siruppiddy

20/5/14

தமிழின அழிப்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.
தமிழீழத் தேசிய துக்க நாளான மே18ல் வெளிவந்துள்ள இப்பட்டியலில், இலங்கையின் தமிழின அழிப்பாளர்களின் 12 பேருடைய விபரங்கள் முதற்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பகமான ஆதரங்களுடனும், அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாகவும் குறித்த நபர்களுடைய குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தீவினை மையப்படுத்திய சமகால அரசியல்தளத்தில்,இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரகா குமாரதுங்காவின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில், அவருடைய பெயரும் இப்பட்டியலில் வெளிவந்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐ.நாவின் பிரதிநிதி பாலித கோகணவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, ஜப்பான், பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்களாக உள்ளவர்களும் இப்பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ளமை இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடியினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் தமிழின அழிப்பாளர்களது பெயர்ப்பட்டியல் தொடர்ந்தும் உரிய ஆவணமாக வெளியிடப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதோடு, பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மீது அனைத்துலக அளவிலான பயணத்தடை, சொத்துமுடக்கம் உட்பட அனைத்துலக குற்றவியில் நீதிமன்றங்களில் இவர்களை நிறுத்துவதற்கான செயல்முனைப்புக் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவந்துள்ள இப்பட்டியல் உரியமுறையில் அனைத்துலக நாடுகளதும், அனைத்துலக அமைப்புக்களுக்கும் கவனத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கொண்டு செல்லப்படவுள்ளது.
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக