siruppiddy

10/12/15

இ,கவிமகளின் மழைக்குள் இருந்து ஓர் குரல் -2

"நான் முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஏற்பட்ட அதி பயங்கர மன அதிர்ச்சியை இந்த நாலு நாட்களும் அனுபவித்தேன் கவி  இதை குறிப்பிட்டவர், தமிழீழத்தின் மீது அதீத பற்றுக் கொண்ட ஓவியர் புகழேந்தி. அவருடனான 
தொடர்புக்காக
 பல தடவைகள் செய்த முயற்சிக்கு பின்னான தருணம் ஒன்றில் அவரது தொடர்பு கிடைத்த மகிழ்வில் "சேர் எப்பிடி இருக்கிறீர்கள்...? கேட்ட கேள்வியின் பதிலாக கிடைத்தது இந்த பதில்.
அவர் பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். உண்மையில் ஒவ்வொரு வார்த்தைகளிலும் நானும் சில நாட்களாக எங்கள் நட்புக்களின் கிடைக்காத தொடர்புகளிலும் , அறிய முடியாது தவித்த அவர்களுடைய துயர்நிறைந்த வாழ்க்கையிலும் நாம் முள்ளிவாய்ககால் மண்ணில் முடக்கப்பட்டிருந்த போது என் உறவுகள் எம் நிலையை அறிய துடித்த வினாடிகளை உணர முடிந்தது.
மினசாரம் இல்லை, தொலைபேசி இணைப்புக்கள் இல்லை, அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிமிடங்கள் முழுவதும் பலத்த துன்பத்தை சுமந்து கொண்டிருந்தனர் எங்கள் உறவுகள். "கவி நான் இந்த நாட்களில் என்னைப்பற்றியோ எனது குடும்பத்தை பற்றியோ
 நினைத்து 
கவலை கொள்ளவில்லை. காரணம் நாங்கள் இதுவரை பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கிறோம். நான்கு சுவரைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் இருக்கும் உணவை பிரித்து உண்டால் கூட குறைந்தது ஒரு வார காலத்திற்கு என் குடும்பம் உணவுப் பிரச்சனையில் இல்லாது வாழ முடியும். ஆனால் வீட்டை இழந்து ஒரு பருக்கை சோறு கூட கிடைக்காத 
நிலையில் 
போட்டிருந்த ஒரு ஈர உடையோடு விடிய விடிய தண்ணீரில் உதவிகளுக்காக காத்திருந்த குழந்தைகள் நிலையைதான் நான் நினைத்துப் பார்க்கிறேன்.
உண்மையில் இந்த வார்த்தைகளை அவர் கூறிய போது அவரது விழிகள் நிட்சயமாக கண்ணீரால் நனைந்திருக்க வேண்டும் ஏனெனில்
 அவரது உணர்வுகளை
 நான் பேச்சின் மூலமே உணர்ந்து கொண்டேன். நான் உரையாடிய அந்த நிமிடங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையின் துயரத்தை குறிப்பதிலே அவர் கருத்தெடுத்தார். கவி சென்னைக்குள் இருந்து கொண்டே என்ன நடக்குறது எமக்கு என்பதை அறிய முடியாத அந்த கணங்கள் ஒவ்வொன்றும் கொடியது. இந்த துயர சம்பவத்துக்கு என்னால் யார் மீதும் குற்றம் 
சுமத்த முடியாது
 உள்ளது. மழை வெள்ளம் கரை புரண்ட போது ஏரிகளை திறந்து விட்டது தவறாக பலர் நினைக்கலாம் ஆனால் அது திறக்கப்பட வில்லை என்றால் ஏரிகள் அனைத்தும் உடைப்பெடுத்திருக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்குமாயின் சென்னை முழுவதும் பாரிய அழிவுக்குள்ளாகி இருக்கும். சிலவேளை முற்றுமுழுதாக 
அழிந்திருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் திறந்து விட்ட செயற்பாடானது நிட்சயமாக ஏற்றுக்கொள்ள
 வேண்டியதாகிறது.
அவர் தொடர்ந்து பேசினார். அப்போது நான் குறுக்கிட்டு சேர் மன்னிக்கனும், எங்கள் உணர்வுகளை ஓவியங்களாக்கி உலகத்துக்கே எங்கள் உணர்வுகளை கூறிய அத்தனை ஓவியங்களும் பாதுகாப்பாகத்தானே இருக்கிறது..? ஆம் கவி என் வீடு அமைந்துள்ள இடம் மேட்டுப்பகுதி அதனால் என்னால் அவை பாதுகாக்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னும் ஓரிரண்டு 
சென்டி மீட்டர் தண்ணி எம் பகுதிக்குள் புகுந்திருக்குமாயின் அத்தனை ஓவியங்களும் இயற்கையால் அழிக்கப்பட்டிருக்கும். இப்போது வேறு முயற்சி பற்றி சிந்திக்கிறேன் அவற்றை பாதுகாக்க வேண்டும். ஆமா சேர் நீங்கள் கூறுவதே நானும் எதிர் பார்த்தேன். நியமாக அவற்றை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இந்த இடத்திலே நான் ஒரு விடையத்தை குறிக்க விரும்புகிறேன். இன்றைய சூழலில் பல்லாயிரம் உறவுகளின் சொத்திழப்பு மற்றும் வாழ்வாதாரவிழப்புக்களுக்கும் பலநூறு மக்களின் உயிரிழப்புக்களுக்கும் மத்தியில் இந்த ஓவியங்கள் தொடர்பான பாதுகாப்பு என்பது அவசியமா என்று உங்களுக்கு வினா எழலாம் ஆனால் இதைக் கட்டாயமாக நான் வினவ வேண்டிய நிலை உண்டு. ஈழ போராட்ட வரலாற்றில் 
எமது வலிகளை 
நாம் நமக்கே புரிய வைக்க வேண்டிய தேவை இல்லை ஆனால் பல ஊடக முறமைகள் இதைத்தான் செய்கின்றன. ஆனால் ஓவியங்கள் என்ற இந்த ஊடகத்தின் மூலம் நாம் பெற்ற அடவுகள் ஒப்பீட்டளவில் அதிகமானவை வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு ஊடகமாகவே நான் ஓவியங்களைப் பார்க்கிறேன். அதனால் அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எம் வலிகளை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய கடப்பு எமக்கு இருக்கிறது.
" சேர் அடுத்து வரும் நாட்களும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? கவனமாக இருங்கள். நான் இப்போது பணி காரணமாக விடைபெறுகிறேன். தொடர்ந்தும் தொடர்பில் இருப்போம். நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.
இ,கவிமகன்.
08.12.2015
நீண்ட உரையாடல்களில் இருந்து முக்கியமானவற்றை எடுத்து பதிவாக்கியுள்ளேன்...... 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக