கை விடப்பட்டது
கல்லறைகள்..
காணாமல் போனது
பல கல்லறைகள்.
தேடுவாரற்றனர்
காவல் தெய்வங்கள்.
ஆதிக்க வெறியரின்
ஆட்டமும் ஆணவமும்
இராணுவத்தின்
அடாவடித்தனமும்
அரங்கேறிய.ஆடுகளம்
மாவீரரின் கல்லறைகள்..
கண்ணீர் அஞ்சலிக்காய்
கார்த்திகையில் கூடிப்
பின் கூறுகளாய்
துருவங்களாய்
செயல் இழந்தவர்களாய்..
நடைப் பிணமானோம்.
மாவீரரின் கனவுகள்
கைவிடப் பட்டதாய்
கைமாறுதல்கள்
ஏதுமின்றி கனவுலகில்
மிதக்கின்றோம்..!
ஒற்றுமையின்
உன்னதர்களை
விடியல்களின்
வெளிச்சங்களை
உயிர் உள்ளவரை
போற்றும் கடன்
நாம் மறந்தாலும்
காகங்கள் மறக்கவில்லை
கல்லறைகளில் கூடித்
தினம் கரைகின்றன..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக