siruppiddy

26/5/14

தெளிவான அரசியல் தீர்வு தொடர்பிலான கொள்கை யாரிடமும் இல்லை

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது குறித்து தெளிவான கொள்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட்ட எவரிடமும் கிடையாது என சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் அனைத்து தரப்பினருக்கும் சந்தேகம் நிலவி வரகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உளிட்ட அனைவருக்குமே அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தெளிவான சிந்தனை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வடக்கு கிழக்கில் மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை சமஷ்டி ஆட்சி முறைமை வரையிலான ஓர் வலுவான அதிகாரப் பகிர்வு பொறிமுறைமையாக மாற்ற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டமொன்றை கோரி வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அமைதியை பேணவில்லை எனவும் மக்களுக்கு தொடர்ச்சியாக சேவைகளை ஆற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கிழக்கைச் சேர்ந்த அதிலும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களே அதிகளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும், புலனாய்வுப் பிரிவினர் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக