siruppiddy

30/8/13

திரைப்படமாகிறது பிரபாகரன் வாழ்க்கை வரலாறு " :

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இப்படத்தை வ.கெளதமன் இயக்குகிறார். சின்னத்திரையில் ஒளிபரப்பான ஆட்டோ சங்கரின் மரண வாக்கு மூலம், வீரப்பனின் வாழ்க்கை தொடர் சந்தனக்காடு, போன்றவற்றை இயக்கிய கெளதமன், மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது இவர், பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்படம் குறித்து வ.கெளதமன் கூறியதாவது: மேதகு...

29/8/13

புலிகளின் ஓடுபாதையை பயன்படுத்திய நவநீதம்பிள்ளை

விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார். அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச்...

28/8/13

யாழ் நூலகத்தில் சம்பவம் !கோலம் போட்ட நவிப் பிள்ளை

:    நேற்று முன் தினம் யாழ் நூலகத்திற்குச் சென்ற நவிப்பிள்ளை, அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பின்னர் பின் வாசலால் சென்ற விடையம் தொடர்பாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இதேவேளை யாழ் நூலகத்திற்குள் அவர் செல்லும் வேளை அங்கே போடப்பட்டு இருந்த கோலத்தை அவர் தற்செயலாக தனது கால்களால் தட்டிவிட்டார். இதனையடுத்து உடனே குனிந்து அங்கே விலகிக் கிடந்த கோலமா மற்றும் அரிசிகளைப் பொறுக்கி அப்படியே கோலம் போட ஆரம்பித்துவிட்டார்....

வருகிறார்கள்யாழில் இருந்து ராமேஸ்வரத்தில் ஆயுதப்படை போலீசார்!

யாழ்ப்பாணத்தில் இருந்து பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், படகுகள் மூலம் ராமேஸ்வரம் வர உள்ளதாக இந்திய உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் சாதாரண எச்சரிக்கையாக எடுத்துவிடவும் முடியாது. தற்போது உள்ள சூழ் நிலையில், யாழில் "றோ" அமைப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இந்திய மத்திய உளவுத்துறைக்கு கொடுத்த தகவலையே அவர்கள் தமிழகப் பொலிசாருக்கு கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய தினம்(27) இதனால் ராமேஸ்வரம் கோயில் பகுதியில் பெரும்...

26/8/13

இராணுவத்தினர்கள்ஊடகவியலாளர் வீட்டுக்குள் புகுந்தனர்!

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம கடத்திச் செல்லச் சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் சிறீலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவை சேர்ந்தவர்கள் என இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் முக்கிய தலைவரின் மகன் ஒருவரே அவர்களை அங்கு அனுப்பி வைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி டிக்மன்ஸ் வீதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற நிலையில் சிறீலங்கா காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு ...

24/8/13

குற்றங்களை சொல்ல முனைபவர்களுக்கு அனுமதி மறுப்பு என்கிறது !!

ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் பேரவையில் இலங்கை அவமதிக்கும் வகையில் தகவல்களை முன்வைத்த அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் குழுவினருக்கு, நாளை (25) இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.விடுதலைப்புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்து நவநீதம்பிள்ளைக்கு தகவல்களை தெரிவிக்கவிருந்தவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் உள்ள அரசசார்பற்ற...

23/8/13

புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மான் உயிருடன்?

சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் நேற்றைய தினம் அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவத்துக்கும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறைக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக தாயகச் செய்திகள் தொழிவிக்கின்றன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்...

19/8/13

திரைப்படத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது:

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழின உணர்வாளர்களின் கோரிக்கைக்கு இணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் நேற்று அப்படம் திரைப்படப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறிலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத்...

16/8/13

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது நெடுந்தீவில் தாக்குதல்

நெடுந்தீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனரகரத்தினத்திற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்யச் சென்றபொழுது விசாரணைகளை ஏற்கமுடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

15/8/13

ஆட்சியின் இறுதிக்கட்டமே இது : பொது எதிரணிகளின்

வெலிவேரிய சம்பவத்தினை கண்டித்து அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொது எதிரணிகளின் தலைவர்கள் ஒருமித்து மஹிந்த ஆட்சியின் இறுதிக்கட்டமே இதுவென தெரிவித்தனர். இங்கு பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் இறுதிக் கட்டத்தினையே தற்போது அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கின்றது. தண்ணீர் கேட்ட வெலிவேரிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு...

14/8/13

இனப்படுகொலையை மூடி மறைக்கும் 3 பேர் !!!

தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் ஏழரை லட்சம் தமிழர்கள் இருக்கிறோம். இதுமட்டுமின்றி, இலங்கையில் நாம் பூர்வ குடியினர். 35 லட்சத்துக்கு மேல் இருக்கும் அங்குள்ள தமிழரின் எண்ணிக்கை. இதுபோதாதென்று இந்தியாவெங்கும், உலகமெங்கும் சிதறிக் கிடக்கிறோம். ஆகப் பெரிய எண்ணிக்கை இது. அப்படியிருந்தும், ருவாண்டா என்கிற குட்டி நாட்டில் நடந்த இனப்படுகொலைக்குக் கிடைத்த நீதி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைக்காக இன்னும் கிடைத்த பாடில்லை. இதற்குக் காரணம் 3 பேர். இந்த மூவரில்...

13/8/13

பிரபாகரனின் மறுஅவதாரமே விக்கினேஸ்வரன்:

பிர­பா­க­ரனின் மறு அவ­தா­ர­மா­கவே இன்று விக்­கி­னேஸ்­வரன் உரு­வெ­டுத்­துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லிய­னகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விக்கினேஸ்வரனின்  செய்­கை­களும் பேச்­சுக்­களும் திருப்தி தரு­வ­தாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லிய­னகே இவரை ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்­குகள் ஜனா­தி­ப­தி­யிடம் இது தொடர்­பாக...

12/8/13

காணி பொலிஸ் அதிகாரங்களைச் சட்டரீதியாகவே பெற்றுக்கொள்ளலாம்

:   இலங்கை அரசில் சட்டரீதியகவே மாகாணங்களுக்கு காணி போலிஸ் அதிகாரங்கள் இருப்பதால் அதனை இலங்கை ஜனதிபதி வழங்கியே ஆக வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேசச் சட்டங்களுக்கே முரணாக வன்னியில் லட்சக்கணக்கான பொதுமக்களை அழித்து சாட்சியின்றி அழித்துவிட்ட இலங்கை பாசிச அரச பயங்கரவாதத்திற்திடமிருந்து அடிப்படை மனித் உரிமைகளையே மக்கள் எதிர்பார்க்காத நிலையில் விக்னேஸ்வரன் இலங்கை அரசிற்கு...

சிங்களக் குடியேற்றப்பகுதியில் குண்டுத் தாக்குதல் : அபாய ஒலி

    நாவற்குழியிலுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றப் பகுதிய்லேயே இத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு புதிதாகவரும் சிங்களக் குடியேற்ற வாசிகள் தற்காலிகமாகத் தங்கும் மடம் ஒன்றிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள குடியேறிகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் காரில் சென்ற சிலர் குண்டுத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இச் செய்தியின் பின் புலம் பெயர் பிழைப்புவாதிகள் அடுத்தகட்ட...

11/8/13

இலங்கை நடுங்க ஆரம்பித்துதது விட்டதா ?

இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பஸ் டிரைவரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரசு, ஒரு பஸ் டிரைவரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது – என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பஸ் டிரைவரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம்பிள்ளை. இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா!  (சும்மா...

10/8/13

சுய நிர்ணய உரிமையை நிராகரிக்கும்,,,,

சுய நிர்ணய உரிமைக் கோரிக்கைக்காக தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. சமானியத் ஈழத் தமிழர் ஒருவருக்குக்கூட சுய நிர்ணய உரிமை என்பதன் பருமட்டான அர்த்தம் தெரியும். இந்த நிலையில் தமிழ் ‘தேசிய’ கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கருத்தளவில் கூடப் பேச மறுக்கிறார். லண்டனிலிருந்து வெளியாகும் ஊடகமொன்றிற்கு நேர்காணல் வழங்கிய விக்னேஸ்வரன் சுய நிர்ணய உரிமை குறித்துக் கேள்வியெழுபிய போது,...

அமரிக்க இரும்புத்திரை : ஜேர்மனிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய

ஜேர்மனிய அரச உளவுத்துறை BND 500 மில்லியன் மின்னஞ்சல் தொடர்புகள், தொலைபேசித் தொடர்புகள் அடங்கிய தகவல்களை அமரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு மையத்திற்கு வழங்கியுள்ளது. அமரிக்க உளவுத்துறைக்கு ஜேர்மனிய அரசு வழங்கிய தகவல்கள் ,மின்னஞ்சல், தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய நாளாந்த மற்றும் மாதந்த தகவல்கள். அமரிக்க அரசு கொலைவெறியோடு தேடியலையும் எட்வார்ட் ஸ்னோடென் வெளியிட்ட தகவல்களின் மேற்கோள் காட்டி ஜேர்மனியிலிருந்து வெளியாகும் நாளிதழான Der Spiegel இல் இத் தகவல்...

9/8/13

இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 24 ஆவது ஆண்டு

  இலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து, ஏழ்மை நிலையினால் கல்வியை தொடரமுடியாமல் சிரமப்படும் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலிருந்தும் அன்பர்களின் ஆதரவுடன் உதவிவரும் இலங்கை மாணவர் கல்விநிதியம் இரக்கமுள்ள அன்பர்களுக்கு இந்த அறிக்கையின் ஊடாக உருக்கமான வேண்டுகோளை முன்வைக்கின்றது.அவுஸ்திரேலியா மெல்பனை தலைமையகமாகக் கொண்டியங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.அவுஸ்திரேலியாவில்...

அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ள

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது. சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கூட்டமைப்பின் கனேடிய கிளை ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று கனடா புறப்பட்டுச் சென்றனர். கனடாவில் சில தினங்கள் தங்கியிருக்கும் அவர்கள் எதிர்வரும் 12ம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல...

6/8/13

நிலத்தொடர்பினாலும்சட்டரீதியாக பிரிக்கப்படுவிட்ட தமிழரின் பூர்வீகத் தாயகம்

ஈழத் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டிற்கு எதிரான நிழல் யுத்தமாக, நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் உரிமைக்கான குரலை நசுக்கவேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் இருப்பை கேள்விக்குளாக்கவேண்டும் என்பதே ஆதிக்ககாரர்களின் சிந்தனை. அந்தச் சிந்தனையினையே சிறீலங்கா அரசாங்கம் இன்று செயற்படுத்த ஆரம்பித்திருக்கின்றது. வடக்கு மாகாணத்தில் இதற்காக தேர்வு செய்யப்பட்ட முதல் இலக்கு முல்லைத்தீவு மாவட்டம்....

3/8/13

பிரபாகரன் வாழ்க: தமிழீழம் மலரட்டும் என கோசமிட்ட வைகோ மீது ?

விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும் என்று தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வைகோ கோஷம் எழுப்பினார். பிரதமர் தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலையம் அருகே ஜெயில் கார்னர் பகுதியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வைகோ, மத்திய அரசு இலங்கை அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கோஷங்களை வாசிக்க...

2/8/13

ஆனந்த் தமிழீழம் மலரும் நேரம்

தலைவர் வரும் நேரம் நெருங்குகின்றது - புது  வரலாறொன்று எழுகின்றது  அதிரடி தாக்குதல் ஒன்று தொடங்கபடுவதட்கு முன்னர், போராளிகளுடன் சேர்ந்து தானும் ஒரு போராளியாக தாக்குதல் திட்டத்தினை போராளிகளுக்கு தெளிவு படுத்தும் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன். விடுதலைப்புலிகள் அமைப்பில் சிறப்பு தளபதிகள், சாதாரண போராளிகள் என்ற எந்த ஏற்ற தாழ்வுகளும் இருந்ததில்லை என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு சான்றாகும். போராளிகளுடன் சேர்ந்து அடர்ந்த காட்டினில் வெறும்...

1/8/13

கஞ்சா பயன்பாட்டை அந்நாட்டு பாராளுமன்ற

உருகுவேயில் கஞ்சா பாவனை சட்;ட ரீதியாக்கப்பட உள்ளது. அந்நாட்டு பாராளுமன்றில் இது தொடர்பான சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. செனட் சபையிலும் இந்த சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், கஞ்சா பயன்பாடு முழு அளவில் சட்ட ரீதியானதாக அறிவிக்கப்படும்.உலகின் எந்தவொரு நாட்டிலும் கஞ்சாப் போதைப் பொருள் பயன்பாடு சட்ட ரீதியானதாக அறிவிக்கப்படவில்லை.  இதன்படி, கஞ்சா போதைப் பொருள் பயன்பாட்டுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கிய முதல் நாடாக உலக வரலாற்றில்...

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக

  ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கப்பலைத் தாக்கி, கடற்படை உத்தியோகத்தர்களை படுகொலை செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2006ம்...