தமிழர்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, காங்கிரஸ் அமைச்சர்கள் முச்சந்திகளில் நின்று பேசுவது ஏமாற்று வேலை என்று உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை தலைவரான பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,
இலங்கையில் மீதமுள்ள தமிழர்களையும் ஒழிப்பதற்காக அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுவரும் நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் தைரியமாகச் சென்று தமிழர்களைச் சந்தித்துப் பேசியதுடன் அதுகுறித்து பொதுநலவாய மாநாட்டிலும் கண்டனம் தெரிவித்தார்.
இத்தனையும் நடைபெற்ற பிறகும் இலங்கைக்கு அருகில் உள்ள இந்திய அரசோ, தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது. இது இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தங்களின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவதைப்போன்று அமைந்துள்ளது.
மத்திய அமைச்சர்களில் ஜி.கே.வாசன் மட்டும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக்குரல் கொடுத்து வருவது பாராட்டுக்குரியது.
அந்தக் கட்சியின் மற்ற அமைச்சர்களோ, தமிழர் விவகாரத்தை பாராளுமன்றம், அமைச்சரவைகளில் பேசுவதை விட்டுவிட்டு முச்சந்தியில் நின்று பேசுவது தமிழர்களை ஏமாற்றும் வேலைதான் என்றார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக