siruppiddy

30/9/15

சிவப்பு நிலா கவிஞர்சுபா ரஞ்சனின்


ஒளிரும் நிலவே
வெண்ணிலவே
எத்தனை முகத்திற்கு
உவமையானாய்.

எத்தனை கவிஞர்க்கு
காதலியானாய்
புரிய முடியா மனிதர்க்கெலாம்
தூது சென்றாய்..

வளர்வதும் தேய்வதும்
வகுத்த விந்தையின் நியதியோ
நேசித்து கவி பாடும்
இயற்கையின் விந்தையோ

அபூர்வமாய் உன்
கன்னங்கள் சிவக்க
கலையை உணர்ந்து
கண்கள் விரிகிறதே..

நிலவே உனை நின்று ரசித்தால்
ஆன்மாவில் அடைபட்ட 
துன்பம் எல்லாம்
எங்கோ இந்தப் பெருவெளியில்
தொலைகிறதே…


                                                     ஆக்கம் கவிஞர்சுபாரஞ்சன் 

25/9/15

அமெரிக்க யோசனைக்கு பிரதமர் ரணில்அனுசரணை! - த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கை தொடர்பில் நேற்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போர்க்குற்ற யோசனைக்கு தாமும் அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்ற அடிப்படையில் அமெரிக்க சார்பு நாடுகளால் நேற்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்த யோசனையை அடுத்து, எதிர்காலத்தை எந்த அச்சமும் இன்றி எதிர்கொள்ள முடியும் என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையினால், சர்வதேச சமூகத்துடன் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான இணக்கப்பாட்டை எட்டமுடிந்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைக்குள் சர்வதேச நீதிபதிகளும் பங்கேற்கும் வகையில் இது அமைந்துள்ளது என்று ரணில் தெரிவித்தார்.

எனவே இந்த யோசனைக்கு அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கமும் தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை உரிய அரசியல் அபைம்பு மாற்றங்களை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவும் அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்க பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்ட அமெரிக்காவின் புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி அமெரிக்கா கடந்த வாரம் வெளியிட்ட நகல் பிரேரணை வரைபில் காணப்பட்ட 26 பந்திகள் 20 பந்திகளாக குறைக்கப்பட்டு் திருத்தங்களுக்குள்ளாக்கப்பட்ட பிரேரணை ஜெனிவா நேரப்படி நேற்று 5.15 மணியளவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா நேற்றைய தினம் தனது பிரேரணையை சமர்ப்பித்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

குறிப்பாக அப்பிரேரணையில் சர்வதேச குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் , விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும்.

இலங்கையின் நீதித்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இந்நீதிமன்ற செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்திற்கும், சர்வதேசத் தரப்பினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பூரண பங்களிப்பை வழங்கவுள்ளது.

அதேநேரம் அரசாங்கம் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடு என்ற வகையில் இவ்விடயங்களை கருத்திற்கொண்டு தனது ஒத்துழைப்புக்களை வழங்கி முழு அளவிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

மேலும் இப்பிரேரணையில் சிபார்சு செய்யப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக நீதிமன்றம் உருவாக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனூடாக கடந்த காலத்தில் காணப்படும் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கானவொரு வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளது.

இவ்வரைபானது பல்வேறு கடினமான நிலைமைகளில் கருத்தொற்றுமை மிக்கதாகவுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட தரப்பிற்கான பொறுப்புக்கூறும் தரப்பினர் என்ற அடிப்படையிலும் அவர்கள் திருப்திகொள்ளும் வகையில் சொற்றொடர்கள் அமையவேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தோம்.

ஆகவே இ்ந்த வரைபில் கூறப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கத்திற்கான நீண்ட பயணத்தின் ஆரம்பமாக அமையும்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுத்து அவர்களின் நம்பிக்கைகளை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து அரசாங்க மற்றும் அரச சார்பற்ற தரப்பினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

ஐ.நாவில் வெளியான அமெரிக்க திட்ட வரைவு...! எதிர்பார்ப்பில் ஏமாற்றமா.....?

இலங்கை தொடர்பிலான அமெரிக்க பிரேரணை ஜெனிவா நேரம் இன்று மாலை 5;30 மணிக்கு வெளியாகியுள்ளது.

இத் திட்ட வரைவில் எதிர்பார்த்ததை விட சில சரத்துக்கள் வித்தியாசமான முறையில் மாற்றி திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கலப்பு நீதி மன்றம் எனக் குறிப்பிடப்பட்டிருந்த சொற்பதம் விஷேட சபை என மாற்றப்பட்டதுடன் அதனை விசாரிக்கும் நீதிபதிகள் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ் வரைவு எதிர்வரும் 30ம் திகதி சபையின் விவாதிக்கப்படும்போது மேலும் ஒரு சில மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் போதிலும் , இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படாமல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டே நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் கலப்பு நீதி மன்றம் என்னும் சொற்பதம் நீக்கப்பட்டமையானது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜெனிவா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2ம் இணைப்பு

போர்க்குற்றம் தொடர்பில் திருத்த யோசனை அமெரிக்க சார்பு நாடுகள் முன்வைத்தன. ஹைபிரைட்டுக்கு பதில், இலங்கையின் நீதித்துறையுடன் சர்வதேச பங்களிப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த யோசனையில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று நகல் யோசனை ஒன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்வதேச சட்ட உரிமை மீறல்கள், மனித உரிமைமீறல் போன்றவற்றை விசாரணை செய்ய இலங்கையின் இறைமைக்கு உட்பட்ட பாரபட்சமற்ற இலங்கையின் நீதித்துறை பொறிமுறை உருவாக்கப்பட்டு; அதில், சுயாதீன நீதி நிறுவனங்கள் இணைக்கப்படவேண்டும்.

அத்துடன் பொதுநலவாய நாடுகள் அலுவலகம், சர்வதேச நீதிபதிகள், சர்வதேச பாதுகாப்பு சட்டத்தரணிகளும் பங்கேற்கவேண்டும் என்றும் யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்ட ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்ற அம்சம் இதில் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு ஐக்கிய அமரிக்கா, முன்னாள் யுகோஸ்லேவியா குடியரசு, மெசிடோனியா, மொன்டிக்ரோ, பிரித்தானியா, வட அயர்லாந்து ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

“நல்லிணக்கத்தை மேம்படுத்தல்” இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இந்த யோசனையில் திருத்தங்களை முன்வைக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனையில், இலங்கையில் தனிப்பட்டவர்கள், மனித உரிமை காப்பாளர்கள், மதத்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நீதி அமைப்பில் இலங்கையில் அனைத்து மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டை வரவேற்பதாகவும் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த யோசனையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் கண்காணித்து தமது 32வது அமர்வில் அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டும்.

இதனையடுத்து 34வது அமர்வில் இது தொடர்பில் கலந்துரையாடப்படவேண்டும் என்றும் திருத்த யோசனையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



21/9/15

ராணுவம் இசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சுட்டுப் படுகொலை செய்தது ஐ.நா. அறிக்கை

 இலங்கை ராணுவத்தால் விடுதலைப் புலிகள் இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா உயிருடன் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டார் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதி யுத்தத்தின் போது இலங்கை

ராணுவம் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை கல்லம் மெக்ரே ஆவணப்படமாக்கினார். இந்த ஆவணப்படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள்

இயக்க தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்து பின்னர் படுகொலை செய்த வீடியோ, புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் இதை இலங்கை அரசும் ராணுவமும் தொடர்ந்து மறுத்துவந்தது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்து படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சோபனா தர்மராஜா என்ற

இசைப்பிரியா, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செய்தி வாசிப்பாளர். அவர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான ஏராளமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மே 18-ந் தேதி காலை வட்டுக்காவல் பாலத்தின் வடக்கே நந்திக் கடல் பகுதியில் இருந்து

 இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் கைது செய்ததை பலரும் நேரில் பார்த்திருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் கைது செய்வதை ஒரு வீடியோ காட்சி

உறுதிப்படுத்துகிறது. அப்போது இலங்கை ராணுவம் அவர் போர்த்திக் கொள்ள மேலாடை ஒன்றையும் கொடுத்ததும் அதில் இடம்பெற்றுள்ளது. அந்த மேலாடை போர்த்தப்பட்ட நிலையில் இளம்பெண் அருகே இசைப்பிரியா உட்காரவைக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதேபோல்

 இசைப்பிரியா உயிரிழந்த நிலையில் சடலமாக இருக்கும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. இதில் இசைப்பிரியாவின் உடல் உறுப்புகள் தெரியும் வகையில் உடைகள் திட்டமிட்டே விலக்கி

வைக்கப்பட்டுள்ளன. இவற்றை தடவியல் துறையினர் ஆராய்ந்த போது இலங்கை ராணுவத்தால் இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

20/9/15

உயிரே உயிரே காணொளிப்பாடல்

இளமையின் காலங்கள் என்பதே காதல் என்ற ‌ காலம் அதற்கு இந்தப்பாடலும் களமாகிறது காதலியை
வர்னித்து உருவாகியுள்ள இந்ப்படல் அவளைப்பற்றி வர்ணிக்கும் பாடலாகவும் சொல்லிசை கொண்டு இணைந்தபாடலாகவும் இனிமையான குரல்வளம் கொண்டபாடலாவும் உள்ளது,

இதில் பாடிய கலைஞர்கள் டானியல் யோ. கடும்குரல் கூ பிரகலன்ஆவார்கள் இவர்கள் இன்னும் தமிழ் மீது பற்றுள்ள வரிகளுடன் கலை வானில் வலம்வர வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

19/9/15

வருந்துகிறார் கோத்தபாய புலிகளைத் தோற்கடித்ததற்காக ?

விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ. அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக 
அவர் 
கூறியிருக்கிறார். ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இ வெளியிட்ட அறிக்கையையும் அவர் நிராகரித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14/9/15

மாசிலா நயினைவிஐயனின் தியாகத்தின் நெடும் பயணம்

ஆத்மாவில் ஆணிகள்
அறையப்படும் 
மானம் மரியாதை 
பணத்தால்
அளக்கப்படும்
காற்றுவெளியிடை
கண்ணீர் நிறைக்கும்
இதயத்தை கூறுபோட
எத்திசையும் முயலும்
எற்றும் இறக்கும்
சிந்தனைச்சிறகுகள்
ஒடியும் ஒடிக்கப்படும்
உள்ளொளி பரப்பி
இறையுணர்வு பரவும்
காலச்சக்கரம் அத்தனையும்
அள்ளிச்செல்லும்
மீண்டும் கொட்டும்
தீப்பொறியில் இதயம் சிக்கும்!
திரும்பும் பக்கமெல்லாம்
சிதறிக்கிடக்கும் !
துரோகங்கள் துரத்தும்
நிணங்கள் துழைக்கும்
காலம் கனியும்
மீண்டும் கருக்கும்
சொந்தங்கள்
சொல்லாமல் போகும்
தீயிடை வீழ்ந்த
புழுவாய்த் துடித்து
அக்கினிக்குஞ்சாய்
அகிலம் வெளிக்கும்
தியாகத்தின் பாதை
கண்டவனன்றி
வெற்றுவெளிகள்
விளைச்சல் தரா
விண்ணிலன்றி
புட்கள் பறா
கண்ணீர் சொரியும்
அதைக்கண்களே
உள்வாங்கும் !
தியாகத்தின் பாதை
தியாகிக்கே புதிராகும்

ஆக்கம் கவிஞர்  மாசிலா நயினைவிஐயனின்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



6/9/15

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க மாட்டோம்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்!

இன அழிப்பின்
உக்கிரம்..
எரிக்கப் பட்டத்து
நூல் நிலையம்..!
உடைக்கப் பட்டது
பள்ளிக்கூடங்கள்..!
அழிக்கப் பட்டது
மருத்துவ மனைகள்.!.
உருக்குலைக்கப்பட்டது
ஆலயங்கள்…!

கொல்லப் பட்டனர்
புத்தி ஜீவிகள்…
சிறைப்பிடிக்கப் பட்டனர்
மாணவர்கள்…
மருத்துவர்கள்
காயப் பட்டனர்..
ஊடகவியலாளர்கள்
காணாமல் போயினர்..

ஆட்சிகள் மாற்றம்
அடிக்கடி நிகழும்
வாக்குகள் வாக்குக்காக
வழங்கப் படும்
புனரத்துவங்கள்
சில நடக்கும்
இராணுவ பாசறைகள்
பலப்படுத்தப் படும்..!

போக்குவரத்து
சிறிதளவு சீராகும்
விடுதலைகள்
கண்துடைப்பாகும்.
நல்லினக்க ஒப்பந்தம்
பேச்சளவில் நீளும்
குடியேற்றங்கள்
அதிகரிக்கும்..

ஆனாலும் எதிலுமே
நிவர்த்தியில்லை.
மீளக்குடியேற்றம்
நத்தை வேகத்தில்
பிரதான வீதியும்
பட்டினங்களும் அங்கு
பளிச்சிடும். நாங்கள்
எதுவுமே கேட்கமாட்டோம்..

உடைந்த பள்ளிக்கூடங்கள்
மேலும் சிதைவுக்குள்
படித்த மாணவர்கள்
வீதியெங்கனும்
கலாச்சார சீரழிவுகள்
கண்டபடி அரங்கேறும்.
அடையாளமிழந்த
ஆலயங்களை மட்டும்
புனரமைப்பு செய்து
கொடியேற்றி தினம்
கும்பாபிஷேகங்களை
நாங்கள் செய்கின்றோம்..
ஆண்டவனும் ஆள்பவனும்
கைவிடானாம்…..!

ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அன்றும் இன்றும் கவிஞர் வன்னியூர் செந்தூரனின்

தமிழ் பேசி உறவாடி 
தலைநிமிர்ந்த நாட்கள் அன்று ..
வேறுமொழி பேசி 
வேசமிடும் வீணான வாழ்வு இன்று

மரணத்தின் வாசலிலும்
மகிழ்வான பொழுதுகள் அன்று
போலிக்குள் புதையும்
வேர் கிழித்த வாழ்வுகள் இன்று

வாழ்ந்தாலும் செத்தாலும்
மானத்தோடு அன்று
கதைத்தாலும் சிரித்தாலும்
பணத்தோடு இன்று

கால்நடைப் பயணம் எனினும்
காவலான தூரம் அன்று
கள்ளிப்பற்றையும் கூட
கருவறுக்கும் இழிவு இன்று

தன்னிறைவு பொருளாதாரம்
தாராளம் அன்று
தாராள தவணை முறையால்
தலைக்குமேல் கடன் இன்று

காவியம் வாழவே பலர்
கருகினார் அன்று
கயவர் பலரோ நடிப்பு
கறுப்பாடுகளாய் இன்று

உயிர்கொடுத்து காக்கும்
உத்தம நட்புக்கள் அன்று
செய்நன்றி மறந்துவிடும்
புல்லுருவிகள் இன்று

வன்னியின் பூமி பல
வரலாறுகளைக் கண்டது
மண்ணின் மைந்தர்களும் பல
வலிகளையும் காண்கிறார்கள் .
ஆக்கம்    கவிஞர்வன்னியூர்செந்தூரன்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


5/9/15

சர்வதேச விசாரணையை போர்க்குற்றங்களை விசாரிக்க தேவை!

தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும். அதுவே எமது மக்­களின் நிலைப்­பாடு என யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட அமெ­ரிக்க செனட் சபை உறுப்­பி­னர்­க­ளிடம் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் 
வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
நேற்று பிற்­பகல் 1.30 மணி­ய­ளவில் அமெ­ரிக்­காவின் செனட் சபை உறுப்­பி­னர்கள் ஐந்து பேர் கொண்ட குழு முத­ல­மைச்­சரை அவ­ரு­டைய வாசஸ்­த­லத்­தில் ­சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டியது. இத­னை­ய­டுத்து
 குறித்த சந்­திப்புத் தொடர்பில் முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்­த­தா­வது,
யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட அமெ­ரிக்க செனட் உறுப்­பி­னர்கள் ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் நாட்டில் ஏற்­பட்ட மாற்றம் தொடர்பில் கேள்வி எழுப்­பினர்.
உண்­மையில் ஜன­வரி 8 ஆம் திக­திக்குப் பின்னர் தேசிய மட்ட ரீதியில் மாற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கலாம். ஆனால், தமிழ் மக்­களைப் பொறுத்­த­ளவில் நீண்­ட­கா­ல­மாக காணப்­பட்டு வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு எது­வித நன்­மையும் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை என்­பதை குறிப்­பிட்­டி­ருந்தேன்.
குறிப்­பாக தமி­ழர்கள் வாழும் பகு­தி­களில் அதி­க­ள­வான இரா­ணுவ பிர­சன்னம் மற்றும் தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான பல ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­ப­டாமல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தமை என்­ப­வற்றை குறிப்­பிட்­டி­ருந்தேன்.
மேலும் தொடர்ச்­சி­யாக மத்­திய அர­சாங்கம் அதி­கா­ரங்­களை தன்­ன­கத்தே வைத்­துள்­ளது. அதனை மாகாண சபைக்களுக்குப் பகிர்ந்து கொடுக்­க­வில்லை என்­பதை அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். மேலும் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் 
உள்­ளக விசா­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டால் அவற்­றுக்கு எதிர்ப்பு தெரி­விப்­பீர்­களா என அவர்கள் என்­னிடம் கேள்வி எழுப்­பினர். போர்க்­குற்­றங்கள் தொடர்பில் தமிழ்­ மக்­களைப் பொறுத்­த­வரை உள்­ளக விசா­ர­ணையில் நம்­பிக்­கை­யில்லை. அத்­த­கைய நிலைப்­பாட்­டிலே வட­மா­கா­ண­ச­பையும் 
உள்­ளது.
இந்­நி­லை­யி­லேயே வட­மா­காண சபையில் சர்­வ ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­திய பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது. போர்க்­குற்­றங்கள் தொடர்பில் இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக சர்வ­தே­சத்­தடன்
 இணைந்த உள்­ளக­ வி­சா­ர­ணையே கொண்­டு­வ­ரப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இத்­தகைய நிலையில் எமது மக்கள் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் உயிரி ழந்துள்ளமைக்கு உள்ளக விசாரணை மூலம் எத்தகைய நீதியும் கிடைக்காது.

அவற்றில் எமக்கு நம்பிக்கையில்லை என்ற நிலை யிலேயே சர்வதேச விசாரணை வேண்டும் என அவர் களுக்கு தெரிவித்ததுடன் இதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கவேண்டும் என அவர்களிடம் கேட் டுக்கொண்டேன் என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

3/9/15

கவிஞை வாணமதியின் அன்பு!

உன்னதமான உணர்வு அன்பு!
கொடுக்கல் வாங்கலில்
அளவு நிறையில்
கனம் பார்த்து
காகித சரையில் கட்டிவிட்டால்
விலை போட்ட உறவாக
விரல் பிடிக்கையில்
வலிக்கவில்லை
உதிர்கிறது
உன்னத இதயத்தில்
உதிரம்.!
ஆக்கம் கவிஞை வாணமதி. 



1/9/15

ரி.தயாநிதியின் எல்லையில்லாத் தொல்லை..!

தொலைதூரத்
தொடர்புகளுக்காய்
தொலைபேசிகள்
உருவான போதும்
கால ஓட்டதில்
கைபேசிகளாகின..!..

வியாபரச் சந்தையில்
கிளம்பிய போட்டிகளால்
மலிவாவகவும்
இலவசவமாகவும்
கட்டண மாற்றங்கள்.!

அவசர அழைப்புக்கள்
அநாவசிய அழைப்பாகி
பேசிடக் கதையின்றி
அமைதியைத் தாண்டி
ஆத்திரமூட்டி இன்று
அநாமதய அழைப்புக்களாகி
சமுக்கத்தில் சர்ஜை..!

விஞ்ஞான வளர்ச்சியால்
மேலும் பல தொல்லைகள்
படப்பிடிப்பும் மிரட்டலும்
ஒலிப்பதிவும் உறுத்தலும்
சுயமான படமெடுப்பும்
என மாறி சுகம் தொலைந்தது..!

நிதானம் இழப்பதனால்
மானம் இழக்கின்றோம்
அவதானம் இன்மையால்
அவமானப் படுகின்றோம்
அரட்டையைக் குறைத்து
அளவோடு அளவளாகுதல்
அவசியமானதன்றோ..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>