இதன்படி 70 பேரைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொள்வர்.
இந்தவகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 95 பேரில் 50பேர் புதிய தேசிய அரசாங்கத்தில் பங்கேற்கவுள்ளனர்
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30ஆக வரையறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது
40 பிரதியமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்
இந்தநிலையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது
தேசிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் திகதியுடன் முடிவுக்கு வரும்.
இதன் பின்னர் இரண்டு தரப்பும் விரும்பினால் அதனை நீடித்துக்கொள்ளமுடியும்
இந்தநிலையில் புதிய தேசிய அரசாங்கம் அடிப்படை உரிமைகள், ஊழல் ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாசாரம் இணைசாரா கொள்கை அபிவிருத்தி என்ற
அடிப்படையில் செயற்படவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக