன் பாலசுந்தரி மீதான இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் சி.கோபாலகிருஸ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
   
கடந்த 4ம் திகதி புதன் கிழமை இரவு 8.30 மணிக்கு கிராம சேவையாளரின் வேப்பங்குளம் வீடிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஜெகன் என்ற ஒரு பெயரைக் கூறி அவர் நிகின்றாரா என கேட்டனர். அதற்கு அவ்வாறான பெயரையுடைய ஒருவர் இங்கு இல்லை என முன்னால் கிராம சேவையாளர் பதில் அளித்திருகின்றார்.

எனினும், அவ்விருவவரும் வீட்டினுள் நுழைய முயற்சிக்கவே முன்னாள் கிராம சேவையாளர் வீட்டு கதவினை சாத்தி இருகின்றார். இதனை அடுத்து கதவின் மீது குறித்த நபர்கள் துப்பாக்கியினால் சுட்டிருகின்றனர். இத்துப்பாக்கி சூட்டில் 60 வயதான முனால் கிராமசேவையாளர் காயம் அடைந்து வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்படிருகின்றார்.

தற்போது படையினரும் படையினருக்கு உதவுகின்ற ஆயுத குழுக்களும் மட்டுமே ஆயுதங்களை வைத்திருகின்றனர். அவர்களே இத்துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பு கூற வேண்டும். முழத்திற்கு முழம் இராணுவ முகாம்கள் இருகின்ற நிலையிலிலும் உளவு பிரவினர் அன்றாடம் மக்களின் கால்களுக்குள் தடக்குப்படுகின்ற நிலையிலும் வேறு நபர்கள் இத்துப்பாக்கி சூட்டை மேற்கொள்ள வாய்ப்புக்கள் எதுவும் இல்லை.

ஒய்வு பெற்ற அரச அலுவலர் மீது இடம் பெற்ற இத்துப்பாக்கி சூட்டினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக