siruppiddy

31/8/14

பாலியல் கல்வி! இங்கிலாந்தில் கோரிக்கை! - கட்சிகள் ஆதரவு!

 பிரிட்டன் பள்ளிகளில் உறவு முறைகள் மற்றும் செக்ஸ் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது. வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான லேபர்(தொழிற்)கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறியுள்ளது. லிபரல் டேமாக்ரட்ஸ் தேர்தல் திட்டத்தின்படி, 7 முதல் 11 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சி நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு செக்ஸ் கல்வி மற்றும் உறவுமுறைகள் குறித்து கற்றுத் தரலாம் என்று லிபரல் டேமாக்ரட்ஸ் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சர் மேவிட் லாஸ் கூறியுள்ளார்.
தற்போது உள்ளூராட்சியின் நிர்வாக அமைப்புக்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி சொல்லித் தரப்படுகிறது, ஆனால் பிரிட்டிஅரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளிக்கூடங்களிலும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் செக்ஸ் கல்வி சொல்லித் தரப்படுவதில்லை. பாலியல் கல்வி ஆறாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளில் சொல்லித்தரப்படாவிட்டாலும், ஏழாம் வகுப்பு முதல் கற்பிக்கும் உயர்நிலைப்பள்ளிகளில் பாலியல் கல்வி கட்டாயம் சொல்லித் தரப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

13/8/14

பெளத்த இனவாதிகளுக்கும் நவநீதம்பிள்ளை உச்சியடி!

  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், ஐ.நா.விசாரணை நீதியாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஏராளமான விட யங்கள், இலங்கைக்கு வெளியே உள்ளன. இந்த விடயங்களை ஐ.நா. விசாரணைக்குழு திரட்டிக்கொள்ளும். இதனால், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளாமலே ஐ.நா. விசாரணைக்குழுவால் சிறப்பான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்மான சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன; இது தொடர்பில் நீதியான விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று இறுதி யுத்தம் நிறைவடைந்த கையோடு இலங்கைக்கு வந்த ஐ.நா. செயலாளர் பான் கீ - மூன் நியமித்த நிபுணர் குழு (தருஸ்மன்) அன்று வலியுறுத்தியிருந்தது. ஆனால், இலங்கை அரசு இந்தக் கருத்துக்கு செவிசாய்க்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வந்ததனால் இந்த வருடம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. விசாரணையை எதிர்கொண்டது. எனினும், இதனையும் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசு, ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்து நாடாளுமன்றில் தீர்மானமொன்றை நிறைவேற்றியது. அத்துடன், நவநீதம்பிள்ளைக்கு எதிராகவும், ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு எதிராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள - பெளத்த இனவாதிகள் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வடகொரியா, சிரியாவுக்குள் ஐ.நா. விசாரணைக்குழு செல்லாவிட்டாலும் விசாரணைகள் இடம்பெற்றன என்றும், ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனு மதிக்காமல் விடுவதால் தமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். போர்க்குற்ற மீறல்களுக்குக் காரண மானவர்களைக் கண்டறிவதற்கும் பொறுப்பாளிகளாக்குவதற்கும் இந்த விசாரணை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ள இந்தக் கருத்துகளின் ஊடாக இலங்கை மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நீதியாக நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. ஐ.நா. விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்துவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரச தரப்பினர், சிங்கள - பெளத்த இனவாதிகள் ஆகியோருக்கு நவநீதம்பிள்ளையின் பதில் உச்சியடியாக அமைந்துள்ளது. ஐ.நா. விசாரணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மாலான ஒத்துழைப்பை வழங்கும். இதேவேளை, ஐ.நா. விசாரணை ஊடாக தமிழர் தீர்வைக் காண்பதற்கான வாசல் திறக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் நம்பியிருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார் எம்.பி.சுரேஷ்

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

3/8/14

இலங்கைத் தூதரகம் முற்றுகை: மகிந்தவின் உருவப் பொம்மை எரிப்பு

 தமிழக முதலமைச்சரை இழிவுப்படுத்திய இலங்கை அரசாங்கத்தை கண்டித்து சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடம் நோக்கில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தால்,  தூதரகத்திற்கு சற்று தொலைவில் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியப் பிரதமரையும் தமிழக முதலமைச்சரையும் இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டமை முழு இந்தியாவையும் இழிவுப்படுத்தும் செயல் என தமிழக வாழ்வுரிமை கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு

1/8/14

கிளிநொச்சியில் இராணுவத்தின் “நாய் படையணி”

சிறிலங்காப் படையினரின் 66 டிவிசனின் 1 வது பிரிகேட் படையினர் இந்த நாய் படையணியை உருவாக்கியுள்ளனர். இதற்கான தொடக்க விழா ஓரிரு நாட்களுக்கு முன் நடைபெற்றது அத்துடன் இது தொடர்பான செய்தியை மறைத்திருந்த நிலையிலே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மற்றைய செய்திகள்