siruppiddy

28/8/13

வருகிறார்கள்யாழில் இருந்து ராமேஸ்வரத்தில் ஆயுதப்படை போலீசார்!


யாழ்ப்பாணத்தில் இருந்து பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், படகுகள் மூலம் ராமேஸ்வரம் வர உள்ளதாக இந்திய உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் சாதாரண எச்சரிக்கையாக எடுத்துவிடவும் முடியாது. தற்போது உள்ள சூழ் நிலையில், யாழில் "றோ" அமைப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் இந்திய மத்திய உளவுத்துறைக்கு கொடுத்த தகவலையே அவர்கள் தமிழகப் பொலிசாருக்கு கொடுத்திருக்கிறார்கள். நேற்றைய தினம்(27) இதனால் ராமேஸ்வரம் கோயில் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை இந்திய கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், சிலர் விமானம் மூலம் கொழும்பு சென்று பின்னர் அவர்கள் யாழ் சென்று அங்கிருந்து இலகுவாக ராமேஸ்வரம் செல்ல முடியும். தற்போது உள்ள மிக முக்கியமான மற்றும் இலகுவான கடல்வழிப் பாதை இதுவாகும். அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு சில லட்சம் ரூபாய்களைக் கொடுத்தால் போதும். அவர்களிடம் இருந்து வெடிபொருட்களையும் அதி நவீன ஆயுதங்களையும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே அவர்கள் வெறுங்கைகளோடு கொழும்பு செல்லலாம். இதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. இதனைத் தான் "றோ" ஏஜன்டுகள் தற்போது தமிழ் நாட்டுப் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள். தமிழ் நாட்டில் இயங்கும் கியூ பிரிவுப் பொலிசார் சிவில் உடையில் ராமேஸ்வரம், மற்றும் அதனை அண்டிய கடல் கரைகளில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டங்களில் இந்தியா, இவ்வளவு தூரம் ஆச்சமடையவே இல்லை. காரணம் அவர்கள் ஒருபோதும் தமிழ் நாட்டை தாக்க மாட்டார்கள் என்பது தெரியும். புலிகளை அழிக்க உதவிய இந்தியா தற்போது பெரும் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. இலங்கையில் ரஷ்யா, சீனா, பாக்கிஸ்தான், போன்ற பல வல்லரசுகள் ஊடுருவியுள்ளது. இது நாள்வரை, இந்தியா பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை தான் பாதுகாக்கவேண்டி இருந்தது. ஆனால் தற்போது தமிழக எல்லையையும் பாதுகாக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக