எல்லாமடங்கி
நீலா மட்டும் இவனோடு விழித்தபடி
அரைப் புன்னகையில்
அம்மணமாய் தெரிந்தது பூமி
ஊரை விட்டு வந்தபின்
புதுசு புதுசாய் வான வெளியில்
வேடிக்கைகள் …
மத்தாப்பாய் சில கணங்கள்
வேடிக்கை காட்டி விட்டு
தோப்புக்குள் விழுந்து நொருங்கும் சத்தங்கள்
விதம் விதமான வார்ப்புக்களில்
விடியல் பொழுதுகள்
விழுந்து நொருங்கிய மத்தாப்பு
விழுந்ததுக்கான தடயங்களே இல்லை
கை கோர்த்தபடி ஆணும் பெண்ணும்
நடைபயிலும் அற்புதம்
பூங்காவனமாக … .தம்பதிகள் !
*வாழ்ந்தால் இப்படி யெல்லோ
அங்கலாய்த்தபடி
இவன் மனம்*
சில நாட்களாக வில்லை தூரம்
இடை வெளிகள் ….
கையை விட்டவர்கள் தனித் தனியாய்
நடை பயில …..
காணவில்லை பின் இருவரையும்
சில கால இடை வெளியில்
கண்டெடுத்து தந்தது காலம்
நாயோடு அவன் மட்டும் நடு வழியில்
எங்கே உன் அவள் என்றேன்
விவாகரத்தாகி விட்டது என்றான் அவன்
கால இடை வெளி கடந்தாலும்
கை பிடித்து நடக்காது அன்பு பிடியில்
காலங்கள் கடக்கும் தன் இனிய உறவில்
இளகிப் போனது இவன் மனம் !
ஆக்கம் இணுவையூர்sathiசக்திதாசன் டென்மார்க்












0 கருத்துகள்:
கருத்துரையிடுக