விழிகள் உறங்க
மறுத்த இந்த
இராத்திரியில் தான்
மனதும்,மூளையும்
முட்டி மோதிக்கொள்கின்றன.
சடலங்களை அள்ளிக்குவிக்கும்-ஓர்
சம்பவத்தின்போது
ஏற்படும் பயமும்,
திகிலும்,கவலையும்,
கலந்த ஒரு தருணம்.
தாலி கட்டியவனயும்
தான் பெற்றவர்களையும்
ஈழத்தின் இறுதிப்போரில்
புதைத்த நிகழ்ச்சிக்கு பின்
காணப்பட்ட வேதனைகள்.
திருமணம் செய்வதாய் கூறி
அவன் செல்வங்களை
அழித்து ஏமாற்றிச் சென்றதும்
அதனால் மகன் தற்கொலை
பண்ணியதும்.
மீதி இருப்பவர்கள். நான்
வியாதிப்பட்டவள் என்று
விட்டுச்சென்று பழிங்குகளில்
வாழ்வதும்.
வருத்தமும்,வறுமையும்
ஏமாற்றமும்,துரோகங்களும்
ஊராரின் நகைப்பும்
எல்லாவற்றுக்கும்
கவலை ஒன்றுதானே
கதாபாத்திரம்.
எல்லாவற்றையும் இரைமீட்டவளாய்
துக்கத்தின் விளிம்புவரை
கவலைகள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்க
விடியும் சேவலின்கூவலோடு
பாழாய்ப்போன பழைய
குசினிக்குள் நுழைகிறாள்
தேநீருக்காய்
இப்படி எத்தனை நாள்
எத்தனை இரவுகள்
இருந்திருப்பாளோ??
இந்த தாய்.
ஆக்கம் நெடுந்தீவு அரவிந்தின்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக