siruppiddy

23/9/16

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பரிந்துரை!

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர்
 தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014ஆம் ஆண்டு அந்தத் தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 
உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிக்குமாறு மேன்முறையீடு செய்தது. இருப்பினும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் திருப்தியளிக்காமையால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அங்கம் வகிக்கும் 28 நாடுகளிலும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு அவர்
 தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கம் மீதான தடையும் நீக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக