siruppiddy

23/8/13

புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மான் உயிருடன்?


சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் நேற்றைய தினம் அரியாலையில் உள்ள அவரின் வீட்டுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவத்துக்கும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுத் துறைக்குமிடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக தாயகச் செய்திகள் தொழிவிக்கின்றன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி, ஜேர்மனியிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த ச.பொட்டுஅம்மான் அவர்களின் சகோதரரை, பொட்டுமான் உயிருடன் இருக்கிறாரா? 2009 மே மாதம் 19ம் திகதிக்குப் பின் தொடர்புகொண்டாரா என்றதொனிப்பட சிறீலங்காப் புலனாய்வுத்துறை விசாரித்ததாகவும் தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் , பொட்டம்மானின் அண்ணா மாரடைப்பால் தான் மரணமடைந்தார் என்று, தாம் மருத்துவர் போல கூறியிருக்கிறார்கள். இருப்பினும் அவருக்கு தலையில் பலத்த அடி காயங்கள் இருப்பதாக அயலவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

எவ்வித பரிசோதனைகளையும் மேற்கொள்ளாது, மரணச் சான்றிதழை வழங்க போலீசார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இவரது உடல் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருப்பதாகவும் மேலும் அறியப்படுகிறது. சிறீலங்கா புலனாய்வுத்துறையால் இரகசியமாகவும், மிகவும் புத்திசாலித்தனமாகவும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாளை மறுதினம் இலங்கைக்கு நவனீதம் பிள்ளை செல்லவுள்ள நிலையில், மெளனமாக இக் கொலை நடந்தேறியுள்ளதா என்ற சந்தேகங்களும் வலுக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக