பிரபாகரனின் மறு அவதாரமாகவே இன்று விக்கினேஸ்வரன் உருவெடுத்துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லியனகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விக்கினேஸ்வரனின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லியனகே இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குருவைக்கல்லு என்ற தமிழ்ப்பெயரே இன்று குருணாகல் என்று திரிபடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் குருணாகல் அத்துகல்புர எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.
2012 கணக்கெடுப்பின்படி இலங்கையில் எட்டு மாவட்டங்களில் பெளத்தர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வடமேல் மாகாணத்தில் இது அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
சிங்களவர்களை அழிக்க வேண்டுமானால் சிங்களத் தன்மையை இல்லாமற் செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் பெளத்த பாரம்பரியத்தையும் பழமையையும் ஏனையவருக்கு விற்று வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தினார்.
இந்தியா அல்ல யுத்தத்தை வெற்றி கொள்ள உதவிய நாடு என்று தெரிவித்த லியனகே எமது இராணுவ வீரர்களின் முயற்சியே வெற்றி பெற்றுத் தந்தது எனவும் குறிப்பிட்டார். யுத்தப் பிரதேசத்தின் 39 அரச சார்பற்ற அலுவலகங்களில் நவீன பங்கர்கள் காணப்பட்டன எனவும் இவர்களே இன்று ஜெனீவா சென்று தம்மைத் தூற்றுகின்றனர் எனவும் தெரிவித்த அவர் பாதுகாப்புச் செயலாளரைக் கொலை செய்ய இவர்களே வடக்கிலிருந்து குண்டை தங்கள் வாகனத்தில் கொண்டு வந்தனர் என்றும் குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக