siruppiddy

30/7/15

இணுவை சக்திதாசன் வண்ணத்தி பூச்சி

உன்னைப் போலத்தான் 
அவளும் அழகில் 
வண்ண வண்ண நிறம் காட்டினாள் 
எண்ணங்கள்
ஆயிரம் தினமும்
அவளைச்சுற்றியே பறக்க விட்டேன்

உந்தன் அழகு பெற நீயோ
மூன்றவதாரம் எடுத்தாய்
முப்பது நாளுக்குள்
வாழ்வையே முடிக்கிறாய்
எந்தக் கவலையுமின்றி
எப்படித் தான் சுறு சுறுப்பாய் பறக்கிறாயோ ?

பூக்களிலே தேனை யுண்டு
எக்களிப்பாய் மரகந்தம் பரப்புகிறாய்
வண்ணக் கலர் தந்து
மனதில் குளிர்மையை ஊட்டுறாய்
எத்தனை யாயிரம் வகைகள் உன்னிடம்
எத்தனையாயிரம் வண்ணங்கள் உன்னிடம்
மாத்தி மாத்தியே பறப்பாயாமே நிறம்

உன்னைப் போல் தான் அவளும்
எந்த கவலையுமின்றி எக்களிப்பாய்
என்னையே வட்டமிட்டாள்
மூன்று மாதம் கூட
தாக்குப்பிடிக்க முடியாத் தேவதையாய் ….
பறந்தே விட்டாள் கண்டம் விட்டு

கண்டம் விட்டு கண்டம் பாயும் உத்தியை
நீ தான் காட்டிக் கொடுத்தாயா?
தண்டச் சோறாய் நான் நிரந்தர
தண்டனை பெறுகிறேன்

நிறம் மாறும் உத்தியை
நியமென்று நம்ப மறுக்குது புத்தி

ஆக்கம்கவிஞர் இணுவையூர்
சக்திதாசன் டென்மார்க்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக