தற்போது இவர், பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
இப்படம் குறித்து வ.கெளதமன் கூறியதாவது:
மேதகு பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக பதிவு செய்ய வேண்டும் என்பது என்னுடைய பெருங்கனவு. கடந்த பத்தாண்டுகளாக போராட்ட வரலாறு தொடர்பான செய்திகளை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன்.
கடுமையான போரின் மத்தியிலும் 'சந்தனக்காடு' தொடரை மேதகு பிரபாகரன் அவர்கள் முழுமையாக பார்த்திருக்கின்றார் என்ற செய்தியை அறிந்த போது எனக்குள் ஏற்பட்ட சிலிர்ப்பும் நெகிழ்ச்சியும் இன விடுதலைக்கான படைப்பை செய்ய வேண்டுமென்ற எனது இலட்சியத்தை மேலும் தீவிரமாக்கியது.
2008 ஆம் ஆண்டு கால கட்டத்திலேயே ஈழப்போராட்ட வரலாற்றை திரைப்படமாக்கும் பணியை என்னை வைத்து தொடங்க வேண்டும் என மேதகு பிரபாகரன் எண்ணியிருந்தார் என்ற செய்தி அறிந்த போது அளவில்லாத மகிழ்ச்சியடைந்தேன்.
அதற்குள்லாக நான்காட் கட்ட ஈழப் போர் கடுமை அடைந்துவிட்டதால் பணிகள் தேங்கியது.
இதுபதிற்கு மேற்பட்ட நாடுகளின் துணையோடு ஈழம்
சிதைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எம்மினத்தின் விடுதலை வேட்கை சிதையவில்லை. இதுவரை மூன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். போருக்கு பிறகும் தமிழர்களுக்கு விடிவில்லை.
உயிரை உறையச் செய்யும் இந்த உண்மை மீது பெரிதாக கவனம் கொள்ளாத உலக சமூகத்தின் மனசாட்சியை இப்படைப்பு உலுக்கும். இந்த படத்தில் தமிழ்த்திரையுலகின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும், நடிகையரும் பங்கேற்கிறார்கள்.
வரலாற்று நாயகன் பிரபாகாரனாக ஒரு பச்சைத் தமிழன் தான் நடிக்கிறார். படப்பிடிப்பு தொடக்க விழா குறித்தும், படத்தில் பங்கு பெறும் நடிகர், நடிகையர் குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்.
பிரேவ் ஹார்ட், உமர் முக்தார் உள்ளிட்ட ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் இப்படம் உருவாக்கப்படும். மிக பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட இருக்கும் இந்த தமிழ்த் திரைப்படம், இந்திய மொழிகளில் மாட்டுமின்றி பல்வேறு உலக மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படும்.
முள்ளிவாய்க்காலில் நந்திக் கடல் பகுதியில் உலக நாடுகள் தந்த பெரும் ஆயுதங்களோடு நாலா பக்கமும் சிங்களப் படைகள் சூழ்ந்து நின்ற அந்தக் கடைசி நிமிடங்களில் அல்ல, அந்த கடைசி நொடியில் மேதகு பிரபாகரன் என்ன முடிவெடுத்தார் என்பது இன்றுவரை எவரும் அறிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கின்றது.
அந்த இறுதி நொடியின் நிகழ்வை உண்மையாகவும் உக்கிரமாகவும் இந்தப் படைப்பு பறைசாற்றும்.
ஒவ்வொரு தமிழனும் இந்த இனத்தில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்ளும் வகையில், எம் இனத்தை அழித்தொழிக்க கைகோர்த்து நின்ற எதிரிகளும் துரோகிகளும் தலைமுறை கடந்தும் தலை குனிந்து நிற்கும் விதத்தில் உருவாகும் இத்திரைப்படம், ஒரு திரைப் படைப்பு மட்டுமல்லாமல் தமிழின விடுதலையின் திறவுகோலாகவும் இருக்கும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக