siruppiddy

10/7/14

ஞாயிற்றுக்கிழமை யூலை 20 2014 கறுப்பு யூலை ம் ஒன்றுகூடல்.

உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் (Albert Campbell Square � Scarborough Civic Center) யூலை 20.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் Professor Daniel Ferenstein (President, International Association of Genocide Scholars) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் வழமைபோன்று தமிழ் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு கலை பண்பாட்டுக் கழகம் விளையாட்டுத்துறை மற்றும் 25 ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் விளையாட்டுக் கழகங்கள் இணைந்து இந்நிகழ்வை நடாத்தவுள்ளார்கள்.
   1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 30 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் நிலங்களை அபகரிப்பதில் மிகவும் மும்மரமாகச் செயற்பட்டார்கள். அதன் உச்சக்கட்ட நடவடிக்கையே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கம் தமிழர் நில அபகரிப்பு என்பதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் தொடர்ந்து தமது இலக்காக தமிழர் மண்ணைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது ஒன்றும் புதிய விடயமில்லையெனினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நில அபகரிப்பின் தீவிரம் மிகுந்த அச்சத்தைத் தருவதாக அமைகின்றது. அதனால் அவர்களின் அம்முயற்சியை முறியடிப்பது புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் முக்கிய கடமை மட்டுமன்றித் தேசியக் கடமையுமாகும்.
யூலை 83இல் படுகொலை செய்யப்பட்ட எம்முறவுகளை நினைவுகூர்வதுடன் போர்க்குற்றங்கள் குறித்துச் சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்நேரத்தில் அதற்குரிய ஆதரவை முற்றுமுழுதாக வழங்குவதுடன் போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேசக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், போர்க்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, இராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஓன்றுகூடல் கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசமும் மனித உரிமை அமைப்புக்களும் சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கின்ற இவ்வேளையில் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு தமிழின அழிப்பையும் ஐ.நா, தலைமையில் தமிழீழ சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பையும் முன் நிறுத்தி இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களாய் ஒன்றாய் இணைந்து வரலாறு படைப்போம் வாரீர்.
மற்றைய செய்திகள் கறுப்பு யூலை ஒன்றுகூடல்
இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center)
காலம்: யூலை 20, 2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை: 6:00 மணி
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703 | மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct

0 கருத்துகள்:

கருத்துரையிடுக