siruppiddy

2/11/15

மைத்திரிக்கு கோட்டா அறிவுரை ஜெனிவா சூழ்ச்சியில் சிக்கவேண்டாம்?

சர்வதேச சமூகத்தால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட ஜெனிவாத் தீர்மான சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவுரை வழங்கியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனிவாத் தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதிவான்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியை சந்தித்து கோட்டா பேச்சு நடத்தியுள்ளார். மெக்ஸ்வல் பரணகம அறிக்கை தொடர்பில் கோட்டா இதன்போது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, யுத்தக் குற்றச்செயல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்டிக்கத்தக்கது என்றும் கோட்டாபய இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளால் முப்படையினர் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும், இது பாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் எனவும் ஜனாதிபதிக்கு கோட்டாபய விளக்கியுள்ளார்.
இந்த நிலைமையை மாற்றியமைக்க ஜனாதிபதி எடுத்துக்கொள்ளும் சிரத்தை பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாவுடன் சந்திப்பு நடத்தப்பட்ட தினத்தில், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பெருந்தெருக்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி, திறைசேரியின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.
எவ்வாறான பேச்சு நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அரச அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது தமக்கு அது குறித்து அறிவிக்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரியுள்ளார் எனவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக