siruppiddy

9/12/16

புத்தரும் சிவபெருமானும், சிரிக்கின்றனர்...! விக்கினேஸ்வரன் மீது குற்றச்சாட்டு!

கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று வரும் பக்தர்களை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் சென்று
 வருகின்றர்.
அதேபோன்று விகாரைகளில் சிவபெருமான், விநாயகர் போன்ற தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்து கோயில்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வணங்குவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வெளியில் வந்து இரு தரப்பினரும் அடித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதன் போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் 19 ஆயிரம் சிங்களவர்கள் இருந்தார்கள். அதேபோல் 80 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது போல, பௌத்தர்களுக்கான அதிகாரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



8/12/16

முன்பு மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள்.!

மனிதனாக பிறந்தவர்கள் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கௌதம புத்தர், யேசு கிறிஸ்து, சுவாமி விவேகானந்தர், நபிகள் நாயகம் என பலரும் இன்று இறைவனாக போற்றப்படுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து 
தெரிவித்த அவர்,
சொந்த மதத்தின் புனித தன்மையை நசுக்க கூடிய வகையிலான செயற்பாடுகளை யார் முன்னெடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்,
மேலும், மதத்தை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது. மதத்தை வைத்துகொண்டு அரசியல் செய்கின்றவர்கள் வங்குரோந்து அரசியல்வாதிகளாகவே இருப்பார்கள் என அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



16/11/16

புலிகள் வருகையா?இலங்கை – இந்திய கடற்பரப்பில் மோதல்!!

ஆயுதங்களுடன் இலங்கை கடற்பரப்பில் இருந்து சென்ற படகு ஒன்றின் மீது இந்திய கடலோர படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடலோர படையினருக்கு இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் குறித்த படகினை ராமேஷ்வரம் ஓலைக்குடா பகுதியில் வைத்து இந்திய கடலோர படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த படகில் இருந்த இரண்டு நபர்கள் இந்திய கடலோர படையினர் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் முறையானது விடுதலைப் புலிகளின் தாக்குதல் முறையை ஒத்ததாக இருந்ததாகவும் சில வேளை புலிகளாக இருக்கலாம் என இந்திய கடற்படை அதிகாரிகளை மேற் கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



10/11/16

மரணஅறிவித்தல் திருமதி.கந்தையா சரஸ்வதி .09.11.16.

யாழ் ஸ்ரீ சோமாஸ்ந்தாosa கனடா  (Sri Somaskanda Osa Canada) சங்கத்தின் உப தலைவராக நீண்ட காலம் பணியாற்றி வரும் உயர்திரு . க. கருணாநி. க . ரூபநிதி (மேஜர் விரவேங்கை .அல்பேட். )  ( க .கப்டான் பவான்)    அவர்களின் அன்புத்தாயார் திருமதி . கந்தையா சரஸ்வதி அவர்கள்.09.11.2016.
 இன்று அச்சுவேலி இல் இறைபதமடைந்தார் 
என்ற செய்தியை மிகுந்த அனுதாபத்தோடு அறியத்தருகின்றோம் . அன்னாரின் புதல்வர்கள் அனைவரும் யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்ந்தா கல்லூரியிலேயே கல்வி பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் .
 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி



6/11/16

காணி, பொலிஸ் மற்றும் நிதி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு`?

காணி, பொலிஸ் மற்றும் நிதி தொடர்பான முழு அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவும் மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு தற்போதுள்ள அதிகாரத்தை மட்டுப்படுத்தவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட 6 உப குழுக்களின் ஒரு குழு இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டன.
மத்திய அரசு, மாகாண சபை மற்றும் பிரதேச நிர்வாகங்கள் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டிய விதம் குறித்து பரிந்துரைகளை செய்ய இந்த உப குழுக்கள் நியமிக்கப்பட்டன.
13 வது அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி, காணிகளை முகாமைத்துவம் செய்யும் முழு அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு வழங்குவது.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை மத்திய அரசாங்கத்தில் இருந்து பிரிப்பது மற்றும் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரங்களை முதலமைச்சருக்கு வழங்குவது.
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள நிறுவன பட்டியலை நீக்கி விட்டு, மத்திய அரசு மற்றும் மாகாண சபைகள் இடையில் உரிய முறையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளல்.
மத்திய அரசாங்கத்திடம் உள்ள தேசிய கொள்கை வகுப்பு அதிகாரத்தை நீக்குதல்.
அரசியலமைப்பு நீதிமன்றத்தை ஸ்தாபித்தல். மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் ஏற்படும் அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையை தீக்கவும் தீர்ப்பு வழங்கவும் உயர்நீதிமன்றத்திற்கு இருக்கும் அதிகாரம் இதன் மூலம் இரத்துச் செய்யப்படும்.
அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கான உறுப்பினர் இனவாரி அடிப்படையில் நியமித்தல்.
மாகாண அரசுக்கு சுதந்திரமான நிதி அதிகாரம் மற்றும் வரி அறிவீடு செய்யும் அதிகாரங்களை வழங்குதல்.
மாகாண அரச சேவையின் நிர்வாகத்தை மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருதல். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருதல். மாகாண அரச சேவை ஆணைக்குழு முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்.
ஆளுநரை நியமிக்க்க முதலமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ளல். மாகாண சபைகள் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில், மாகாண சபையை கலைக்க ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாகாண சபையை கலைக்க அரசியலமைப்பு நீதிமன்றத்திடம் அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்.
பொது அரசியல் அதிகாரம் என்ற மக்களின் ஆதிபத்திய அதிகாரத்தை, மத்திய, மாகாண மற்றும் பிரதேச என்று மூன்றாக பிரிந்து செல்வதை ஏற்றுக்கொள்ளல்.
நாடாளுமன்றத்திற்கு இருக்கும் மாகாண துறைகளுக்கான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மற்றும் கொள்கைகளை பரிந்துரைக்கும் அதிகாரம் என்பவற்றை இரத்துச் செய்தல் ஆகிய பரிந்துரைகளை இந்த உப குழுக்கள் முன்வைத்துள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



25/10/16

தமிழீழ புலிகளுக்கு அமெரிக்கா கூட்டத்தில் அங்கீகாரம் !!!

சர்வதேச அளவில் இலங்கை அரசின் தன்மைகள் மாறுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தொடரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே தமிழீழம் பயணித்துக்கொண்டிக்கின்றது, ஐ.நா சபை தமிழர் தரப்பை ஏமாற்றி விடுமா? தமிழர் அநீதிக்கான நீதி தவிர்க்கப்பட்டு விடுமா? போன்ற பல கேள்விகளுக்கு லங்காசிறியின் அரசியற் களம் வட்ட மேசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் 
பதிலளித்துள்ளார்.
மேலும், “தமிழ்” ஒரு தேசிய இனம், ஆனால் சுயநிர்ணயத்தை உச்சரிப்பது பிழை என இலங்கையின் ஆறாம் திருத்தச்சட்டம் கூறுகின்றது. இதற்கு ஏதாவது சட்ட அணுகுதல் எடுக்கப்பட்டுள்ளதா? தற்போது புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசுக்கு ஒரு சிம்மசொர்ப்பனமாக
 மாறி இருக்கின்றது.
 இதற்கான காரணம் என்ன? இவர்கள் வலுவிழந்து விட்டார்களா? போன்ற வினாக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் விளக்கமளித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


20/10/16

இராணுவத்தின் அடாவடி! பரிதாபத்தில் யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இராணுவத்தினர் சித்திரவதைகள் மேற்கொள்வார்கள் என்ற அச்சம் காரணமாகவே தாம் நாட்டை விட்டு வெளியேறியதாக குறித்த நபர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தமது மனைவி தமிழக அகதி முகாம் ஒன்றில் தங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தனுஸ்கோடி பொலிஸார் அருள்செல்வனை கைது செய்து க்யூ பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடல் வழியாக படகு மூலம் ராமேஸ்வரத்தைச் சென்றடைந்த இலங்கையரிடம் எவ்வித பயண ஆவணங்களும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


18/10/16

நீதிபதி இளஞ்செழியன் அதிரடி அறிவிப்பு வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்கு?

யாழ் முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவைக் கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது.
இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என தெரிவி;த்த நீதிபதி இளஞ்செழியன் மாணவன் செந்தூரனுக்குப் பிணை வழங்க மறுப்பு தெரிவித்து பிணை மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.
வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:
வாள்வெட்டுச் சம்பங்களில் சம்பந்தப்பட்டிருந்தது மற்றும் கைக்குண்டு வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களில் மாணவன் செந்தூரன் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதையடுத்து, யாழ் குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவடைந்தன. வீதி அடாவடித்தனங்கள்
 குறைந்திருந்தன.
இப்போது யாழ் குடாநாட்டில் சில வன்செயல்கள் தலைதூக்கியிருக்கின்றன. இந்த நிலையில் செந்தூரன் உள்ளிட்ட குழுவினரைப் பிணையில் செல்ல அனுமதித்தால், யாழ் குடாhநாட்டின் அமைதி நிலைமை
 பாதிக்கப்படும்.
இந்த மாணவன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தலைமறைவாகியிருந்தார். இந்த அந்தக் காலகட்டத்திலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றதாக பொலிஸ் அறிக்கைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆயினும், இவரைப் பிணையில் விட்டால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். விசாரணைகளுக்கு ஒத்துழைப்பின்மை ஏற்படும். இந்தக் குழுவினர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே, இவருக்குப் பிணை வழங்க முடியாது.
வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் எந்த நபருக்கும் இலகுவில் பிணை கிடையாது என்ற செய்தி யாழ் குடாநாட்டில் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வலம்வர எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் சென்றடைய வேண்டும்.
எங்கள் முன்னிலையில் உள்ள பிணை வழக்கு கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த வழக்காகும். விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே வழக்குகளில் பிணை வழங்க முடியும் என சட்டம் 
பரிந்துரைக்கின்றது.
இந்த மாணவன் கல்வியில் சிறப்பாகச்செயற்பட்டவர். கல்லூரி மாணவர் தலைவன். விளையாட்டில் திறமைசாலி என, அவருடைய பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவர் தலைமறைவாகியிருந்த போது, அவரை நீதிமன்றில் கொண்டு வந்து சரணடையச் செய்வதற்குக்கூட அவருடைய பெற்றோர் முயற்சிக்கவில்லை.
ஆனால், இவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 3 மாதங்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபராகப் பெயர் பெற்றிருந்தார். இவருடைய கைது மிகவும் கடுமையான நடவடிக்கைகளில்;, சிரமத்தின் மத்தியிலேயே சாத்தியமானது.
இவரைப் பிணையில் விடுவதற்கு விதிவிலக்கான எந்தவித காரணமும் பிணை மனுவில் முன்வைக்கப்படவில்லை எனவே பிணை மனுவை இந்த நீதிமன்றம் நிராகரிக்கின்;றது. குடாநாட்டில் வாள்களைக் கையில் எடுத்தால், இலகுவில பிணை; வழங்கப்படமாட்டாது என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்றார் நீதிபதி 
இளஞ்செழியன்.
இந்த வழக்கில் அரசாசட்டவாதி நாகரட்னம் நிசாந்தன் அரச தர்பபில் முன்னிலையாகியிருந்தார். எதிரி தரப்பில் சட்டத்தரணி திருக்குமரன் முன்னிலையாகியிருந்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



26/9/16

குரும்பன்சிட்டி பிரதேசத்தில் வெடிகுண்டுகள் மீட்பு

யாழ் தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள், எம்.பீ.எம்.ஜீ குண்டுகள் 1600 உள்ளிட்டவை இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக 
குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




23/9/16

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரை!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர்
 தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014ஆம் ஆண்டு அந்தத் தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 
உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிக்குமாறு மேன்முறையீடு செய்தது. இருப்பினும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் திருப்தியளிக்காமையால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிக்கும் 28 நாடுகளிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அவர்
 தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கம் மீதான தடையும் நீக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

6/9/16

இறுதி யுத்தத்தில் புலிகளின் முக்கிய தலைவர்களுக்கு நடந்தது என்ன?

   முக்கிய இரகசியம் மஹிந்தவிடம்!  விடுதலைப் புலிகளை நான் அழித்து விட்டேன் இனி இந்த நாட்டில் யுத்தம் இல்லை, நாட்டில் இனிமேல் மூவின மக்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். 2009க்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவாக இதனையே
 கூறிவந்தார்.
அதன் பின்னர் யுத்தத்தினை நான் முற்று முழுதாக நிறைவு செய்யவில்லை, நான் ஆட்சிக்கு வரும் போது ஏற்கனவே 75 சதவீதமான யுத்தம் நிறைவு பெற்றிருந்தது என்ற கருத்தினை மஹிந்த வலியுத்தி
 வருகின்றார்.
இதனை மஹிந்த அடிக்கடி கூறத் தொடங்கியது, ஜனாதிபதி மைத்திரி இரகசியத்தைவெளியிடுவேன் எனக் கூறியதன் பின்னரே என்பதனை அறிய முடியுமானதாக இருக்கும்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் கட்சி பான் கீ மூன் வருகையினை எதிர்த்து போராட்டம் நடத்தியது. அதே போல் பிக்குகளும் போராட்டம் நடத்தினார்கள்.
விமல் வீரவன்ஸ மஹிந்தவிற்கு சாதகமானவர் என்பதும் அறிந்த விடயமே. இவ்வாறான போராட்டங்கள் ஐ நா செயலாளரின் கவனத்தை திசை திருப்பவே ஆரம்பிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.
இந்த இரு ஆர்ப்பாட்டங்களும் முன்வைத்தது புலிகள் மீண்டும் வருவார்கள், பான் கீ மூன் வடக்கிற்கு சாதகமான ஒருவரே என்ற
 கோரிக்கையினையே
அதே சமயம் நாட்டில் சுதந்திரக்கட்சியின் 65ஆவது மாநாட்டினையும் தவிர்த்து மஹிந்த மலேசியா சென்றிருந்தார். தேர்தல் காலகட்டத்தில் மஹிந்த தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய சுதந்திர கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அதனையும் தாண்டி மஹிந்த மலேசியா சென்றிருந்தார்
தற்போது மஹிந்தவிற்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது விடுதலைப் புலிகளே எனவும் இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் மலேசியாவில் இருக்கின்றார்கள். அவர்களே என்னைத் தாக்க முற்பட்டார்கள் என்றும் மஹிந்த கூறுகின்றார். இதனை சிங்கள ஊடகங்களும் பிரபல்யப்படுத்துகின்றன.
இவற்றை தொகுத்து நோக்கும் போது மஹிந்தவிற்கு தற்போது தனது அரசியல் பலத்தை மீண்டும் நிலைநிறுத்த விடுதலை புலிகள் என்ற ஆயுதம் அவசியம். அதன் காரணமாக பெரும்பான்மையின மக்களை தன் பால் ஈர்த்துக் கொள்ள இவ்வாறானவை மஹிந்த தரப்பில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்றாகவே நோக்கப்படுகின்றது.
இல்லாவிடின் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளை மீண்டும் வரவைக்க அவசியம் இல்லை என்றே கூறப்படுகின்றது.
மற்றொரு பக்கம், மஹிந்தவின் இரசியங்களை வெளியிடுவேன் என ஜனாதிபதி கூறியது நினைவிருக்கும். மஹிந்தவின் போர்க்
 குற்றம் மற்றும்
 இறுதி யுத்தம் மட்டுமே தற்போதைய காலகட்டத்தில் மஹிந்த தொடர்பில் உள்ள இரகசியம் ஊழல். வெள்ளை வான் போன்றவை புலித்துப்போன விடயம்.
இறுதி யுத்தத்தில் சரணடைந்த விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிவர வேண்டிய இரகசியங்களை ஜனாதிபதி கூறும் முன்பே மஹிந்த சிறிது சிறிதாக வெளிப்படுத்த முயல்வதாகவும், அதன் காரணமாகவே விடுதலை புலிகள் பற்றி தற்போது மஹிந்த அதிகளவாக பிரச்சாரம் செய்கின்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து 
வருகின்றார்கள்.
இங்கு இரகசியத்தினை வெளியிடுவதில் முந்திக் கொள்ளப்போவது மஹிந்தவா? மைத்திரியா? என்பது புரியவில்லை. இருந்தாலும் தற்போதைய சூழலில் மஹிந்த அதனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாய நிலையிலேயே இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒன்று அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க மஹிந்த திட்டமிட்டு நடத்துகின்ற செயல் அல்லது விடுதலை புலிகளின் தலைவரின் மரண மர்மம். அத்துடன் சரணடைந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் போன்றவை இன்றளவும் 
வெளிப்படுத்தப்படவில்லை.
இறுதி யுத்தம் தொடர்பில் வேறு யாராவது கூறி அது தனக்கு பாதகமாக மாறும் முன்னர் தானே வெளிப்படுத்த மஹிந்த முயல்கின்றார் என்ற இரு வகை சந்தேகம் மட்டுமே தற்போது காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் கூடியவிரைவில் இரகசியங்கள் வெளியே வரும் என்றே 
எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



30/7/16

ஆக்கினித்தாண்டவம் 2016 இல் அனை வரும் இணைந்துகொள்ளுங்கள்

சுவிட்சலாந்தில்9 வது தடவையாக தமிழ் இளையோர் அமைப்பினரால் ஐரோப்பா ரீதியாக நடாத்தப்படும் மேற்கத்தேச நடனப்போட்டி.
இதில் நிங்களும் இணைந்துகொண்டு உங்கள் திறமையைக்காட்டவும் வெள்றிபெறவும் ஒரு நற்களம் 
தமிழ் இளையோர் அமைப்பினரால்சுவிட்சலாந்தில்9 வது மேற்கத்தேச நடனப்போட்டி.
கலங்து க‌ெ‌ாண்டு திறமையை வெளிக்காட்டஎதிர்வரும் 22.10.2016 சனிக்கிழமை 13.00 மணிக்கு  (Solothun)  சொலொத்துன்மாநிலத்தில் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

21/7/16

தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் -

புலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது.
இச் செய்தி முன்னர் பிரசுரமாகி இருந்தாலும் தற்போது முகநுாலில் இந்தச் செய்தி மீண்டும் தீயாக பரவுகிறது….
இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ”அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு
கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!” என்று அடித்துச் சொல்கிறார்கள்.”இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும்.
ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும்.
இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது…” எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.
அவர்களின் துணையுடனேயே நாம் ‘ச.தமிழ்மாற’னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
”புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே…?”
”தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!”
”கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?”
”இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.”
”அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?”
”சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.”
”வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?”
”தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!”
”அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை… அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?”
”மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ… அப்படியேதான் தோன்றுவார்!”
”ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?”
”ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.”
”புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?”
”குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!”
”புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?”
”தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!”
”பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?”
”தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.”
”புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?”
”இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!”
”கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே… அது உண்மையா?”
”சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.”
”இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?”
”தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.”
”போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?”
”மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.”
”தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?”
”உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!”
ஏன் இந்த இணைய அறிவிப்பு?
இலங்கைஅதிபர் தேர்தலில் ஃபொன்சேகா வுக்கே அதிக வெற்றி வாய்ப்பு தெரிவதாக உலகெங்கிலும் உள்ள கணிப்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பார்த்து ராஜபக்ஷே புதியதொரு சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்! போரின் வெற்றிதான் பிரதான பிரசாரப் பொருளாக இருப்பதால், போரின் அச்சத்தை மீண்டும் சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க நினைக்கிறாராம் அவர்.
இதற்கென்றே சில சிங்களப் பகுதிகளைக் குறிவைத்து புலிகளின் பெயரால் தாக்குதல்களை அரங்கேற்ற ராஜபக்ஷே சகோதரர்கள் திட்டமிடுவதாக ஒரு செய்தி பரவியுள்ளது. முகாம்களில் தடுப்புச் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் புலிப் போராளிகள் மற்றும் சில தளபதிகளை கருணாவின் உதவியுடன் தங்கள் திட்டத்துக்கு சாதகமாகத் திருப்பவும் திட்டமாம்.
இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் முகாம்களுக்கு வந்த கருணா, கிட்டத்தட்ட ஆயிரம் போராளிகளை முகாம்களிலிருந்து விடுவித்து தனியே அழைத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது வெளியே விடப்பட்டிருக்கும் தளபதி ஒருவர் இந்தப் போராளிகளை வழிநடத்துவாராம். இவர்கள் பல அணிகளாகப் பிரிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப் பணிக்கப்பட்டிருக்கிறார்களாம். அதே வேளையில் இவர்களின் தாக்குதல்களினால் மக்களுக்கு உயிர்சேதம் ஏற்படாமல், பீதி மட்டும் ஏற்படும் வகையில் நாடகம் அரங்கேறுமாம்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு இப்போதே சிங்கள ராணுவத்தின் பல்வேறு படையணிகளும் ஆங்காங்கே தயாராக உலவி வருகின்றன. ‘புலிகள் மீது எதிர் தாக்குதல். மிச்சம் மீதி இருந்த புலிகளை யும் ராணுவம் அழித்தது’ என்று செய்திகள் வெளியிடத் திட்டமாம்.
புலிகளுடனான போரில் முக்கியப் பங்கு வகித்த ராணுவத் தின் அவசரத் தாக்குதல் படையணி-1 மற்றும் 2 தற்போது அம்பிலிப்பிட்டி நகரிலுள்ள ஒரு தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதிசக்தி வாய்ந்த குண்டுகளை வீசி, இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய இந்தப் படையணி சம்பந்தமில்லாமல் இந்தப் பிரதேசத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரணம் தெரியாமல், சிங்கள மக்களே குழம்பித்தான் வருகின் றனர்.
ஃபொன்சேகாவோ இதை எப்படியோ மோப்பம் பிடித்து, தனது தேர்தல் பிரசாரத்தினூடே இந்த சதித்திட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசியிருக்கிறார்!
சிங்கள மக்களுக்கு போர் பயத்தை ஏற்படுத்தி, அப்பாவி மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த இயக்கத்துக் கும் அவப் பெயர் ஏற்படுத்தி ஒரே கல்லில் ரெண்டு மாங் காய் அடிக்க அதிபர் தரப்பு முனைவது குறித்து நிஜமான புலிகளுக்கு தெரியவந்ததன் விளைவுதான், ‘பிரபாகரன் பத்திரமாக உள்ளார்’ என்று இணையதளம் மூலம் அவர்கள் சீறிக் கிளம்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் முதல் செயல்படாமல் இருந்த புலிகளின் மாவீரர் பணிமனை, ஆவணக்காப்பகம், தொடர் பகம் ஆகியவையும்இனி செயல்படத் தொடங்கும் என்றும் இந்த இணைய தளத் தில் அறிவித்திருக்கிறார்கள். இந்த அலுவலகங்கள் எங்கு செயல்படும், எப்படி செயல்படும் என்பது சம்பந்தப்பட்ட போராளிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரியும். ராணுவத் துக்கு எதிராக மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடங்குவதற் கான புலிகளின் ஆரம்பகட்ட ஒன்றுகூடலுக்கான அழைப்பு தான் இது என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், இலங்கை அரசு மிரட்டலின் மூலமாக புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களை வளைத்து வருகிறது. அவர்களிடமிருக்கும் பெருமளவிலான பணத்தையும் மொத்தமாகக் கைப்பற்றி வருகிறது. கடந்த வாரம் கூட இதற்காக லண்டன் சென்ற ராஜபக்ஷேவின் புதல் வன் இளைஞர்களின் எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷே, அங்குள்ள புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை சந்தித்திருக்கிறார். பிறகு அயர்லாந்து, கனடா, அமெரிக்காவைச் சேர்ந்த புலிகளின் நிதிப் பொறுப்பாளர்களையும் சந்தித்திருக்கிறார்.
தற்போது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதோடு, இயக்கமும் செயல்படப் போகிறது என்பதை வெளிப்படையாக அறிவித்தால்தான் இந்த நிதி கொட்டும் முகவர்கள் எவருக்கும் பயப்படாமல் இயக்கத்தின் பக்கம் நிற்பார்கள் என்ற நோக் கமும்கூட இந்த இணையதள அறிவிப்புக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியின் தாயார் ஏரம்பு சின்னம்மா. செட்டிகுளம் அகதி கள் முகாமில் இருந்து வந்த இவர், டிசம்பர். 1-ம் தேதி முகாம்களில் இருந்து மக்கள் மீள்குடியேறலாம் என்று அரசு அறிவித்ததும், முகாமிலிருந்து வெளியேறி மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்தார். முகாமில் இருந்து வெளியே வந்த பிறகு பல்வேறு சிங்களப் புலனாய்வு அமைப்புகளும் இவரிடம் மதிவதனியின் இருப்பிடம் குறித்தும் இன்ன பிற தகவல்களை வேண்டியும் பல்வேறு அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். இதனால் இவர் மனமுடைந்திருந்த வேளையில் நடந்த விஷயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கூறியிருந்திருக்கிறார். உடனே சிவாஜிலிங்கம் லண்டனில் இருந்த மதிவதனியின் அக்காவை தொடர்பு கொண்டு ஏரம்பு சின்னம்மாவை லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், வேறு சில காரணங்களுக்காக அவரை மாலத்தீவில் சிலரிடத்தில் கையளிக்கும்படி சிவாஜிலிங்கத்துக்கு வேண்டுகோள் வைக்கப்பட… கடந்த ஞாயிறன்று மாலத்தீவு சென்று அவரை ஒப்படைத்து 
விட்டு வந்திருக்கிறார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

8/7/16

மகிந்தவின் மயில் மாளிகை ஆவிகளின் தொல்லையால் அழியப்போகின்றத?

முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின் குடியேறுவதற்காக  தயார் செய்யப்பட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்த மயில்( பீகொக்) மாளிகையில்,  ஓர் நாட்டு மன்னன் வாழும் சொகுசு நிலைக்கு  உயர்த்தப்பட்ட போதும், மகிந்தவினால் அந்த மாளிகையில் குடியேற முடியாமைக்கான காரணத்தை யாராலும் தெரிந்துக்கொள்ள முடியாத மர்மமாகவே இருந்தது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

7/7/16

இலங்கை அரசு பிரபாகரனை அழிக்க முடியாது! ஏனெனில்?

தலைவர் பிரபாகரனை அழித்துவிட்டதாக இலங்கை அரசு கூறிவந்தாலும், பிரபாகரனது எண்ணங்களையும், சிந்தனைகளையும் அழிக்க முடியாமல் திண்டாடுகிறது என்பது கசப்பான உண்மையாகும்! எங்கோ ஒரு குட்டித்தீவில், தனது மக்களுக்காக போராடிவந்த பிரபாகரனை ௲ உலகறிய வைத்தது மட்டுமல்லாமல், அவரது எண்ணங்களையும் உலகம் முழுக்க பரப்பவைத்திருக்கிறது இலங்கை அரசு.
பிரபாகரனை அழிக்க யாராலும் முடியாது! – காரணம் அவர் ஒரு தனிமனிதர் அல்ல!
விடுதலையை வேண்டிநிற்கும் பலகோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த திரட்சியே பிரபாகரன்!!
தமிழர்களின் சேவகனாகி
தமிழர்களின் தொண்டனாகி,
தமிழர்களின் தளபதியாகி,
தமிழர்களின் தலைவனாகி,
தமிழர்களின் பலமாகி, |
தமிழர்களின் கவசமாகி,
தமிழர்களின் மணிமகுடமாகி
அடக்கி ஒடுக்கப்பட்டு
முடங்கிச் சருண்டு கிடக்கும்
உலகத் தேசிய இனங்களுக்கு
உன்னதமான ஒரு முன்னுதாரணமாகி
பூலோகத்தின் முள்ளந்தண்டைச் சிலிர்த்திடவைக்கும்
ஒரு பெயராகிவிட்டது பிரபாகரன்!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

24/6/16

பாராளுமன் த்தில் தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற வாதப்பிரதிவாதங்கள் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது. 
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக குறித்த சட்டமூலம் சமர்பிக்கப்படுவதாக ஆளும்தரப்பில் நேற்று பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த சட்டமூலம் ஊடாக, ஊடகவியலாளர்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வழிகள் அடைக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 
தகவல் அறியும் உரிமைச்சட்ட மூலம் ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் ஊடகத்துறை பாராளுமன்ற விவகார அமைச்சருமான கயந்த கருணாதிலகவினால் முதலாவது வாசிப்புக்காக கடந்த மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

23/6/16

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் 
பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது.

தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில்நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் 
பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் ‌நடைபெற்றது.

தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

16/6/16

எரியும் கப்பல்! தற்செயலான ஒன்றா? திட்டமிட்ட சதியா?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரட்டப்பட்டதன் பின்னரான அரசியல் தளத்தில் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
கடந்த ஆட்சியின் போது பல்வேறு மோசடியில் ஈடுபட்டவர்களை குறித்து சமகால அரசாங்கம் வலை விரித்துள்ள போதிலும், சகல துறைகளிலும் ஊடுருவியுள்ள மஹிந்தவின் விசுவாசிகளால் அவை முறியடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசியல் ரீதியாக காணப்படும் நெருக்கடியான நிலைக்கு அப்பால், இராணுவ ரீதியாக ஏற்படும் பெரும் குழப்பங்கள் தென்னிலங்கையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
தமிழர் தேசத்தில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், தென்னிலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெறும் நிகழ்வுகள் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவத்தின் மிகப் பெரிய ஆயுத களஞ்சியங்களில் ஒன்றாக கருதப்படும் கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் வெடிப்பு சம்பவங்களில் இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை தெளிவுபடுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.
இதுவரை காலமும் மிகவும் பாதுகாப்பாக பேணப்பட்டு வந்த ஆயுத களஞ்சியம் அவ்வளவு இலகுவில் வெடித்து சிதற எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்வில் இராணுவம் குழம்பியுள்ள நிலையில், இன்று மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பின் துறைமுகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு 
வருகின்றனர்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி தேசமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட காரணம் என்ன? இயல்பாக நடைபெற்ற ஒன்றா அல்லது யாரெனும் ஒருவரின் தேவைக்காக இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றனவா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவ மட்டத்தில் மிகவும் பலமான நபராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ காணப்பட்டார். ஆனாலும் ஆட்சி மாற்றத்தின் பயனாக அவர் இன்று கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சமகாலத்தில் அதிகாரத்தில் இல்லாத போதும், அரச துறைகள் மட்டுமன்றி இராணுவ படைக்குள் மஹிந்த மற்றும் கோத்தபாவின் தீவிர விசுவாசிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அண்மைக்காலமாக கோத்தபாய கைது செய்யப்படுவார், அரசியலில் நுழையப் போகும் கோத்தபாய நாட்டை ஆட்சி செய்வார் என்பது தொடர்பான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டு 
வருகின்றன.
நாட்டின் அதிகாரத்திற்கு வந்தால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்க தன்னால் முடியும் என்ற கருத்தினை கோத்தபாய அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகள் கோத்தபாயவின் தேவைக்காக நடைபெறுகிறதா என்பது தொடர்பில் பல்வேறு மட்டத்திலும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கான நடைமுறைகளை சமகால தேசிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு சர்வதேசத்தின் கடுமையான அழுத்தம் காரணமாக 
அமைந்துள்ளது.
இந்நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நோக்கில் ராஜபக்ஷ ரெஜிமென்டுகளால் இவ்வாறான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஐயம் 
எழுந்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கையின் மூலம் சிங்களவர்களை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்பி, ராஜபக்ஷ ரெஜிமென்ட் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான சதி நடவடிக்கையே இவ்வாறான அனர்த்தங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் 
சுட்டிக்காட்டியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




13/6/16

மீண்டும்பிர­பா­க­ரனை உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

மீண்டும் யுத்தம் நடக்கும்“பிர­பா­க­ரன் உயிரோடு உள்ளார்!:-மஹிந்த ராஜபக்ஷ!
யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய பின்­னரே நான் யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ 
தெரி­வித்தார்.
என்னை பழி­வாங்கும் ஒரே நோக்­கத்தில் பிர­பா­க­ரனை மீண்டும் உயி­ருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்­ச­ரி­ய­ம­டைய வேண்­டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்­களில் அந்த செய்­தியும் ஊட­கங்­களில் வெளி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார். விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்தம் தொடர்பில் அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தியும் இப்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் மஹிந்த ராஜ­பகஷ கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு
 தெரி­வித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், என்னை பழி­வாங்­கவும் எனது குடும்­பத்தை தண்­டிக்­கவும் இந்த அர­சாங்கம் தீவி­ர­மாக முயற்­சித்து வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­க­ளுக்­காக இன்று தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றோம். எனது புதல்வர் யோஷித செய்­யாத குற்­றத்­திற்­காக சிறையில் உள்ளார். ரகர் வீரர் தாஜுதீன் மரணம் தொடர்பில் மற்­றைய புதல்வர் நாமல் ராஜபக்ஷவை கைது­செய்ய அர­சாங்கம் திட்டம் தீட்­டு­வ­தாக ஊட­கங்­களில் செய்­திகள் வெளிவருகின்றன. அவ்­வாறு இருக்­கையில் இப்­போது பாரா­ளு­மன்­றத்தில் புதிய சர்ச்­சையை 
கிளப்­பி­யுள்­ளனர்.
யுத்த கால­கட்­டத்தை நாம் எவ்­வாறு யுத்­தத்தை முன்­னெ­டுத்தோம், அதற்­கான செல­வுகள் என்ற அனைத்தும் சரத் பொன்­சே­கா­வுக்கு நன்­றா­கவே தெரியும். அவர் அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி என்ற வகையில் எமக்கு பூரண ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டார். அதை நான் மறைக்­காமல் கூறி­யா­க­வேண்டும். ஆனால் அதையும் தாண்டி அவர் தனிப்­பட்ட ரீதியில் செய்த தவ­றுகள் தொடர்­பிலும் எம்­மிடம் பதி­வுகள் உள்­ளன. அந்த கார­ணி­களை எல்லாம் நாம் ஊட­கங்­க­ளிடம் முன்­வைத்தால் இன்று அவ­ருக்கு இருக்கும் கொஞ்ச மரி­யா­தையும் பறி­போய்­விடும்.
எவ்­வாறு இருப்­பினும் அவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்த கருத்­து­களை என்னால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதேபோல் யுத்தம் எப்­போது முடி­வுக்கு வந்­தது, பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டரா இல்­லையா என்ற தக­வலும் எனக்குத் தெரியும். சரத் பொன்­சேகா மட்­டுமே எமக்கு தக­வல்­களை முன்­வைக்­க­வில்லை. இராணுவத்தின் பல வழி­களில் இருந்து எமக்கு த­க­வல்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு கிடைத்­துக்­கொண்டு இருந்­தன. சரத் பொன்­சேகா உத்­தி­யோ­க­பூர்வ ரீதியில் ஒரு அதிகாரி மட்­டு­மே­யாவர். அதை தவிர அவர் பல இர­க­சி­யங்­களை அறிந்­தி­ருக்­க­வில்லை.
இப்­போதும் கூட ஐக்­கிய தேசியக் கட்­சியின் தனிப்­பட்ட பழி­வாங்கல் மற்றும் யுத்த குற்­றச்­சாட்­டு­களில் என்­னையும் கோத்­த­பாய ராஜபக்ஷவையும் தண்­டித்து பழி­வாங்­கப் பார்க்­கின்­றனர். அதற்கு உடந்­தை­யாக சரத் பொன்­சேகா செயற்­ப­டு­கின்றார். தேசி­யப்­பட்­டியல் மூலம் ரணில் வாழ்க்கை கொடுத்­துள்ளார். அந்த நன்­றிக்­கடன் இப்­போது வெளிப்­ப­டு­கின்­றது. பிர­பா­கரன் கொல்­லப்­பட்ட பின்­னரே நான் யுத்­தம் முடிவடைந்ததை அறி­வித்தேன். அவ­ரது உடலை எமது இராணுவம் உறு­திப்­ப­டுத்­தி­யது. தலையில் துப்­பாக்கி ரவைகள் பட்ட நிலையில் தலை சிதை­வ­டைத்து கிடப்­ப­தாக புகைப்­ப­டங்­க­ளுடன் எனக்கு அந்த நேரத்திலேயே இரா­ணுவம்
 தெரி­வித்­தது.
ஆனால் இவை நடந்த நேரம் சரத் பொன்­சேகா எம்­முடன் இருக்­க­வில்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர் கூறும் கதை­களை எவரும் நம்­பப்­போ­வதும் இல்லை. யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் என சித்­த­ரித்து எம்மை போர்க்­குற்­ற­வா­ளி­யக்கும் முயற்­சி­களின் விளை­வு­களே இவை அனைத்துமாகும்.
அதேபோல் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு நாம் பணம் கொடுத்­த­தா­கவும் சுனாமி உதவி நிதி என்ற பெயரில் நாம் புலி­களை பலப்­ப­டுத்­தி­ய­தா­கவும் இன்று ஒரு சிலர் குற்றம் சுமத்­தி­வ­ரு­கின்­றனர். ஆனால் இது முழு­மை­யாக பொய்­யாகும். நாம் புலி­களை பலப்­ப­டுத்த நினைத்­தி­ருந்தால் பிர­பா­க­ரனை கொன்றி­ருக்­க­வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­காது. நாட்­டையும் மக்­க­ளையும் விடு­விக்­கவும் பல­மான நாடாக இலங்­கையை கட்­டி­யெ­ழுப்­ப­வுமே நாம் யுத்­தத்தை தைரி­ய­மாக எதிர்கொண்டோம். எனக்கு முன்­னி­ருந்த தலை­வர்­களால் முடி­யாத காரி­யத்தை நாம் செய்­து­காட்­டி­யதே இன்று எவ­ராலும் பொறுத்­துக்­கொள்ள முடி­யாத காரியமாக
 மாறி­யுள்­ளது.
இப்போது இருக்கும் நிலைமையில் என்னை பழிவாங்கும் ஒரே நோக்கத்தில் பிரபாகரனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தாலும் ஆச்சரியமடையவேண்டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்களில் அந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரும். எமது ஆட்சியை வீழ்த்தி இப்போது உருவாகியுள்ள புதிய அரசாங்கம் முழுமையாக பழிவாங்கல் அரசியலை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது. எம்மை பழிவாங்க பொய்யான ஆதாரங்களை திரட்டி தொடர்ச்சியாக எம்மை தாக்கி
 வருகின்றனர்.
யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக நாம் போரிட்டோம் எனவும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் கொடுத்­தோம் என்றும் எம்­மீது குற்றம் சுமத்தி எம்மை போர்க்குற்றவா­ளி­யாக்கும் முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதை உறு­தி­ப்ப­டுத்­திய 
பின்­னரே நான்
 யுத்த வெற்­றியை அறி­வித்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். என்னை பழி­வாங்கும் ஒரே நோக்­கத்தில் பிர­பா­க­ரனை மீண்டும் உயிருடன் கொண்­டு­ வந்­தாலும் ஆச்­ச­ரி­ய­ம­டைய வேண்­டிய அவசியமில்லை. இன்னும் சில தினங்­களில் அந்த செய்­தியும் ஊட­கங்­களில் வெளி­வரும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்தம் தொடர்பில் அப்­போ­தைய இரா­ணு­வத் தள­ப­தியும் இப்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா பாராளுமன்றத்தில் தெரி­வித்­துள்ள கருத்­துகள் தொடர்பில் மஹிந்த ராஜ­பக ஷ கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு
 தெரி­வித்தார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



5/6/16

மீண்டும்மிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீடித்தது அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை.
எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
மேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

31/5/16

வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை:பிரித்தானியா!

இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்திடம் அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வைரி இந்தக்கருத்தை
 வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் த ஹிந்து செய்தித்தாளிடம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் வீ கே சிங்கை சந்தித்த போது, இலங்கையின் மனிதஉரிமை நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து கருத்துரைத்த அவர். இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோர் சர்வதேச சமூகத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை 
என்று கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


28/5/16

நன்னெறிக் கோவைபொலிஸ் திணைக்களத்துக்கு அறிமுகம்!

பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே,
பொலிஸ் திணைக்களத்தின் அனைத்து பதவி நிலை அதிகாரிகளுக்கும் நன்னெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைக்கு அது தொடர்பான வரைபு அச்சில் உள்ளது. எதிர்வரும் ஜுன் மாதமளவில் குறித்த நன்னெறிக்கோவை பொலிஸ் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்படும்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களுடன் நட்புறவுடன் நடந்து கொள்ளவும், சிறப்பான முறையில் கடமைகளை மேற்கொள்வதையும் ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நன்னெறிக்கோவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் தத்தமது கடமைகளில் பொலிசாரின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை வெளிக்காட்டும் வகையிலும் ஊக்குவிக்கப்படும் என்றும் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



25/5/16

அபிவிருத்தி திட்ட கலந்துரையாடல்! முதலமைச்சரும் வட மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களும் புறக்கணிப்பு!!

யாழ். நகர அபிவிருத்தி குறித்து வடக்கு ஆளுநரின் தலைமையில் நேற்று நடந்த கலந்துரையாடலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பெரும்பான்மை வட மாகாண உறுப்பினர்களும்
 புறக்கணித்தனர். அத்துடன் இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், 
மாவை சேனாதிராஜா, சரவணபவன் புளொட்டின் சித்தார்த்தன் ஆகியோரே கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ கட்சிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை எனத் தெரியவருகின்றது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>