siruppiddy

2/2/15

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு!

 கீர்த்தி தென்னக்கோன் தமது பாதுகாப்பிற்காக வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஊடகவியலாளர்கள், அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் மீளவும் நாட்டிற்கு வரவழைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். இது அரசின் பாரிய பொறுப்பாகும் என இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மிகவும் அராஜக போக்கின் காரணமாக தனது பாதுகாப்பை காரணம் காட்டி ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அரசியல் 
ஆர்வலர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிற்பாடு புதிய அரசாங்கம் வெளிநாடுகளில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசியல் ஆர்வலர்களுக்கு மீண்டும் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தது. இது மிகவும் வரவேற்புக்குரிய செயற்பாடாகும். தனது பாதுகாப்பிற்கு வெளிநாடுகளுக்கு சென்றிருந்தவர்கள் மீளவும் நாட்டிற்கு வர வேண்டும் என்று ஆர்வத்துடன் உள்ளனர்.

மேற்படி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்கள் சட்டத்திற்கு முரணான ஒழுங்கு முறைப்படியே நாட்டிலிருந்து தப்பி சென்றுள்ளனர். இதற்கமைய விமான நிலையம் துறைமுகங்களினூடாக செல்லாமல் படகுகளில் சென்றவர்களும் இதில் அடங்குகின்றனர். இந்நிலையில் குறித்த நபர்கள் மீளவும் நாட்டிற்கு வருகைதர வேண்டுமாயின் செல்லுபடியான கடவுச் சீட்டு அவசியம் இத்தகைய சிரமத்திற்கு உள்ளான அரசியல் ஆர்வலர்கள் இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்கின்றனர். சட்டத்திற்கு முரணாக சென்றவர்கள் என்ற குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள் நாட்டிற்கு வருகை தந்த பிற்பாடு குறித்த குற்றச்சாட்டினை மையப்படுத்தி பொலிஸாரினால் கைது செய்யப்படாத சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

எனவே இது குறித்து குடியகல்வு குடிவரவு சட்டம் தொடர்பில் குறித்த நபர்களுக்கு அரசினால் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தவர்களில் தெற்கு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவது மாத்திரமன்றி வடக்கு கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உள்ளனர். இராணுவ வீரர்கள் பொலிஸார் மாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணி தமிழ் கட்சி சொயற்பாட்டாளர்கள் வடக்கின் சிவில் அமைப்பினர் பலர் உள்ளடங்குகின்றனர்.
எனவே குறித்த நபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் மேலும் இலங்கை பிரஜையான ஜெயபாலன் போன்று குறித்த நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்களும் உள்ளனர். அவ்வாறாயின் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக குறித்த நபர்கள் மீளவும் இலங்கை வர வேண்டுமாயின் இலங்கை பிரஜாவுரிமையோ அல்லது இரட்டை பிரஜாவுரிமையோ வழங்க வேண்டும். எனவே இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என கோரினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக