விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும் என்று தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, வைகோ கோஷம் எழுப்பினார்.
பிரதமர் தமிழகம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலையம் அருகே ஜெயில் கார்னர் பகுதியில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்தில் வைகோ, மத்திய அரசு இலங்கை அரசு மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக கோஷங்களை வாசிக்க போராட்டத்தில் பங்கேற்றோர் திரும்பக் கூறினர்.
அப்போது, "விடுதலைப் புலிகள் வாழ்க, பிரபாகரன் வாழ்க, தமிழ் ஈழம் மலரட்டும், விடுதலைப் புலிகள் வெல்லட்டும்´ என்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான கோஷங்களை, வைகோ எழுப்பினார்.
இந்த கோஷங்களை அப்படியே உளவுப் பிரிவினர் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
திருச்சி மாநகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக, இது போன்ற நேரங்களில் பேசுவது சட்டப்படி தவறு தான்.
ஆயினும், தற்போது தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றன.
வைகோ பேசியதை, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அறிக்கையாக அனுப்பி விடுவோம்.
அதன் மீது நடவடிக்கை எடுத்து, வழக்கு தொடர்வது குறித்து, அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக