siruppiddy

30/8/15

தனாவின் தமிழை தலைவன் காப்பான்...

ஆழி அலை ஓய்வதில்லை உணர்வுகள் வீழ்வதில்லை… தலைவன் மாழவில்லை தமிழன் புகழ் மங்குவதில்லை….. இரத்தப்பலி கேட்டமண் பூச்செடி வளர்க்குது….. கொய்தின்புறுவதற்கல்ல தியாகிகளை வணங்குவதற்கு…. தெய்வங்கள் காக்க தமிழை தலைவன் காப்பான் ஒருநாள்….. ஆக்கம் முல்லைக்கவி தனா இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

அரவிந்தின் வருத்தமும்,வறுமையும்....

விழிகள் உறங்க மறுத்த இந்த இராத்திரியில் தான் மனதும்,மூளையும் முட்டி மோதிக்கொள்கின்றன. சடலங்களை அள்ளிக்குவிக்கும்-ஓர் சம்பவத்தின்போது ஏற்படும் பயமும், திகிலும்,கவலையும், கலந்த ஒரு தருணம். தாலி கட்டியவனயும் தான் பெற்றவர்களையும் ஈழத்தின் இறுதிப்போரில் புதைத்த நிகழ்ச்சிக்கு பின் காணப்பட்ட வேதனைகள். திருமணம் செய்வதாய் கூறி அவன் செல்வங்களை அழித்து ஏமாற்றிச் சென்றதும் அதனால் மகன் தற்கொலை பண்ணியதும். மீதி இருப்பவர்கள். நான் வியாதிப்பட்டவள்...

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் காகங்கள்

கை விடப்பட்டது கல்லறைகள்.. காணாமல் போனது பல கல்லறைகள். தேடுவாரற்றனர் காவல் தெய்வங்கள். ஆதிக்க வெறியரின் ஆட்டமும் ஆணவமும் இராணுவத்தின் அடாவடித்தனமும் அரங்கேறிய.ஆடுகளம் மாவீரரின் கல்லறைகள்.. கண்ணீர் அஞ்சலிக்காய் கார்த்திகையில் கூடிப் பின் கூறுகளாய் துருவங்களாய் செயல் இழந்தவர்களாய்.. நடைப் பிணமானோம். மாவீரரின் கனவுகள் கைவிடப் பட்டதாய் கைமாறுதல்கள் ஏதுமின்றி கனவுலகில் மிதக்கின்றோம்..! ஒற்றுமையின் உன்னதர்களை விடியல்களின் வெளிச்சங்களை உயிர்...

28/8/15

கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் திரு ஓணம்.பண்டிகை.!

ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு விழா இனிக்கும் திரு விழா! கேரளத்தில் ஓணம் என்றும் பெரு விழா..! சோர்வுகள் கலைத்து ஒற்றுமை தளைத்து ஒருங்கே இணத்து வடிவம் பெறும் வண்ணத் திருவிழா..! கோலங்களின் எழுச்சியும் கோதையரின் ஆற்றலும் கைத்திறன் நேர்த்தியும் வர்ண வர்ணக் கோலங்களாய் வீதியெங்கனும் காட்சிகளாய் மெருகு பெறும் திருவிழா..! கலைநயங்களின் ஆரவாரங்கள் நாட்டிய நடனங்கள் நர்த்தகிகளின் வித்தகத் திறனால் அபிநயங்களாய் அரங்கேறும் திருவிழா.! ஓணம்...

27/8/15

ஜெசுதா யோயின் அரைவயிறாயினும் ஆனந்தம் கண்ட நாள்

சுற்றிலும் சுவர்கள் மேல் நோக்கி என் கண்கள் வெறித்த பார்வை..! மெல்லிதாக ஒரு மின்மினி வெளிச்சம் எண்ணங்கள் பின்னோக்கின…. …….!! மண்ணெண்ணெய் குப்பி விளக்கு நினைவுக்கு வந்தது காற்றில் அதன் ஒளி அசைந்து மங்கிய போதும்.. உற்றுப் படித்த நாட்கள். தெளிவான சிந்தனை சுற்றிலும் உண்மைகள் சோர்வில்ல கண்கள்  அரைவயிறாயினும் ஆனந்தம் கண்ட நாள் அடுத்த நாளை பற்றிய சிந்தனை வந்ததில்லை அன்பான உள்ளங்கள் அருகில் …. இன்னும் எத்தனை எத்தனை ….:; மீண்டும்...

26/8/15

ஜோடிகள்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் .!

 மௌன மொழி மெல்லிய நாணம். சற்று சலனம் பறக்கும் நிலை மயக்கும் மாலை மனங்களின் ஊமை நாட்டியம் மாயம் காயம் தாண்டிய தெய்வீகம் காதலாகி நிதம் கண்ட கனவுகள் ஓராயிரம்..! எண்ண அலை தெளிவான நீரோடை அழகிய முடிவும் முகமலர்வும் உணர்வுகளின் உராய்வில் சத்தங்கள் இல்லாத இதழ் யுத்தங்கள் இனிமை சேர்க்கும் இனிய இரவுகள் வாரி அணக்கும் வசந்தங்கள் வாழ்க்கையில் தனி சுகம் காணும் ஜோடிகள்..!  ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி   இங்குஅழுத்தவும்...

24/8/15

கவிமகன்.இ எழுதிய விழிநீரல் பூத்த செந்தாமரை

ஆற்றங்கரை மணலில்  நான் கிறுக்கிய கோடுகள்  உன் பெயரை உரைத்து சிரித்து மகிழ்ந்தன என் உதடுகளுக்குள் அல்லாமல் அடி மனசில் உன் நாமம் பதிந்து கிடந்தது இந்த அந்நிய வாழ்வின் பொழுதொன்றில் தான் நான் உன்னை உணர்ந்தேன் தெரியா வதனமாய் தான் என் மனமென்னும் விளை நிலத்தில் நீ நாடா கத்தரித்தாய் எழுதுகோல் கொண்டு  உருவகித்த எழுத்துக்களால்  உன் எண்ணங்களில் நான்  மஞ்சமிட்டுக் கொண்டேன்  என்ற பஞ்சான  உன் நினைவுகளை  என்...

23/8/15

இன்று முதல் .நல்லாட்சிக்கான புதிய தேசிய அரசாங்கம் இயக்கம்

இதன்படி 70 பேரைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொள்வர். இந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 95 பேரில் 50பேர் புதிய தேசிய அரசாங்கத்தில் பங்கேற்கவுள்ளனர் அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக வரையறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது 40 பிரதியமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர் இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது தேசிய அரசாங்கம்...

21/8/15

தாம்பத்தியம் இணுவை சக்திதாசனனின்

எல்லாமடங்கி  நீலா மட்டும் இவனோடு விழித்தபடி  அரைப் புன்னகையில்  அம்மணமாய் தெரிந்தது பூமி ஊரை விட்டு வந்தபின்  புதுசு புதுசாய் வான வெளியில்  வேடிக்கைகள் … மத்தாப்பாய் சில கணங்கள்  வேடிக்கை காட்டி விட்டு  தோப்புக்குள் விழுந்து நொருங்கும் சத்தங்கள் விதம் விதமான வார்ப்புக்களில்  விடியல் பொழுதுகள்  விழுந்து நொருங்கிய மத்தாப்பு  விழுந்ததுக்கான தடயங்களே இல்லை கை கோர்த்தபடி ஆணும் பெண்ணும் நடைபயிலும்...

18/8/15

நினைத்தாலே இனிக்கும்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்.!

சிந்தையில் எங்களூர் சந்தை. வருடங்கள்  தாண்டினாலும் மறக்காத முகங்கள்….! கலகலப்பானவர் ஆனாலும் மிகவும் கண்டிப்பானவர்கள். அன்பானவர்கள் ஆனாலும் அதட்டக் கூடியவர்.! மீனைக் கூறியும் கூறாமலும் விற்கும் திறன் வாய்ந்தவர். இரக்கம் நிறைந்தவர் ஆனாலும் சொன்ன விலையில் நின்று இறங்காதவர்…! நியாயம் விலையில் நிறைய இருக்கும் அறா விலை கேட்டால் அறம் பாடத் தொடங்குவர் ஆனாலும் நல்லவர்….! நாசூக்கான நக்கலும் நளினமும் கேட்டு நாணிக்குறுக...

17/8/15

தேர்தல் வாக்களிப்பு நிறைவு: இறுதி வாக்களிப்பு வீதம்

2015 பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது. மிக அமைதியான முறையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் வாக்களிப்பு வீதம் 4 மணி வரையில் பின்வருமாறு அமைந்திருந்தது. யாழ்ப்பாணம் – 60% வன்னி – மன்னார் – 70% மட்டக்களப்பு – 60% திருகோணமலை – 75% திகாமடுல்ல – 65% கொழும்பு – 65% கம்பஹா – 70% கண்டி – 75% மாத்தளை – 70% நுவரெலியா – 70% களுத்துரை  – 65% காலி – 70% மாத்தறை – 70% புத்தளம் – 66.5% குருநாகல் – 68% பதுளை...

15/8/15

உங்கள் அர்த்தனனின் இயல்பு...

அப்புறம்!!! நான் என்ன‌ கதையா சொல்லிக்கிட்டிருக்கன் லூசாடா நீ!! அமிர்தம் குழைத்த‌ அவஸ்த்தைக்காகவே மறுபடியும் கேட்டுக்கொண்டேன்.. அப்புறம்!! இப்போதும் யாரோ ஒருவர் அதை பிரயோகிக்க‌ முயலுகையில் என் பிரபஞ்சம் உடையும் ஓர் பிரமை… எங்கிருக்கிறாய் முடிந்தால் மொழிந்து போ! சமுத்திர அலையின் நுரையில்… உன் காலடித்தடங்களின் இருப்பிடங்களை கவர்ந்துகொண்டே வந்துவிடுகிறேன் உன் இருப்பிடம்…   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

வழி மீது விழி கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின் ..!

வலியோடு இவர்கள் பெரும் பகுதி கழிந்ததும்\ கழிவதும் கழியப் போவதும் எழுதாத விதியாகும்..! அன்றொரு நாள் காதலனுக்காய் கடிதக்காரனுக்காய் பத்திரிகை! பால் காரனுக்காய் க.பொ.த பரீட்சை முடிவுக்காய் கால் கடுக்கக் காத்திருப்பு..! பிறிதொரு நாளில் கைப்பிடித்தவன் வருகைக்காய் மல்லிக்கைப் பூவுக்காய் புன்னகை பூத்த படி கனவுகளோடு காத்திருப்பு..! அராஜகத் தாண்டவம் தலை விரித்தாடிய வேளைகளில் காரியாலயத்தால் கணவன் வரவில் தப்பேதும் நடந்திடக் கூடாதெனும் ஏக்கச்...

13/8/15

சிறுதை நோர்வே உஷாவின் ஆருயிரே,,,,,

கோடைகாலம் என்கிற நினைவிருக்கிறது. ஆனாலும் சின்னதாய் ஒரு நடுக்கம் பரவி உடல் சில்லிடுகிறது. போர்வையை யாராவது இழுத்து விட மாட்டார்களா என்று தோன்றிய மறு கணமே வியர்த்துக்  கொண்டு வருகிறது. மூச்சு அடிக்கடித் திணறுகிறது. அப்போதெல்லாம் என்னைச் சுற்றி ஆள் நடமாட்டமும் சலசலப்பும் அதிகமாகிறது. பின்னர் ஆழ்ந்த அமைதி. என்னுள் ஏதோ செயலிழந்து போய்க் கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர்ந்து கொள்ள முடிகிறது.  வெளியே என் ரங்கன் மெல்லிய குரலில் பேசிக்...

11/8/15

அரவிந்தின் வஞ்சககாதல்‬இறுதி நிமிடங்கள்

 இறுதி  நிமிடமேனும் உன் அருகாமை தருவாயா!! நீ மொழியும் வியாக்கியானத்தை வேதெமென‌ மொழிபெயர்க்க‌ விரும்புகிறேன்! நிசப்தத்திலெழும் உன் குறட்டையை இசைத்தட்டாக்கி இன்பத்தின் பரிணாமங்களை பிரித்தறிய‌ பிரியப்படுகிறேன்!! போதையில் நீ உளறுகையில் ஒலிப்பேழையில் உள்ளீர்த்து பட்டிமொன்றில் உன் குரல்  ஒலித்திட செய்திடும் உன்மத்தம் எனக்கு… நீதானே  இறுதிக்கணங்களில் எல்லோருக்குமாய் விடையளிப்பாய்!! என்னை மட்டும் வெறுக்காதே உன்...

7/8/15

குண்டு துளைத்த காருடன் ஊர் ஊராகப் பிரசாரம் செய்யும் பொன்சேகா!

ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று திருகோணமலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருகோணமலை நகரசபை  மண்டபத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பரப்புரைக் கூட்டத்தில் பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகா பங்கேற்றிருந்தார். இதன்போது, 2006ஆம் ஆண்டு கொழும்பில் இராணுவத் தலைமையகத்தில், தன் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது,  தான் பயணம் செய்த காரையும்...

2/8/15

இ. கவிமகன். எழுதிய கோடை விடுமுறையில் ஊருக்கு ஒரு உலா

வரிசை கட்டி சென்ற  வாகனங்கள் சுமந்து  வந்தன அந்நிய  நாட்டு வரவுகளை நானும் அன்று தான் வந்து சேர்ந்திருந்தேன் சுதந்திர தென்றலை சுவாசிக்க விரும்பி ஆனாலும் எனது ஆவல் செத்து போன காலமாக கடந்து கொண்டிருந்தது அந்த தேசம் எங்கும் அந்நிய வாசனை நாத்தமெடுத்து பல காலக் கழிவில் மீண்டிருக்கும் என்  ஊர் உணர்வுகளில்  நான் மிக வேண்டாதவனாக  தோற்றம் கொண்டிருந்தேன் பலகாலம் கம்பி கூண்டில்  அடைபட்ட கிளியாக  சந்தேகித்து...