3/5/19

சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்மன்னார் நடுக்காட்டில் மீட்ப்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் தொடருந்துக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மீட்கப்பட்ட பொ
தியில் சக்தி வாய்ந்த வெடி மருந்துள் மீட்கப்பட்டுள்ளன 
என்று பொலிஸார் தெரிவித்தனர்.காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன.பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர்
 குச்சுகள் என்பன மீட்கப்பட்டன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


1/5/19

பொலிஸாரிடம் யாழில் சிக்கிய இரண்டு கோடி ரூபா அபின்…!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே 30,04,2019,
 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு
 இடமாக இருவர் நடமாடியுள்ளனர்.
 இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருவதைக் கண்ட அவர்கள், பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோதே அபின் 
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பொதியினை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புக்
 குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வளவு பெறுமதியான அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை 
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


11/4/19

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இனி இடமில்லை

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள், நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் (மஹிந்த அணி) இடையில் இழுபறி தொடர்கின்றன என்று செய்திகள் வருகின்றன.
இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன? என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர்,
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்
 பேச்சு நடைபெற்றது.
எனினும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது, சிலவேளை பேச்சுத் 
தொடரக்கூடும்.
உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை, எனவே இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு 
முடிவு எடுக்கக்கூடாது.
இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள்.
நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம், மூவின மக்களும் நிம்மதியாக,நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும் இதுவே எமது விருப்பம்.
நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன்.
எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன்.
எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என கூறியுள்ளார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


11/10/18

மஹாவலித்தென்னயில் மண்ணுக்குள் மறைந்திருந்த பயங்கரக் குண்டு

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன எனும் கிராமத்தில் 81 மில்லிமீற்றர் மோட்டார் உந்து செலுத்திக்குப் பயன்படுத்தும் வெடிகுண்டொன்று நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குழாய் நீர் விநியோகத்திற்காக
 நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று வெளிக்கிளம்பியதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனையடுத்து குழாய் பொருத்துநர்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பிரகாரம் ஸ்தலத்திற்கு விரைந்த வெலிக்கந்தை பொலிஸார் நீர் விநியோகக் குழாய் பொருத்துவதற்காகத் தோண்டப்பட்ட குழிக்குள் குண்டு இருப்பதையறிந்து குண்டு செயலிழக்கச் செய்யும் படை நிபுணர்களை வரவழைத்து அவர்கள் மூலமாக குண்டை
 மீட்டுள்ளனர்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கிராமங்களைப் பாதுகாப்பதற்காக இப்பகுதியில் படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது.அதேவேளை அவ்வப்போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடையில் மோதல்களும் இடம்பெற்று வந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக 
குறிப்பிட்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


29/9/18

யாழ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் இன்று(சனிக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் மழைக்கு
 மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அனுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் அனைவரையும்
 விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியும் பல்வேறு தரப்பினரும் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  இந்தநிலையிலேயே, இன்று கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>28/9/18

உயிரிழந்ததமிழ் பெண் விரிவுரையாளருக்கு நீதி கேட்டு தமிழர் தலைநகரில் ஆர்ப்பாட்டம்

மர்மமான முறையில் உயிரிழந்த விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்திற்கு நீதி கோரி தமிழர் தாயகமான திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
.குறித்த ஆர்ப்பாட்டம் திருகோணமலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆரம்பிக்கப்பட்டு, நடைபவனியாக வீதிக்கு வந்து மக்களை தெளிவூட்டும் விதத்தில் கவனயீர்ப்பு போராட்டமாக
 நடத்தப்பட்டுள்ளது.
போதநாயகியின் மரணத்திற்கான காரணத்தை உடனடியாக கண்டறிந்து சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து இனி வருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கான ஒரு விழிப்புணர்வு போராட்டமாக இது அமையும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

27/9/18

தமிழ் பெண் விரிவுரையாளரர் புதைக்கப்பட்ட இடத்தில் கதறி அழும் கணவன்

மர்மமான முறையில் மரணடைந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் கணவர் கவிஞர் செந்தூரன் மனைவியின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று அழுது குளறியுள்ளார்.
செந்தூரன் மனைவியின் இறுதி சடங்கிற்கு கூட செல்லவில்லை என்பது போதநாயகியின் கொலைக்கான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது போதநாயகியின் கணவர் செந்தூரன் என்ற நபர், தான் ஸ்திரீ லோலனாக இருந்தாலும், மனைவி தனக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்ற சிந்தனை வன்முறைக்குள்ளாக்கியிருக்கிறார்.
கடந்த சில வருடங்களில் அவரது வாழ்வில் பல பெண்கள் தொடர்புபட்டுள்ளார்கள் என்ற பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் வெளியாகி வருகின்றன.பிரான்சை சேர்ந்த தன்னிலும் வயது கூடிய ஒரு பெண்மணியை திருமணம் செய்து, செந்தூரனின் திருவிளையாடல்கள்
 தெரிந்ததும் மூன்றாவது நாளிலேயே விவாகரத்து செய்து விட்டார்.
அதை அவர் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.இதன்பின்னர், பிரித்தானியாவை சேர்ந்த ஒரு யுவதிக்கு ஆட்டையை போட்டு, அவரது தாயாரிடமிருந்து பெருமளவு பணத்தை சுருட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இந்தியாவில் ஒரு தொ
டர்பு இதன்பின் கிளிநொச்சி யுவதியொருவருடன் திருகோணமலையில் உல்லாசம் என பல பேஸ்புக் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இதைப்பற்றி செந்தூரன் தரப்பிலிருந்து எந்த பதிலுமில்லை. மாறாக சில பெண்கள்- முகப்புத்தகத்தில் நேரில், கொஞ்சம் பட்டும் படாமலும் செந்தூரன் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை சுமத்த 
ஆரம்பித்துள்ளனர்.இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் விதத்தில் உள்ளது. அது கமல் பாடும் பாடலை நினைவுபடுத்துகிறது. செந்தூரன் தரப்பு இதைப்பற்றி பகிரங்கமாக சொன்னால் மாத்திரமே உண்மை தெரியவரும்.
உயிரிழந்த போதநாயகி நல்ல சம்பளத்தை 
பெறும் விரிவுரையாளராக கடமையாற்றினார். அவரது ஏடிஎம் கார்ட் கூட செந்தூரனிடமே இருந்துள்ளது. போதநாயகியின் இறுதி மாத சம்பளம் ஒரு இலட்சம் ரூபா! உயிரிழப்பதற்கு சில நாள் முன்னதாக வங்கி 
கணக்கிற்கு சென்றது.
இறுதி சடங்கிற்கு பணமில்லையென போதநாயகியின் குடும்பத்தினர் கூற, ஏடிஎம் கார்ட் பின் நம்பர் தெரியாதென அலட்சியமாக செந்தூரன் பதிலளித்துள்ளார். அதை போதநாயகியின் குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிரேத பரிசோதனை முடிந்ததும், கணவனாக அவரே சடலத்தை பொறுப்பேற்க முடியும் சடலத்தை பொறுப்பேற்று தனது வீட்டுக்கு கொண்டு சென்று, சடலத்தின் மீது கவிதைப்புத்தகங்கள் என்ற பெயரில், தான் வெளியிட்ட புத்தகங்களையும், விருதுகளையும் பரப்பி படம் எடுத்து படம் காண்பித்தார்.
பின்னர் சடலம் வவுனியாவில் போதநாயகி வீட்டிற்கு கொண்டு செல்ல தயாரான போது செந்தூரன், தாயார் ஆகியோர் வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டனர். வவுனியாவில் மனைவி வீட்டிற்கு செல்லவுமில்லை, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவுமில்லை.
கட்டிய மனைவி தனியாக சவக்குழிக்கு செல்கிறாள் என்றபோதே, இந்த கணவனின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள
 முடியும் என்ற கருத்தும் பரவலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.தம்பதியர்களிற்கிடையில் உறவு சுமுகமாக இல்லை, செந்தூரனின் நடவடிக்கைகளால் மனைவி அதிருப்தியடைந்திருந்தார் என்பதற்கு ஆதாரமாக அவரது முகநூல் பதிவுகளை சுட்டிக்காட்டுகிறார்கள்.
போதநாயகி வங்கியில் 20 இலட்சம் ரூபா கடன்பெற்று செந்தூரனிற்கு கார் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அது தவிர, அண்மையில் ஐந்து இலட்சம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
போத நாயகியின் தந்தை தும்புமிட்டாசு விற்றே மகளை கல்வி கற்க வைத்திருந்தார். மிக ஏழ்மை குடும்பமான 
அவர்களிடம் இறுதிச்சடங்கிற்கே பணமிருக்கவில்லை. இறுதியில் வவுனியாவை சேர்ந்த தன்னார்வலர்கள் பணம் திரட்டியே அவரது இறுதிச்சடங்கை நடத்தி முடித்திருந்தனர்.
இதேவேளை நேற்று செந்தூரனின் நண்பன் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செந்தூரன், மனைவியின்
 உடல்புதைக்கப்பட்ட இடம் என கருதப்படும் 
இடத்தில், அழுது கொண்டிருப்பதை போல காண்பிக்கும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் தொடர்பிலும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.
உண்மையான கணவன் எனில், இறுதிச்சடங்கிற்கு சென்றிருக்க வேண்டும். இது அனுதாபம் தேடும் முயற்சியென நெட்டிசன்கள் 
கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் செந்தூரனின் நண்பர்கள் 
‘அண்ணன் அப்செட்டில் இருக்கிறார். ஏற்கனவே உடைந்து போயிருப்பவரை இந்த விமர்சனங்கள் மேலும் காயமடைய வைக்கிறது. சிறிய அவகாசம் அவருக்கு தேவை. விரைவில் பகிரங்கமாக அனைத்தையும் சொல்வார்’ என்கிறார்கள்.
‘அண்ணன் ஏற்கனவே திருமணமானவரா? அது போதநாயகிக்கு தெரியுமா? அவர்களின் குடும்பத்தில் ஏதாவது சிக்கலிருந்ததா?’ என்று கேட்டால் ‘அதை அண்ணனிடமே கேளுங்கள்’ என்கிறார்கள்.
எது எப்படியோ இந்த விவகாரத்தில் செந்தூரன் தரப்பும் ஏதாவது அபிப்பிராயத்தையும், நியாயத்தையும் வைத்திருக்ககூடும். அவர்கள் இதுவரை பகிரங்கமாக அதை பதிவுசெய்யவில்லை. பொலிசார் நியாயமான விசாரணை நடத்தி, உண்மையான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டறிந்தால் மட்டுமே முழு உண்மையும் 
பகிரங்கமாகும்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>