siruppiddy

29/1/16

இலங்கை .உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளது ?

ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளை பாதுகாக்க தவறியுள்ளதாக பொதுநலவாய அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் நியாயத்தை காக்கும் என்ற அமைப்பின் தலைவரான சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கமும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக நீதிமன்ற சுதந்திரத்தை பாதுகாப்பதாக வாக்குறுதிகளை வழங்கியதாகவும் எனினும்  அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடுகளை செய்தபோதும்  உச்சநீதிமன்றம் அது தொடர்பில் விரிவாக விசாரிக்க தவறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் ஸ்ரீலங்காவிற்குள் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதை தான் எதிர்ப்பதாகவும் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு கூறியுள்ளார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்க உப தலைவரான சாலிய பீரிஸ், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா நீதிமன்றங்கள் முக்கியமான பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக