siruppiddy

9/4/20

தாய் நாட்டில் நீக்காத சோகத்தின் ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது

வாழ்க்கை மட்டுமல்ல,“ பட்டால்தான் வலி புரியும் “
இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.
இலங்னக (சிறீலங்கா )என அழைக்கப்படும் தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை 
உலகறியா ஏராளம் ஏராளம்.
இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம்.
ஆம்...!
எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம்.
நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமைப் படுத்தினார்கள். ஆனாலும் மீண்டெழுந்தோம்.
இறுதியாக உலக நாடுகள் கைகோர்த்து ஓர் உத்தியை கையாண்டீர்கள்..!
ஓய்வின்றி ஓர் தொடர் போர்..!!
இறந்தவரை புதைக்க இடமுமில்லை நேரமும் இல்லை. காயம்பட்டவரை சிகிச்சை கொடுக்க மருந்துமில்லை மருத்துவமனையில் இடமும் இல்லை, மருத்துவர்களும் பற்றாக்குறை.
உண்ண உணவுத் தட்டுப்பாடு, கிடைப்பதையேனும் தேடிவர வெளியே போய் வர முடியாது குண்டு மழை.
போராடும் போராளிகளிடம் ஆயுத தளபாட வெடிபொருட்கள் எனக்
 கையிருப்பு கையறு நிலை.
பதுங்கு குழிக்குள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் முடங்கிய மக்களின் மன அழுத்தம், போராட்டத்தின் மீதே நம்பிக்கையீனம்.
எல்லாமே திட்டமிட்டே செய்து முடித்தீர்கள். நினைத்தவாறே எல்லாமும் நிறைவேறிற்று. இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு
 நாம் நடை பிணமானோம்.
ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது..!
உலகின் வல்லரசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டவர்களின் இன்றைய நாட்கள் இதே பாடத்தை தான் அவர்களுக்கு 
கற்றுக் கொடுக்கிறது.
நாட்டுக்கு நாடு எல்லையை மூடுகிறார்கள். உணவுக்கு / மருந்துக்கு / மருத்துவருக்கு அல்லாடுகிறார்கள்.
நாம் பதுங்கு குழிக்குள் முடங்கியது போன்று இன்று இவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனிமையில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.
இன்று களப் பணியாற்றுவோருக்கு நாளாந்தம் கைதட்டி நன்றி தெரிவிக்கிறார்கள். அதை ஊடகங்கள் 
கொண்டாடுகின்றன.
அன்று ஒரு சிறு நிலப்பரப்பில், எந்த நிமிடமும் நம் உடலும் சிதறலாம் எனத் தெரிந்தும், நமது மக்களை காப்பாறும் மருத்துவப் பணியில் இருந்த / இறந்த எமது மருத்துவர்கள், களப் பணியாளர்களே எம் கண்முன்
 வந்து போகிறார்கள்.
அன்று நாம் உங்கள் முற்றமெங்கும் / வீதிகளெங்கும் ஒப்பாரி வைத்தோம், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனாலும்..,
நாம் ஈழத்தவர்கள்; மனித நேயத்துடன் எங்கள் கண்களும் உங்களுக்காக கண்ணிரைக் கசிந்து கொண்டுதான் 
இருக்கின்றன.
நன்றி,,யஸ்  கே, சாமி

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






9/12/19

இரு கண்களையும்.ஓர் கையும்போ ரில் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை

போ ரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யு த்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.A பட்டம் பெறும் முன்னாள் போ ராளிகளான அகமொழி மற்றும். சந்திரமதி ஆகிய இருவரையும் வாழ்த்துவோம்.சா திக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் இருவரும் எம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.





16/11/19

தேர்தல் கடமையில் ஈடுபட்ட 51 அதிகாரிகளுக்கு திடீர் ஒவ்வாமை

உணவு விசமடைந்ததன் காரணமாக தேர்தல் கடமையில் ஈடுபடும் 51 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் 
ஒருவர் குறிப்பிட்டார்.
கொழும்பு ரோயல்கல்லூரியில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தின் அதிகாரிகளே இவ்வாறு வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த அதிகாரிகள் நாளையதினம் திட்டமிடப்பட்டவாறு சேவையில் ஈடுபட முடியும் எனதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்தார்

18/10/19

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கள மொழிக்கு கிடைத்த இடம்

யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று விசனம் வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப் பலகைகளில் முதலில் தமிழ் மொழியிலும் இரண்டாவதாக சிங்கள மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு சிங்கள மொழி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான ஓர் பின்னணியில் இன்றைய தினம் குறித்த சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.
போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் யோசனைக்கு அமைய, பலாலி விமான நிலையம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


3/5/19

சக்தி வாய்ந்த வெடிபொருட்கள்மன்னார் நடுக்காட்டில் மீட்ப்பு

மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் தொடருந்துக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மீட்கப்பட்ட பொ
தியில் சக்தி வாய்ந்த வெடி மருந்துள் மீட்கப்பட்டுள்ளன 
என்று பொலிஸார் தெரிவித்தனர்.காட்டில் மாடு மேய்க்கச் சென்றவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு பொதிகள் மீட்கப்பட்டன.பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர்
 குச்சுகள் என்பன மீட்கப்பட்டன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


1/5/19

பொலிஸாரிடம் யாழில் சிக்கிய இரண்டு கோடி ரூபா அபின்…!!

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே 30,04,2019,
 மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு
 இடமாக இருவர் நடமாடியுள்ளனர்.
 இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருவதைக் கண்ட அவர்கள், பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோதே அபின் 
போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பொதியினை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புக்
 குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வளவு பெறுமதியான அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை 
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


11/4/19

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இனி இடமில்லை

இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள், நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் (மஹிந்த அணி) இடையில் இழுபறி தொடர்கின்றன என்று செய்திகள் வருகின்றன.
இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்ன? என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மேலும் அவர்,
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்
 பேச்சு நடைபெற்றது.
எனினும் இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்பதற்காக இழுபறி தொடர்கின்றது எனக் கூற முடியாது, சிலவேளை பேச்சுத் 
தொடரக்கூடும்.
உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவை நாம் எடுப்போம், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை, எனவே இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு 
முடிவு எடுக்கக்கூடாது.
இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள்.
நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம், மூவின மக்களும் நிம்மதியாக,நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும் இதுவே எமது விருப்பம்.
நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன்.
எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன்.
எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என கூறியுள்ளார்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>